Latest Updates
-
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
இந்த அறிகுறிகள் மட்டும் உங்க முகத்துல இருந்தா? மோசமான பாலியல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாமாம்!
Symptoms Of STDs In Tamil: பாலியல் ரீதியாக பரவும் நோய்களைக் கையாள்வது மிகவும் கடினம். ஆண், பெண் என இருவருக்கும் இந்த தொற்று ஏற்படலாம். பாதுகாப்பற்ற உடலுறவு பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய் ஏற்படுவதற்கு முதன்மை காரணம்.
பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் (STDs) பாலியல் தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்தொற்றுக்கள் ஆகும். அவை பொதுவாக யோனி, வாய்வழி அல்லது குத உடலுறவின் போது பரவுகின்றன. அதனால், ஒவ்வொருவரும் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவதை கருத்தில் கொள்ளுங்கள்.

பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்கள் இருப்பது பிற்காலத்தில் கண்டறியப்பட்டால், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படாமல் இருக்க சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். நோய் மீள முடியாத நிலைக்கு செல்வதைத் தடுக்க ஆரம்ப நிலையிலேயே இவற்றுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம்.
பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்கள் பல் வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த தொற்றுநோய்களின் பல அறிகுறிகள் உடலின் பல பகுதிகளில் காணப்படலாம். அவற்றில் தனிநபரின் முகத்தில் காணப்படும் சில அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
வாயில் புண்கள்
வாயில் வலியுடன் கூடிய பெரிய புண்கள் ஏற்படுவது சிபிலிஸின் அறிகுறியாகும். சில சமயங்களில் புண்கள் நாக்கிலும் வாயின் உட்புறத்திலும் காணப்படலாம். இதனால், நீங்கள் உணவு உண்பதையோ அல்லது சரியாகப் பேசுவதையோ கடினமாக்குகிறது.
பாலியல் ரீதியாக பரவும் ஹெர்பெஸ் நோயிலும் புண்கள் அறிகுறிகளாக காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இது குளிர் புண்கள் போல் தெரியும். உங்கள் வாயில் புண் இருந்தால், சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உடனே மருத்துவ பரிசோதனை செய்வதுகொள்வது நல்லது.
இளஞ்சிவப்பு கண்கள்
இளஞ்சிவப்பு கண்கள் கிளமிடியாவின் முக்கியமான அறிகுறி என்பது உங்களுக்குத் தெரியுமா? இது பெரும்பாலும் வாய்வழி உடலுறவு மூலம் பரவும் பாக்டீரியா தொற்று ஆகும். இது ஒரு பொதுவான கண் நோய்த்தொற்றாகத் தொடங்கி, பிறப்புறுப்புகள் மற்றும் பிறப்புறுப்பு சுரப்புகளுடன் தொடர்பு கொண்ட பிறகு உங்கள் கண்களைத் தொட்ட பிறகு தொடங்குகிறது. இந்த நிலைக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
தோலில் சொறி
வேறு எந்த அறிகுறியும் இல்லாமல் தோலில் திடீரென சிவப்பு தடிப்புகள் தோன்றுவதும் இந்த நோய்த்தொற்றின் அறிகுறியாகும். குறிப்பாக நீங்கள் பலருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தால், நீங்கள் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோயை உண்டாக்கும் நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதற்கான முக்கிய அறிகுறியாக தோல் சொறி உள்ளது.
மேலும், இது சிபிலிஸின் முக்கியமான அறிகுறியாகவும் உள்ளது. இந்த சிவப்பு தடிப்புகள் அல்லது தோல் சொறி தோலின் ஒரு சிறிய பகுதியில் தோன்றி, பின்னர் உடல் முழுவதும் பரவுகிறது. இந்த நிலை உங்களுக்கு இருந்தால், உடனே மருத்துவரை நாடுங்கள்.
முடி உதிர்தல்
இந்த அறிகுறி உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றினாலும், முடி உதிர்வது பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோயின் ஓர் அறிகுறியாகும். சிபிலிஸ் நோய்தொற்று ஏற்பட்டால், திடீரென்று மற்றும் அதிகப்படியாக முடி உதிர்தல் ஏற்படும். மேலும், இது நோய் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நபர்களில் அதிகம் காணப்படுகிறது.
பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்களின் பிற அறிகுறிகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளைத் தவிர, மற்ற அறிகுறிகள் லேசானதாக உங்களுக்கு தோன்றலாம். எனவே, அவற்றை நீங்கள் எளிதில் புறக்கணிக்கலாம், வலிமிகுந்த சிறுநீர் கழித்தல், வயிற்று வலி, அசாதாரண யோனி வெளியேற்றம், ஆண்குறியிலிருந்து வெளியேற்றம், வலிமிகுந்த உடலுறவு, மாதவிடாய்க்கு இடையில் இரத்தப்போக்கு மற்றும் ஆண்குறியில் வலி போன்ற பிற அறிகுறிகள் இருந்தாலும் உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இறுதிக்குறிப்பு
இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் பாலியல் தொற்றுநோய்களுக்கு மட்டும் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. எனவே, இந்த அறிகுறிகளைக் கொண்ட ஒருவரை நீங்கள் பார்க்கும் போதெல்லாம் முடிவுகளை நீங்களே எடுக்க வேண்டாம். மருத்துவரை அணுகுமாறு அந்த நபருக்கு அறிவுறுத்துங்கள்.
பாலியல் தொற்றுக்களின் அறிகுறிகள் உள்ளவர்களை அல்லது இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்காதீர்கள். இந்த நபர்களை தவறாமல் மருத்துவ உதவியைப் பெற ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு மனரீதியாக ஆதரவளிக்கவும், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும் அவர்களுக்கு உதவ வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

