Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 7 அறிகுறிகள் தெரிஞ்சா.. அசால்ட்டா இருக்காதீங்க.. அது வயிற்று புற்றுநோயின் ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறி..
Stomach Cancer Awareness Month 2025: மனிதர்களை தாக்கும் நோய்களிலேயே மிகவும் கொடிய நோய் என்றால், அது புற்றுநோய் தான். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் வயிற்றில், அதாவது இரைப்பையில் உள்ள செல்களில் வளரக்கூடிய அசாதாரண கட்டி தான் வயிற்றுப் புற்றுநோய்.
இந்த வயிற்று புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வயிற்று புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில் வயிற்று புற்றுநோய் குறித்த பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும்.

நமது உடலில் இரைப்பையானது வயிற்றின் மேல் இடது பக்கத்தில் உணவை ஜீரணிக்கும் ஒரு உறுப்பு ஆகும். நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் இந்த இரைப்பையில் தான் ஜீரணிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் செல்கள் வளரத் தொடங்கினால், அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
சொல்லப்போனால் இது அறிகுறிகளை வெளிக்காட்டினாலும், அதை பலரும் புறக்கணித்துவிடுவோம். ஏனெனில் இதன் அறிகுறிகள் தினசரி சந்திக்கும் பிரச்சனைகளைப் போன்றே இருக்கும். இதனால் இந்த வகை புற்றுநோய் பெரும்பாலும் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது.
இப்படி தாமதமாக கண்டுபிடிக்கப்படுவதால், சிகிச்சை அளிப்பது கடினமாக இருக்கிறது. இருப்பினும் சமீபத்திய ஆய்வுகள், சில அறிகுறிகளை அங்கீகரிப்பது கடுமையான விளைவுகளைத் தடுக்க உதவும் என்பதைக் காட்டுகின்றன. அப்படிப்பட்ட சில முக்கியமான வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. தொடர் வயிற்று வலி
சமீப நாட்களாக வயிற்று பகுதியில் தொடர்ச்சியாக வயிற்று வலியை சந்திக்கிறீர்களா? இப்படி திடீரென்று காரணமின்றி வயிற்று வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. மலத்தில் மாற்றங்கள்
நீங்கள் கழிக்கும் மலத்தின் அளவு, நிலைத்தன்மை போன்றவற்றில் மாற்றங்களுங்களுடன், தொடர்ச்சியான வயிற்று அசௌகரியத்தை சந்தித்தால், வயிற்று புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் மலத்தில் இரத்தக்கசிவை கண்டால், அது ஆபத்தான அறிகுறியாகும். இந்நிலையில் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
3. எடை இழப்பு
காரணமில்லாமல் உடல் எடை குறைவதை காண்கிறீர்களா? முக்கியமாக எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் உடல் எடை வேகமாக குறைகிறது என்றால், வயிற்று புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே மருத்துவரிடம் தெரிவியுங்கள்.
4. பசியின்மை
சில நாட்களாக உங்களுக்கு பசி எதுவும் எடுப்பதில்லையா? சாப்பிடவே பிடிக்கவில்லையா? வயிறு எப்போதும் நிரம்பியிருப்பது போன்று உணர்கிறீர்களா? அப்படியானால் வயிற்றில் புற்றுநோய் கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பாருங்கள்.
5. வயிற்று வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்
வயிற்றில் புற்றுநோய் கட்டிகள் இருந்தால், அது வயிற்றுப் பகுதி வீங்கி இருக்கும் அல்லது குடலியக்கம் மோசமாகி வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலை அடிக்கடி சந்திக்க நேரிடும். இந்த அறிகுறிகளை தொடர்ந்து சந்தித்தால், மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
6. தொடர் நெஞ்செரிச்சல்
அஜீரண கோளாறு, தொடர்ச்சியான நெஞ்செரிச்சல் போன்றவற்றை சந்தித்தால், அது வயிற்று புற்றுநோயை குறிக்கலாம். முக்கியமாக நெஞ்செரிச்சல் தொடர்ந்து பல வாரங்களாக சந்தித்தால், வயிற்று புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது.
7. விழுங்குவதில் சிரமம்
வயிற்று புற்றுநோயானது உணவுக்குழாய் வரை பரவியிருந்தால், எதையும் விழுங்குவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். அதுவும் திட அல்லது திரவ உணவுகள் என எவற்றை விழுங்கினாலும், அது இருமல் அல்லது மூச்சுத்திணறலை உண்டாக்கும். சில சமயங்களில் உட்கொண்ட பின் மீண்டும் மேலே வருவது போன்று உணரக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications