Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நைட் தூக்கமே வரமாட்டீங்குதா? இந்த பாலை 1 டம்ளர் குடிங்க.. படுத்ததும் தூங்கிடுவீங்க..
Sleep Deprivation: ஒருவரது உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், இரவு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்றால் தான், உடலும், மனமும் சீராக செயல்படும். ஆனால் தற்போது நிறைய பேர் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இப்படி ஒருவர் தூக்கத்தைத் தொலைப்பதற்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது.
தற்போதைய அவசர உலகில் மன அழுத்தத்தால் ஏராளமானோர், அவர்களை அறியாமலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களால் தான் இரவு நேரத்தில் தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. இப்படியே சரியான தூக்கத்தைப் பெறாமல் போனால், அதன் விளைவாக உடலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக சரியான தூக்கத்தைப் பெறாவிட்டால், அதன் விளைவாக முதலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். அதைத் தொடர்ந்து பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.

நீங்கள் இப்படி இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இருந்தால், உடனே அந்த பிரச்சனையை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். எனவே உங்களுக்காக தூக்க பிரச்சனையை சரிசெய்ய உதவும் ஒரு அற்புதமான பால் ரெசிபி குறித்து கொடுத்துள்ளோம். இந்த பாலானது அஸ்வகந்தா, ஜாதிக்காய், மஞ்சள் போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இப்பொருட்கள் அனைத்தும் உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் அடைய செய்வதோடு மட்டுமின்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. இப்போது இந்த பாலை எப்படி தயாரிப்பது என்பதையும், இந்த பால் எப்படி நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது என்பதையும் காண்போம்.
தேவையான பொருட்கள்:
* பால் - 1 டம்ளர்
* அஸ்வகந்தா பவுடர் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஜாதிக்காய் பவுடர் - 1 சிட்டிகை
பால்
பாலில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது நல்ல தூக்கத்தைத் தூண்ட உதவுகிறது. மேலும் பாலில் புரோட்டீன், வைட்டமின்கள், கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் உள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
அஸ்வகந்தா
அஸ்வகந்தா ஒரு மருத்துவ பண்புகள் நிறைந்த மூலிகை என்பதை அனவரும் அறிவோம். இது ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக அஸ்வகந்தா மன அழுத்தம், பதட்ட உணர்வு போன்றவற்றை எதிர்த்துப் போராட பெரிதும் உதவுகிறது. மேலும் இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலின் வலிமையையும் அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சள்
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. மேலும் மஞ்சளில் கார்மேட்டிவ் விளைவுகளும் இருப்பதால், இது செரிமானம் மற்றும் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஜாதிக்காய்
ஜாதிக்காய் ஒரு அடாப்டோஜென் ஆகும், இது நம் உடலுக்கு ஒரு மயக்க மருந்தாக செயல்படுகிறது. மேலும் இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடலுக்கு நல்ல ஓய்வளித்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.
தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி குறைவான தீயில் வைத்து சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் அஸ்வகந்தா பவுடர், மஞ்சள் தூள், ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைத்து, 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications