Olympic 2024: பிவி சிந்துவின் டயட் மற்றும் ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்..!

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பாக பேட்மிண்டனில் கடந்த 2 ஒலிம்பிக்கிலும் பிவி சிந்து பதக்கம் வென்று அசத்திய நிலையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் 2வது நாளில் பிவி சிந்து தனது முதல் சுற்று போட்டியில் மாலத்தீவைச் சேர்ந்த ஃபாதீமாத்-ஐ எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டை 21-9 என்று கைப்பற்றிய நிலையில், 2வது செட்டை 21-6 என்று கைப்பற்றி வென்றார். 30 நிமிடங்களுக்குள் இந்த ஆட்டம் முடிவடைந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது , இதனையடுத்து சிந்து தனது 2வது போட்டியை வரும் புதன்கிழமையான நாளை தரவரிசையில் 73வது இடத்தில் உள்ள கிறிஸ்டனை எதிர்கொள்ள உள்ளார். அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பிவி சிந்துவின் 10 ஃபிட்னஸ் மற்றும் டயட் ரகசியங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

PV Sindhu at 2024 Olympics tips to takes from her Fitness secret

1. பிவி சிந்துவின் பிசியோ கூறுகையில், சிந்து ஒரு நாள் கூட ஏபிஎஸ் உடற்பயிற்சிகளை செய்யாமல் இருந்ததில்லை. சிந்துவின் உடற்பயிற்சி தினமும் காலை 7 மணிக்கு தொடங்கி அது மதியம் 12 மணி வரை நீடிக்கும். மதியம் 1 மணிக்கு மதிய உணவுக்காக வீட்டிற்குச் சென்று மதியம் 3 மணி வரை ஓய்வெடுப்பார்.. பின்னர் மாலை 4 மணிக்கு அகாடமிக்கு திரும்பி வந்து 7 மணி வரை அவரது பயிற்சியை செய்வார்..

2. பிவி சிந்து தொடர்ந்து 100 புஷ்-அப்கள் மற்றும் 200 சிட்-அப்கள் செய்கிறார். இது ஒரு வாரத்தில் 600 புஷ்அப்கள் மற்றும் 2400 அடிவயிற்றுப் பயிற்சிகள் மூலம் அவளது மைய மற்றும் வயிற்று தசைகளை இருக்கப்படுத்துகிறார். மாலையில், சிந்து ஜிம்மில் சுமார் 2 மணி நேரம் பயிற்சி எடுப்பார்.

3. அத்துடன் யோகா, பிராணாயாமம், கபாலபதி மற்றும் நீச்சல் போன்ற அனைத்து உடற்பயிற்சிகளையும் சிந்து செய்து வருகிறார்.. உடற்பயிற்சி செய்யும் முன்பு நீச்சலும் ரன்னிங்கும் செய்கிறார்..

4. சிந்து இரத்த பரிசோதனை, உடல் எடை, இதயத் துடிப்பு, உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வழக்கமாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்கிறார்.. அது அவரது ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை மாற்றியமைக்க பயன்படுகிறது..

5. பிவி சிந்து, வாரத்தில் 6 நாட்களும் குறைந்தது 6 மணி நேரம் பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளார். முதுகு, வயிறு, தோள்பட்டை மற்றும் முழங்கால்களில் கவனம் செலுத்தும் பயிற்சியில் ஈடுபடுவார்.

6. மேலும் அவர் கார்டியோ, ஸ்ட்ரென்த் ட்ரெயினிங், பட்மிண்டன் டிரில் என வொர்க் அவுட்டில் வரியேஷனை ஃபாலோ செய்யக்கூடியவர்..

7. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்தே எபோதும் டயட் மற்றும் பிட்னஸ் பிளானை ஸ்ட்ரிக்ட்டாக ஃபாலோ செய்யபவர்.. குறிப்பிட்ட தொடர் முழுமையாக முடிந்தப்பிறகுதான் , பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிடுவதாக கூறுகிறார்..

8. சிந்துவின் உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன்கள் சமநிலையில் உள்ளது. பால், முட்டை மற்றும் பழங்கள் காலை உணவாக இருக்கும். அத்துடன் கொஞ்சம் பழங்களை உட்கொள்கிறார். இவை உடலுக்கு தேவையான புரதச்சத்து அளிப்பதாக நம்புகிறார். மாலை மற்றும் இரவில் சாதத்துடன் கொஞ்சம் காய்கறிகளும் அசைவமும் சாப்பிடுகிறார்.

9. மேலும், அவரது கிட்பேக்கில் சிற்றுண்டி இல்லாமல் வொர்க் அவுட்டிற்கு அவர் ஒருபோதும் செல்லவதில்லை.. இதில் வழக்கமாக ஒரு சிறிய பவுல் பழங்கள், சில உலர்ந்த பருப்பு வகைகள் மற்றும் எனர்ஜி ட்ரிங்கும் இருக்கும்

10. ஒரு மாதத்திற்கு காய்கறிகள், கிரில் இறைச்சி மட்டுமே சாப்பிடும் பிவி சிந்து, உடலுக்கு கெடு விளைவிக்கும் ஜங்க் உணவுகளை தொடவே மாட்டார். குறிப்பாக, சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்துவிடுவாராம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion