Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கேரளாவில் வேகமாக பரவி வரும் எலிக்காய்ச்சல்? அதன் அறிகுறிகள் என்ன மற்றும் எப்படி தடுக்கலாம் தெரியுமா?
மழைக்காலம் உற்சாகத்தையும், இனிமையான சூழலையும் அளிக்கும் பருவகாலமாக இருந்தாலும் அதனுடன் சில ஆபத்துக்களும் சேர்ந்தே வருகிறது. பருவமழையின் வருகை பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
பருவகால காய்ச்சலைப் போலவே, மழைக்காலத்தில், நீரால் பரவும் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும். பூஞ்சை தொற்று, மழைக்கால ஒவ்வாமை, நீர் மூலம் பரவும் நோய்கள் என பல விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் டெங்கு, மலேரியா போன்றவை பொதுவாக பரவும் நோய் என்றாலும், இந்த ஆண்டு கேரளாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கபடுப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றன.
எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ், விலங்குகளில் இருந்து உருவாகும் ஒரு அரிய பாக்டீரியா தொற்று ஆகும். இது பொதுவாக கொறித்துண்ணிகள், பண்ணை விலங்குகள் அல்லது நாய்களிடமிருந்து அவற்றின் மலம் வழியாக பரவுகிறது. இந்த நோய் உயிருக்கு ஆபத்தானது இல்லையென்றாலும் பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.
நமது அண்டைய மாநிலமான கேரளாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எலிக்காய்ச்சலின் அறிகுறிகள்
எலி காய்ச்சலின் சில பொதுவான அறிகுறிகள் பரவலாக அறியப்பட்டாலும், சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கலாம். CDC இன் படி, சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், லெப்டோஸ்பிரோசிஸ் சிறுநீரக பாதிப்பு, மூளைக்காய்ச்சல், கல்லீரல் செயலிழப்பு, சுவாசக் கோளாறு மற்றும் சில அரிதான சந்தர்ப்பங்களில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். எலிக்காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் என்னவெனில்,
- குமட்டல் மற்றும் வாந்தி
- வயிற்று வலி
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
- அதிக காய்ச்சல்
- மஞ்சள் காமாலை
- சிவந்த கண்கள்
எலிக்காய்ச்சல் பாதிப்பு எவ்வளவு நாள் நீடிக்கும்?
அசுத்தமான இடத்துடன் தொடர்பு கொண்ட பிறகு, காய்ச்சல் சில நாட்கள் முதல் கிட்டத்தட்ட 2 வாரங்கள் வரை நீடிக்கும். டெங்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால், கேரள மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், பாக்டீரியா தொற்றுகளும் பரவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுய மருந்துகளை பின்பற்ற வேண்டாம் என்றும் மருத்துவரை அணுகவும் மாநில சுகாதாரத் துறை மக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தண்ணீர் மூலம் பரவும் நோய்களை தடுப்பது எப்படி?
குழாய் நீரை தவிர்க்கவும்: பொது இடங்களில் நிறைய குழாய் நீர் உள்ளது. நீரின் மூலம் நோய் பரவும் அபாயத்தைக் குறைக்க குழாய் நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கை சுகாதாரம்: சீரான கை சுகாதாரத்தை பராமரிப்பது முக்கியம். சாப்பிடுவதற்கு முன், வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு, கழிப்பறையைப் பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு பிறகு உங்கள் கைகளை அவசியம் கழுவவும். முக்கியமாக காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடும் முன் அவசியம் கழுவ வேண்டும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவும்:
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைத் தவிர்க்க, தண்ணீர் தேங்கி நிற்கும் வாய்ப்பை நீக்கி, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நீர் தேங்குவதைத் தவிர்க்கவும்:
நீர் தேங்கியுள்ள இடங்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். மழைக்காலத்தில் வெளியே சென்று திரும்பிய பிறகு எப்போதும் உங்கள் கால்களை நன்றாகக் கழுவுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
