நீங்க சரக்கு அடிச்சாலும் அடிக்கலனாலும்... 'இந்த' காரணங்களால் உங்க சிறுநீரகம் செயலிழக்குமாம்...ஜாக்கிரதை!

Kidney Failure In Tamil: நம் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளும் ஆரோக்கியமாக செயல்படுவது மிக முக்கியம். அதன் செயல்பாடுகள் சரியாக இருக்கும்போது, நீங்கள் நலமா இருக்கலாம். உங்கள் உடலுறுப்புகளில் ஒன்றின் செயல்பாடு குறைந்தாலும், அது உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில், முக்கிய உறுப்பான சிறுநீரகத்தின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் முக்கியமானது, ஏனெனில் இந்த உறுப்புகள் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள், நச்சுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை வடிகட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை எலக்ட்ரோலைட் அளவுகள், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

Reasons Of Kidney Failure Rather Than Alcohol In Tamil

ஒட்டுமொத்த உடல் சமநிலையை பராமரிக்கவும், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உருவாகாமல் தடுக்கவும் சரியான சிறுநீரக செயல்பாடு நம் உடலுக்கு அவசியம். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் வைட்டமின் டியை செயல்படுத்தி, எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. பொதுவாக மது அருந்தும் நபர்களுக்கு சிறுநீரக நோய் பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது.

ஏனெனில், ஆல்கஹால் சிறுநீரக செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும். ஆல்கஹால் மட்டுமல்லாது சில உடல்நல பிரச்சனைகளும் உங்கள் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம். உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தலாம். அவை, என்னென்ன சுகாதார பிரச்சனைகள் என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உங்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிகரித்த சர்க்கரை அளவு உங்கள் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம். மோசமாக நிர்வகிக்கப்படும் நீரிழிவு நோய் சிறுநீரகங்களில் இரத்த நாளங்களை சேதப்படுத்தும், காலப்போக்கில் அவற்றின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

உயர் இரத்த சர்க்கரை அளவுகள் நீரிழிவு நெஃப்ரோபதிக்கு வழிவகுக்கும். இது சிறுநீரக செயலிழப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணமாகும். ஆதலால், உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை கவனமாக பராமரிக்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம்

நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது உடலில் இரத்த ஓட்டம் குறைந்து இறுதியில் சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கிறது. உங்கள் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதும் சிறுநீரக செயலிழப்புக்கான முக்கிய ஆபத்து காரணியாக மாறலாம். ஆதலால், உங்கள் இரத்த அளவை சரியாக பராமரிப்பது அவசியம்.

நாள்பட்ட சிறுநீரக நோய்

குளோமெருலோனெப்ரிடிஸ் அல்லது பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் போன்ற நிலைகளில் இருந்து பாதிப்படும் சிறுநீரக செயல்பாடு இறுதியில் சிறுநீரக செயலிழப்புக்கு முன்னோடியான நாள்பட்ட சிறுநீரக பிரச்சனையை ஏற்படுத்தும்.

நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது சிறுநீரகங்கள் சேதமடைந்து இரத்தத்தை வடிகட்ட முடியாத சுகாதார நிலையை குறிக்கிறது. இதன் காரணமாக, இரத்தத்தில் இருந்து அதிகப்படியான திரவம் மற்றும் கழிவுகள் உடலில் தங்கி, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறுநீரக கற்கள் மற்றும் தடைகள்

மீண்டும் மீண்டும் சிறுநீரக கற்கள் அல்லது தடைகள் ஏற்படுவது உங்கள் சிறுநீர் ஓட்டத்தைத் தடுக்கலாம், இதனால் அழுத்தம் அதிகரித்து, உங்கள் சிறுநீரகங்களுக்கு சேதம் ஏற்படலாம். இது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தாலோ அல்லது அதுகுறித்த அறிகுறி இருந்தாலோ, உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

ஏனெனில், சிறுநீரக கற்கள் மீண்டும் மீண்டும் வர வாய்ப்புள்ளது. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாடு சரியாக இருப்பதை உறுதிப்படுத்த, அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஆட்டோ இம்யூன் நோய்கள்

லூபஸ் மற்றும் முடக்கு வாதம் போன்ற நிலைகள் நோயெதிர்ப்பு அமைப்பு சிறுநீரகத்தைத் தாக்கும். இதன் விளைவாக வீக்கம் ஏற்படும் மற்றும் சிறுநீரக செயல்பாடு பலவீனமடைகிறது. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு உடலை நோய் மற்றும் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கிறது. ஆனால் நோயெதிர்ப்பு அமைப்பு செயலிழந்தால், அது ஆரோக்கியமான செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை எதிர்மறையாக பாதிக்கிறது.

ஆட்டோ இம்யூன் நோய் என்று அழைக்கப்படும், இந்த தாக்குதல்கள் உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கலாம். உங்கள் சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கலாம், உடல் செயல்பாடு பலவீனமடையும் மற்றும் உயிருக்கு ஆபத்தான பிரச்சனையாக மாறலாம்.

நோய்த்தொற்றுகள்

சிறுநீரக தொற்று என்பது ஒரு வகை சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI). இந்த தொற்று உடலில் இருந்து சிறுநீரை எடுத்துச் செல்லும் குழாயில் (சிறுநீர்க்குழாய்) அல்லது சிறுநீர்ப்பையில் ஏற்படலாம். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற சிகிச்சை அளிக்கப்படாத அல்லது மீண்டும் மீண்டும் வரும் நோய்த்தொற்றுகள், சிறுநீரகங்களுக்கு பரவி, சேதத்தை ஏற்படுத்தலாம். இது உடனடியாக கவனிக்கப்படாவிட்டால் சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம்.

போதைப்பொருள் மற்றும் மருந்து

ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDகள்) அல்லது சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றை நீங்கள் நீண்ட காலமாக எடுத்துக்கொண்டு இருந்தால், அது ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

சில மருந்துகளின் நீண்டகால பயன்பாடு சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். ஆதலால், இந்த மருந்துகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடுகளை முற்றிலும் கைவிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் நன்மை பயக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, July 27, 2023, 15:37 [IST]
Desktop Bottom Promotion