Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
சர்க்கரை நோயாளிகள் எந்த ஸ்நாக்ஸை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? பட்டியலிடும் டாக்டர்!
Snacks For Diabetes: உலகளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணம் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை முழுமையாக குணப்படுத்த முடியாது.
ஆனால் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை செய்வதன் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். முக்கியமாக சர்க்கரை நோய் வந்தவர்கள் உண்ணும் உணவுகளில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அதுவும் ஸ்நாக்ஸை தேர்ந்தெடுத்து உண்ணும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் எந்த மாதிரியான ஸ்நாக்ஸை சாப்பிடக்கூடாது மற்றும் எந்த மாதிரியான ஸ்நாக்ஸ்களை சாப்பிடலாம் என்று சிவகங்கை பொதுநல மருத்துவர் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"ஸ்நாக்ஸுனு சொல்லி நீங்க என்ன சாப்புடுறீங்க சொல்லவா....
- பிஸ்கட்டுக்கள/ ரஸ்க்குகள ப்ளாஸ்டிக் டப்பால போட்டு காத்து போகாம அடைச்சு வச்சு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் டீயுடன் ரெண்டு மூனு சாப்புட்றீங்க( பிஸ்கட்ல சுகர் இருக்கு). அதுலயும் சுகர் குறைவா இருக்குற பிஸ்கட்டுகள்னு நீங்களே நினைச்சுக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்குற அனைத்து பிஸ்கட்டுகளிலும் சீனி / சர்க்கரை கலந்து தான் செய்யப்படுது.
- சில பேர் ஸ்நாக்ஸா வாழைப்பழம் சாப்புட்றீங்க ( வாழைப்பழத்துல சுகர் இருக்கு)
- இனிப்பான பழங்கள் அனைத்துமே சுகர் நோயர்களுக்குக் கெடுதி.
-இன்னும் சில பேர் காலை வாக்கிங் போய்விட்டு வரும் போது வடை பஜ்ஜி
- இன்னும் சில பேர் இனிப்போட டீ காபி ...
-இன்னும் சில பேர் முறுக்கு / கடலை மிட்டாய் / மிக்சர்
- இன்னும் பல பேர் - பால்ல சத்து பொடிகளைக் கலந்து குடிக்கிறீங்க...
மேற்சொன்ன எல்லாத்தலையும் சுகர் அதிகமா ஏறும் மக்களே புரிஞ்சுக்கோங்க.... உங்களுக்கு என்ன வேணும்? ஸ்நாக்ஸ் தான வேணும்..
- ஒரு கிலோ எழுபது ரூபாய்க்கு பல விட்டமின்கள் நிரம்பிய கொய்யாக்காய் இருக்கு (அதுலயும் கொய்யா பழம் சுகர அதிகமான அளவுல ஏத்தும்)
- சீசனுக்கு சீசன் கிடைக்குற வெள்ளரிக்காய் இருக்கு
- விட்டமின் சி நிரம்பிய நெல்லிக்காய் இருக்கு
- நல்ல கொழுப்பும் குறைவான மாவுச்சத்தும் கொண்ட தேங்காய் இருக்கு
- நல்ல புரதம் நல்ல கொழுப்பு குறைவான மாவுச் சத்தோட சீப் & பெஸ்ட்டா நிலக்கடலை இருக்கு ( தினமும் 50 கிராம்) ( நிலக்கடலை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல்/வயிற்றுக் குத்தல்/ உப்புசம் ஏற்படுபவர்கள் தவிர்ப்பது நல்லது)
- முளை கட்டிய பயறு இருக்கு
- புரதச்சத்து நல்ல கொழுப்புச் சத்து மிக்க கொஞ்சம் காஸ்ட்லியான பாதாம் இருக்கு (20 கிராம் வரை), வால்நட் இருக்கு (20 கிராம் வரை), பிஸ்தா இருக்கு (20 கிராம் வரை)
- இரண்டு முட்டைகளை ஆம்லெட்டாக்கி / பொடி மாஸ் செய்து அல்லது அவித்த முட்டைகளாகவே உண்ணலாம். அதுவும் குட்டி ஸ்நாக்ஸ் தான். ஆனால் புரதச்சத்து ஊட்டச்சத்து நிரம்பிய ஸ்நாக்ஸ். மாவுச்சத்து கிட்டத்தட்ட ஜீரோ.
- மாலை வேளை ஸ்நாக்ஸாக 50 கிராம் பனீருடன்(Paneer - milk product) சில காய்கறிகளையும், கொஞ்சம் மசாலா+ உப்பு போட்டு லேசான சூட்டில் சமைத்து உண்ணலாம்.
- 100 கிராம் காய்கறி போட்டு வெஜிடபுள் சூப் செய்து அதில் 20 கிராம் வெண்ணெயை சூட்டோடு சூடாகக் கலந்து பருகலாம்.
- 200 மில்லி ஆட்டுக் கால் சூப் / நெஞ்செலும்பு சூப் வாரம் இருமுறை மாலை நேரங்களில் பருகலாம்.
- டீ காபி பருக வேண்டும் என்றால் அதில் இனிப்பு எந்த ரூபத்திலும் சேர்க்காமல் தினசரி 100 மில்லி × 2 என்ற அளவில் இருமுறை மட்டும் பருகவும்.
- கட்டுப்படாத சுகர் இருப்பவர்கள் பால் டீயை கைவிட்டு ப்ளாக் டீ அல்லது லெமன் டீ வித் அவுட் சுகருக்கு மாறவும். இதனால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
இனிமே ஸ்நாக்ஸ்னா மேற்கூறியவற்றை முயற்சி செய்யுங்கள். சுகர் ஏறாது மற்றும் வயிறும் நிரம்பும்" என்று டாக்டர் தெரிவித்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications