Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
தினமும் 5 மணிநேரம் தான் தூங்குவீங்களா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனைலாம் வரப்போகுது.. ஜாக்கிரதை..
Sleep Disorder In Tamil: ஒருவரது ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஒருவர் நல்ல தூக்கத்தை மேற்கொண்டால் தான் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஏனெனில் தூக்கத்தை மேற்கொள்ளும் போது, உடலானது நினைவுகளை மீட்டெடுப்பது, சரிசெய்வது மற்றும் ஒருங்கிணைப்பது போன்ற செயல்முறைகளில் ஈடுபடுகிறது.
மேலும் தூக்கமானது இரண்டு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் NREM மற்றும் REM ஆகியவை அடங்கும். இதில் NERM உடல் மீட்சியை ஊக்குவிக்கிறது, தசைகளை ஓய்வெடுக்கவும், சரிசெய்யவும் வைக்கிறது. அதே வேளையில் REM அறிவாற்றல் செயல்முறைகள், நினைவாற்றல் ஒருங்கிணைப்பு மற்றும் கனவுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

இவ்விரண்டு நிலை தூக்கத்தையும் ஒருவர் தினமும் பெற்றாமல் மட்டுமே உடலால் ஆரோக்கியமாக, சிறப்பாக செயல்பட முடியும். இவற்றில் ஒன்றை பெறாமல் போனாலும், அதன் விளைவாக எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே உடல், மனம் ஆகிய இரண்டின் ஆரோக்கியத்திற்கு முதலில் ஒருவர் போதுமான அளவு தூக்கத்தை தினமும் பெறுவது முக்கியம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 7-8 மணிநேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது. இந்த அளவு தூக்கத்தை கட்டாயம் ஒருவர் பெற வேண்டும். இப்போது தினமும் போதுமான தூக்கத்தைப் பெறாமல் இருந்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.
1. சோர்வு மற்றும் எரிச்சல்
உடலுக்கு போதுமான ஓய்வானது தூக்கத்தின் மூலம் தான் கிடைக்கிறது. ஆனால் அந்த தூக்கத்தை சரியாக மேற்கொள்ளாமல் இருந்தால், அதன் விளைவாக மிகுந்த உடல் சோர்வை உணர நேரிடும். அதோடு சிறு விஷயங்களுக்கும் எரிச்சலடையக்கூடும்.
2. கவனம் செலுத்த முடியாமை
ஒருவர் தினமும் குறைவான அளவில் தூக்கத்தை மேற்கொண்டால், அதன் விளைவாக எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை செலுத்த முடியாமல் போகும். மூளை சிறப்பாக செயல்பட தூக்கம் தேவை. தூக்கம் குறைவாக இருக்கும் போது, உடல் சோர்வடைந்து, மூளை திறம்பட செயல்படாது. இதனால் வேலையில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும்.
3. மனம் அலைபாயும்
சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், மூளையில் உள்ள மனநிலையை கட்டுப்படுத்தும் ரசாயனம் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக மனதை ஒருமுகப்படுத்த முடியாமல், மனமானது எதிலும் நாட்டம் இல்லாமல் அலைபாயும்.
4. நோயெதிர்ப்பு சக்தி குறையும்
ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டுமானால் தூக்கம் இன்றியமையாதது. ஆனால் அந்த தூக்கம் போதுமான அளவு கிடைக்காமல் போனால், உடலானது கிருமிகளை எதிர்த்துப் போராடும் செல்களை உற்பத்தி செய்யாமல் போகும். இதன் விளைவாக அடிக்கடி ஏதேனும் ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
5. உடல் எடை அதிகரிக்கும்
ஆம், சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அது ஒருவரது உடல் எடையை பாதிக்கும். எப்படியெனில் தூக்கம் குறைவாக இருக்கும் போது, உடல் மிகுந்த சோர்வாக இருக்கும். இதனால் சர்க்கரை, கொழுப்பு ஆகியவை நிறைந்த உணவுகளின் மீதான நாட்டம் அதிகரித்து, பசியுணர்வு அதிகரிக்கும். அதிக பசியுணர்வு நிறைய உணவுகளை உண்ணத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும்.
6. முடிவுகளை எடுக்க முடியாது
ஒருவரது மூளை சிறப்பாக செயல்பட்டால் தான், எந்த ஒரு விஷயத்தையும் நன்கு அலசி ஆராய்ந்து, ஒரு நல்ல முடிவை எடுக்க முடியும். ஆனால் தூக்கம் குறையும் போது, பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் போவதோடு, அப்பிரச்சனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
7. விபத்துக்கள் ஏற்படலாம்
போதுமான தூக்கம் இல்லாமல் ஒருவர் இருக்கும் போது, வாகனங்களை ஓட்டுவது அல்லது இயந்திரங்களை பயன்படுத்துவது போன்றவற்றை செய்தால், அதன் விளைவாக விபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
8. நினைவாற்றல் சிக்கல்
நினைவாற்றல் சிறப்பாக இருக்க வேண்டுமானால் போதுமான தூக்கம் அவசியம். இந்த தூக்கம் இல்லாமல் போனால், அதன் விளைவாக சிறு சிறு விஷயங்களையும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாகிவிடும்.
9. இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும்
ஒருவர் நீண்ட நாட்கள் போதுமான தூக்கத்தைப் பெறாமல் இருந்தால், இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கபட வேண்டியிருக்கும். காலப்போக்கில் இந்த உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றில் அபாயத்தை அதிகரிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications