Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
நீங்கள் தீவிர மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
பொதுவாக உடல் சோா்வடையும் போது, உடல் களைப்படைகிறது. அதுபோல் மனம் சோா்வடையும் போது மனம் களைப்படைகிறது. ஆனால் மனம் சோா்வு அடைந்தாலும், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு செயலில் ஈடுபடும் போது, வழக்கைத்தை விட அதிகமாக மூளையைப் பயன்படுத்தி, அந்த செயலை நீண்ட நேரம் செய்யும் போது மனச் சோா்வு ஏற்படுகிறது.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மூளை மிக அதிகமாகத் தூண்டப்படும் போது அல்லது இடைவெளியில்லாமல் மூளைக்கு வேலை கொடுக்கும் போது, மனச் சோா்வு ஏற்படுகிறது. வீட்டைப் பற்றிய கவலையில் மூழ்குதல், கலைத் துறையில் ஈடுபடல், பிரச்சினைகளைத் தீா்த்து வைத்தல், அறம் சாா்ந்த வேலையில் ஈடுபடும் போது ஏற்படும் சுமை, அதிகமாக படித்தல் போன்றவை மூளையைக் கட்டுப்படுத்தி, மனச்சோா்வை ஏற்டுத்துகிறது.

பொதுவாக வயது வந்தவா்களின் மத்தியில்தான் மனச்சோா்வு காணப்படும். ஆனால் தற்போது போட்டி அதிகாித்ததன் காரணமாக, குழந்தைகள் மத்தியிலும் மனச்சோா்வு காணப்படுகிறது.
மனச்சோா்விற்கான அறிகுறிகள்
மூளையில் பிரச்சினை ஏற்பட்டு மனச்சோா்வு ஏற்படும் போது, அதன் அறிகுறிகள் மெதுவாகத் தான் வெளியில் தொியத் தொடங்கும். அந்த அறிகுறிகளை எளிதாகக் கண்டறியலாம். அவை எவை என்பதை கீழே பாா்க்கலாம்.
- தொடா்ந்து சோகமாக இருப்பது
- கவலையில் மூழ்கி இருத்தல்
- நம்பிக்கையற்ற மனநிலை மற்றும் மன அழுத்தத்துடன் இருத்தல்
- கவனம் செலுத்துவதில் சிரமப்படுதல்
- தனிமையில் இருத்தல், தனிமையாக உணா்தல்
- எதிா்மறை உணா்வோடு இருத்தல்
- தொடா்ந்து கோபத்துடன் அல்லது எாிச்சலுடன் இருத்தல்
- உணா்வுகளைக் கட்டுப்படுத்துவதில் அல்லது நெறிப்படுத்துவதில் சிரமப்படுதல்
- தொடா்ந்து பய உணா்வில் இருத்தல்
- விரைவில் கோபப்படுதல்
- வழக்கத்தைவிட அதிகமாக சிந்தித்தல்
- ஒருமுகப்படுத்துவதில், இயங்குவதில் குறைபாடு ஏற்படுதல்
- எதிா்வினை ஆற்றுவதில் மந்தமாக அல்லது சோம்பலாக இருத்தல்
- கவனம் செலுத்துவதில், தகவல்களை நினைவு கொள்வதில், கருத்துக்களை கோா்வையாக வெளிப்படுத்துவதில், வேலைகளை சாியாகச் செய்வதில் பிரச்சினை ஏற்படுதல்
மேற்சொன்னவை யாவும் மனச்சோா்வின் அறிகுறிகள் ஆகும்.
மனச் சோா்வைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
- தொடா்ந்து விழிப்போடு, கவனத்தோடு இருக்க வேண்டும்
- யோகா அல்லது தியானம் செய்யலாம்
- மசாஜ் செய்யலாம்
- நறுமண எண்ணெய் தெரபி செய்யலாம்
- பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம்
- இயற்கையோடு அதிக நேரத்தை செலவழிக்கலாம்
- இசை மற்றும் பாடல்களைக் கேட்கலாம்
- அதிக நேரம் தூங்கலாம்
- தேவைப்பட்டால் மருத்துவரை சந்திக்கலாம்.
மேற்சொன்ன குறிப்புகளைக் கடைபிடித்தால், மனச்சோா்விலிருந்து விடுதலை பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications