Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
வரவர மூட்டு வலியும், உடல் சோர்வும் அதிகமா இருக்கா? அப்ப உடம்புல ஒமேகா-3 கம்மியா இருக்குன்னு அர்த்தம்..
Symptoms Of Omega-3 Deficiency In Tamil: நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மிகவும் இன்றியமையாதவை. அதில் ஒன்று தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள். இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கலானது ஒரு பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள். அதாவது நல்ல கொழுப்புக்கள். இந்த வகை கொழுப்புக்கள் உடலில் பல முக்கியமான செயல்பாடுகளை செய்கின்றன.
இவை செல் சவ்வுகளின் முக்கியமான பகுதியாகும். இவையே செல்களுக்கு நல்ல கட்டமைப்பை வழங்குகின்றன மற்றும் செல்களுக்கு இடையேயான தொடர்பை ஆதரிக்கின்றன. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண்கள் மற்றும் மூளையில் உள்ள செல்களில் அதிகம் உள்ளன. கூடுதலாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன மற்றும் இதயம், நாளமில்லா அமைப்பு ஆகியவற்றின் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன.

இப்படிப்பட்ட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை நமது உடலால் உற்பத்தி செய்ய முடியாது என்பதால் இந்த வகை கொழுப்பு அமிலங்களை உணவுகளின் மூலம் மட்டுமே பெற முடியும். இந்த வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீனில் அதிகமாக உள்ளன. இது தவிர ஆளி விதை, வால்நட்ஸ் போன்றவற்றிலும் அதிகம் உள்ளன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் குறைவாக இருந்தால், அது உடலில் பல பிரச்சனைகளை வரத் தூண்டும். இப்போது ஒமேகா-3 உடலில் குறைவான அளவில் இருந்தால், எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம். உங்களிடம் இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே அதை சரிசெய்ய ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள்.
1. சருமம் மற்றும் முடி வறட்சி
உங்கள் சருமம் மற்றும் தலைமுடி அளவுக்கு அதிகமாக வறண்டு போயுள்ளதா? அப்படியானால் உங்கள் உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் கொழுப்பு உறை மற்றும் ஈரப்பதம் தக்கவைப்பை பராமரிப்பதற்கு பொறுப்பாகும். எனவே இந்த சத்து மிகவும் குறைவாக இருந்தால், சரும ஆரோக்கியம் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம்.
2. மூட்டு வலி மற்றும் பிடிப்புகள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு எதிராக செயல்படக்கூடியது மற்றும் இது மூட்டுக்களை சிறந்த வடிவத்தில் வைத்திருப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த கொழுப்புக்கள் உடலில் போதுமான அளவு இல்லாவிட்டால், அது மூட்டுக்களில் விறைப்பு, வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும். எனவே மூட்டுக்களில் அதிக பிரச்சனைகளை சந்தித்தால், உங்கள் உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
3. கவனிப்பதில் சிரமம்
மூளையில் உள்ள செல்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களால் நிறைந்தவை. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருந்தால், எதையும் எளிதில் நினைவு படுத்தவும், கவனம் செலுத்தவும் முடியும். ஆனால் இச்சத்து குறைவாக இருந்தால், எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை செலுத்த முடியாமல் போகும். எனவே கவனிப்பதில் சிரமத்தை சந்தித்தால், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.
4. உடல் சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஒருவரது ஆற்றல் மற்றும் மனநிலையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவு இல்லாவிட்டால், அதன் விளைவாக மிகுந்த உடல் சோர்வு மற்றும் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும்.
5. பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கை வகிக்கின்றன. இப்படிப்பட்ட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் மிகவும் குறைவாக இருந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மோசமாக பாதித்து, பல்வேறு நோய்த்தொற்றுக்களின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதை உணர்ந்தால், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
