Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா?
ஆண்களே! கால்களின் இந்த இடத்துல வலிக்குதா? அத அசால்ட்டா எடுத்துக்காதீங்க.. அது இந்த புற்றுநோயோட அறிகுறி..
Symptoms Of Prostate Cancer In Tamil: புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஒரு வகையான புற்றுநோய். இது ஆண்களை மட்டுமே தாக்கக்கூடிய ஒரு பொதுவான புற்றுநோயாகும். இது இந்த புற்றுநோய் கட்டி ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பி செல்களில் வளரத் தொடங்குகிறது. இது ஒரு தீவிரமான நோய்.
இந்த வகை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், முற்றிலும் குணமாகிவிடலாம். அமெரிக்காவில் இந்த வகை புற்றுநோயால் தான் ஏராளமான ஆண்கள் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புரோஸ்டேட் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அது மேம்பட்ட நிலையை அடைந்து, புற்றுநோய் செல்களானது உடலின் பிற பகுதிகளுக்கு, அதாவது நிணநீர் மண்டலத்தின் மூலம் எலும்புகள் மற்றும் மற்ற உறுப்புகளுக்கு பரவிவிடும்.
சரி, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதை எவ்வாறு அறிவது என்று கேட்கலாம். புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால் அது ஆரம்ப கட்டத்தில் ஒருசில அறிகுறிகள் கால்கள் மற்றும் பாதங்களில் வெளிக்காட்டும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
நீண்ட நேரம் நிற்கவோ அல்லது நடக்கவோ முடியாது
புரோஸ்டேட் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தால், புற்றுநோய் செல்களானது நிணநீர் மண்டலத்தின் மூலம் இடுப்பு எலும்புகளில் பரவி அங்கு சேதத்தை ஏற்படுத்தி, இடுப்பு எலும்புகளின் இயக்கம் மற்றும் சமநிலையை நேரடியாக பாதிக்கிறது. எனவே திடீரென்று கால்களை அசைக்க முடியாமலோ, நீண்ட நேரம் நடக்கவோ, நிற்கவோ முடியாமல் போனால், அது புரோஸ்டேட் புற்றுநோயின் அறகுறிகளுள் ஒன்றாகும்.
கால் எலும்பு வலி
இடுப்பு, தொடை அல்லது கீழ் முதுகு பகுதிகளில் தாங்க முடியாத அளவில் கடுமையான வலியை சந்திக்கிறீர்களா? அதுவும் இப்படியான வலியை நீண்ட நாட்களாக சந்தித்து வந்தால், அது புரோஸ்டேட் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதன் அறிகுறி. எனவே இந்த அறிகுறியை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
கால் மூட்டு வீக்கம்
புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால், அது மூட்டுக்களில் வீக்கம் மற்றும் விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும். இதன் விளைவாக முழங்கால்கள் மற்றும் இடுப்பு எலும்புகளை வளைப்பதில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி, கால்கள் மற்றும் ஒட்டுமொத்த இயக்கங்களையும் மோசமாக பாதிக்கும்.
சரும நிற மாற்றம்
கால்கள் மற்றும் பாதங்களைச் சுற்றிய பகுதி சூடாகவோ, சிவந்தோ அல்லது சொறி போன்றோ வெளிப்பட்டால் அது புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது பெரும்பாலும் புற்றுநோயால் தூண்டப்பட்ட இரத்த ஓட்ட பிரச்சினைகளால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
புரோஸ்டேட் புற்றுநோயின் பிற ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளைத் தவிர, புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால் பின்வரும் அறிகுறிகளும் ஆரம்ப காலத்தில் தெரிய வரும். அவை:
* இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
* மிகவும் குறைவான அளவில் சிறுநீர் வெளியேறும்
* சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சலை சந்திக்க நேரிடும்.
* சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழப்பது
* குடல் கட்டுப்பாடு இழப்பு
* வலிமிகுந்த விந்து வெளியேற்றம் மற்றும் விறைப்புத்தன்மை கோளாறு
* இரத்தம் கலந்த விந்து
* கீழ் முதுகு, இடுப்பு அல்லது நெஞ்சு பகுதியில் வலி
மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகளை ஆண்கள் சந்தித்தால், அதைப் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, உடல் பரிசோதனைகளை செய்து, சரியான சிகிச்சையை உடனே மேற்கொள்ளத் தொடங்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications