Latest Updates
-
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்!
கோடைகாலத்தில் தெருவில் விற்கும் இந்த உணவுகளை நீங்க வாங்கி சாப்பிடவே கூடாதாம்...ஏன் தெரியுமா?
Street Food In Tamil: பெரும்பாலும் நாம் அனைவரும் தெருவோரம் விற்கும் உணவுகளை சாப்பிட அதிக விரும்புகிறோம். விலை மலிவாகவும் சுவையாகவும் இருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெரு உணவுகளை சாப்பிடுகிறார்கள். இந்த கோடை காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தெரு உணவுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
கோடைகாலத்தில் நாம் உட்கொள்ளும் உணவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் சமைக்கும் உணவுகளிலே நாம் கவனமாக இருக்க வேண்டும் எனில், தெருவோரம் விற்கும் உணவுகளை சாப்பிடலாமா? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். நம் இந்தியாவில் தெரு உணவுகள் மிகவும் பிரபலமானவை. பல்வேறு வகையான உணவுகள் விற்கப்படுகின்றன.

ஆனால், அவை எல்லாம் சுகாதாரமானதா என்றால், கேள்விக்குறிதான். பெரும்பாலான தெரு உணவுகள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை நாம் சாபபிடும்போது, வயிற்று பிரச்சனை உட்பட பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்கலாம். அதேநேரம் எல்லா உணவுகளும் ஆரோக்கியமற்றவை அல்ல.
பருவகாலத்திற்கு ஏற்ப நாம் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில், கோடைகாலத்தில் சில தெரு உணவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அவை என்னென்ன உணவுகள்? என்றும் ஏன் அதை தவிர்க்க வேண்டும் என்றும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
உணவு மூலம் நோய்கள் பரவுகின்றன
தெரு உணவுகள் பெரும்பாலும் திறந்த வெளியில் தயாரித்து வைக்கப்பட்டு விற்கப்படுகிறன. இதனால் அவை சுகாதாரமற்றவையாக இருக்கின்றன. சில இடங்களில் சுகாதாரமாக உணவுகள் தயாரிக்கப்பட்டாலும், வைத்து விற்கப்படும் இடம் சுகாதாரமற்றதாக இருக்கலாம்.
கோடைக்காலத்தில், ஈரப்பதமான சூழ்நிலைகள் உணவில் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியை அதிகரிக்கின்றன. அதனால், சிற்றுண்டிகள் மற்றும் உணவுகள் சுகாதாரமற்றதாக மாறுகிறது. இது தொற்றுநோய்கள் பரவும் ஆபத்தை அதிகரிக்கிறது. ஆதலால், சாலையோரம் விற்கப்படும் உணவுகள் நோய்களை பரவும் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது.
உணவு விரைவில் கெட்டுவிடும்
சமோசா, சாட், பக்கோடா-விற்கும் பெரும்பாலான ஸ்டால்களில் கோடைக் காலத்தில் கூட குளிர்சாதனப் பெட்டிகள் இருப்பதில்லை. இதன் விளைவாக, கடுமையான வெப்பத்தால் உணவு எளிதில் கெட்டுவிடும். இது சுவையற்றதாகவும், சாப்பிட பாதுகாப்பற்றதாகவும் இருக்கும். ஆதலால், சுகாதாரமற்று விரைவில் கெட்டுவிடும் இந்த உணவுகளை தெருவோர கடைகளில் சாப்பிடுவதை தவிருங்கள்.
காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்
கோடைகாலத்தில் காரமான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான மற்றும் உடலுக்கு நீரேற்றம் அளிக்கும் உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள தெரு உணவுகளில் பெரும்பாலானவை எண்ணெய், க்ரீஸ் மற்றும் காரமான உணவுகளாக இருக்கும். இந்த காரணிகள் பெரும்பாலும் வயிற்று பிரச்சினைகள், அஜீரணம், அமிலத்தன்மை போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
நீரிழப்புக்கு வழிவகுக்கும்
அதிக காரமான தெரு உணவுகள் கோடை காலத்தில் உங்கள் உடலை வெப்பமாக்குகிறது. இது நீரிழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் உடலில் நீர் சமநிலையின்மையை உருவாக்குகிறது. ஆதலால், குளிர்ச்சியான உணவுகளை கோடைகாலத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
கோடை காலத்தில் தெரு உணவுகளுக்கு 'நோ' சொல்வதற்கு பின்னால் உள்ள உண்மையான காரணத்தை இப்போது தெரிந்துகொண்டீர்கள். நீங்கள் வெளியே சாப்பிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. எளிதில் ஜீரணிக்கக்கூடிய இலகுவான உணவுகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
சமைத்து நீண்ட நேரம் வைத்திருக்கும் உணவுகளை சாப்பிடாமல் தவிருங்கள். உணவினால் பரவும் நோய்களைத் தவிர்க்க புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சமோசா அல்லது பக்கோடா சாப்பிடும்போது உங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால், இந்த சூழ்நிலையில், நீங்கள் அதிகமாக சாப்பிடக்கூடாது. அஜீரணத்தைத் தவிர்க்க நீங்கள் உண்ணும் உணவுகளின் பகுதியைக் கட்டுப்படுத்த வேண்டும்.
உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள்
நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், உங்களை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க நல்ல அளவு திரவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் காய்கறி மற்றும் பழச்சாறுகளையும் அருந்தலாம். குளிர்ச்சியாக இருப்பது குடல் பிரச்சினைகள் மற்றும் அஜீரணம் உள்ளிட்ட குடல் தொடர்பான பல பிரச்சனைகளைத் தவிர்க்கவும் உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

