Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
ஆரோக்கியமான நார்ச்சத்தை அதிகமாக சாப்பிட்டால் உங்கள் உடலில் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா?
நார்ச்சத்துக்கள் மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். இந்த நார்ச்சத்துக்களை போதுமான அளவு நாம் உணவில் இருந்து பெற முடியும். ஆனால் இந்த நார்ச்சத்துக்களை மனித உடலால் முழுமையாக சீரணிக்கவோ அல்லது உறிஞ்சவோ முடியாது.
இந்த நார்ச்சத்துக்கள் செரிமான அமைப்பு வழியாக சென்று சீரணிக்கப்படுகிறது. இந்த நார்ச்சத்துக்கள் குடல் இயக்கங்களுக்கு ஏற்றது. ஆனால் அதே நேரத்தில் அதிகப்படியான நார்ச்சத்துக்களை எடுத்துக் கொள்வது நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே இந்த நார்ச்சத்துக்களை அதிகமாக எடுத்துக் கொள்வதால் எந்த மாதிரியான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
நார்ச்சத்துக்களின் வகைகள்
நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள்
இந்த வகை நார்ச்சத்துக்கள் தண்ணீரில் கரையைக் கூடியது. இந்த நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால், பக்க வாதம், இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்துக்கள் உங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வு , கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கொழுப்பின் அளவை கணிசமாக குறைக்கிறது. எனவே கரையக்கூடிய நார்ச்சத்துக்களை அதிகரிப்பது கொழுப்பின் அளவை கணிசமாக குறைக்க உதவுகிறது.
நீரில் கரையாத நார்ச்சத்துக்கள்
இந்த வகை நார்ச்சத்துக்கள் உடலில் இருக்கும் உணவுடன் செரிக்கப்படுவதில்லை. இந்த வகை நார்ச்சத்துக்கள் இரைப்பை குடல் வழியாக சென்று மலத்துடன் சேர்கிறது. இந்த நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. நீங்கள் உணவில் நார்ச்சத்துக்களை அதிகரிக்க விரும்பினால் முழு தானியங்கள், முழு பருப்பு வகைகள், பழங்கள், சாலடுகள், பச்சை காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் விதைகள் இவற்றை எடுத்துக் கொண்டு வரலாம்.
நார்ச்சத்துக்களின் பயன்கள்
- இதய நோய்கள், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
- நார்ச்சத்துக்கள் உடல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.
- டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
- குடல் இயக்க நோய்களை குறைக்க உதவுகிறது.
- இரத்த கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- நார்ச்சத்துக்கள் உங்கள் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நார்ச்சத்துக்களை அதிகமாக எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
- நார்ச்சத்துக்களை அதிகமாக எடுத்துக் கொள்வது சில எதிர்மறையான பக்க விளைவுகளை உண்டாக்க வல்லது.
- அதிகப்படியான நார்ச்சத்துக்களை எடுத்துக் கொள்வது சிலருக்கு வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப் பிடிப்புகள், செரிமான அசெளகரியம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
- நார்ச்சத்துக்களை அதிகமாக எடுத்துக் கொள்வதால் கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற சில தாதுக்கள் உறிஞ்சுவதில் சிக்கலை உண்டாக்குகிறது.
- இரைப்பை குழாய் புறணிக்குள் சேதத்தை ஏற்படுத்துதல், கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது.
- சில மருந்துகளின் செயல்திறனையும் இது பாதிக்கிறது.
- வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது.
- கிரோன் நோய் உள்ளவர்களுக்கு குடல் அடைப்பு
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவை குறைத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்குகிறது.
ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவையான நார்ச்சத்து அளவுகள்
நார்ச்சத்தின் அளவுகள் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே மாறுபடுகிறது. பெண்களுக்கு ஒரு நாளைக்கு 25-30 கிராம் போதுமானது, ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 35-40 கிராம் போதுமானது ஆகும்.
குழந்தைகள் : 1-3 வயது உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 19 கிராம், 4-8 வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 25 கிராம், 9-13 வயது குழந்தைகளுக்கு 26-31 கிராமும், 14-18 வயது குழந்தைகளுக்கு 26-38 கிராமும் பரிந்துரைக்கப்படுகிறது.
அதிகப்படியான நார்ச்சத்துக்களால் ஏற்படும் பக்க விளைவுகளை எப்படி குறைக்கலாம்?
- அதிகப்படியான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
- நார்ச்சத்து மாத்திரைகளை எடுப்பதை தவிருங்கள்
- இன்யூலின் மற்றும் சிக்கரி ரூட் சாறு போன்ற பொருட்களைக் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
- அதிகப்படியான நார்ச்சத்து உணவுகளை தவிருங்கள்.
- நடைபயிற்சி போன்ற சில லேசான உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
- மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
