Latest Updates
-
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்..
30 வயதை எட்டிய ஆண்கள் வெண்டைக்காய் ஊற வைத்த நீரை தினமும் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Okra Water Men's Health: ஒருவரின் வயது அதிகரிப்பதை எவராலும் நிறுத்த முடியாது. அதுவும் 30 வயதை எட்டியதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆண்கள் 30 வயதை அடைந்தால் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த வயதில் ஆரோக்கியத்தை சரியாக கவனித்து உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வந்து, அதை வழக்கமாக்கிக் கொண்டால், உடலில் வரும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அதுவும் 30 வயதை எட்டிய ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பராமரிக்கவும் வெண்டைக்காய் நீரைக் குடித்து வருவது மிகச்சிறந்த வழி. பொதுவாக வெண்டைக்காய் நீர் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்று கூறுவார்கள்.
ஆனால் வெண்டைக்காய் நீரை 30 வயதை எட்டிய ஆண்கள் குடித்து வருவதன் மூலம் பல ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது வெண்டைக்காய் நீரை ஆண்கள் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. சர்க்கரை நோய் தடுக்கப்படும்
தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமானால், இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க வெண்டைக்காய் நீர் பெரிதும் உதவி புரிகிறது.
எப்படியெனில் வெண்டைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆய்வுகளிலும் வெண்டைக்காயின் விதைகள் மற்றும் அதன் தோலில் உள்ள ஆன்டி-டயாபெடிக் பண்புகள், டைப்-2 சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு கணிசமாக குறைப்பது தெரிய வந்துள்ளது.
எனவே ஆண்கள் 30 வயதை அடைந்ததும் வெண்டைக்காய் நீரை குடித்து வந்தால், சர்க்கரை நோயைத் தடுக்கலாம். அத்துடன் சமச்சீரான உணவுகளை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சர்க்கரை நோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.
2. செரிமான பிரச்சனைகள் குறையும்
30 வயதை எட்டியதும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை என்றால் அது செரிமான பிரச்சனைகளாகவே இருக்கும். வயிற்று உப்புசம், மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றால் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு, தினசரி வேலைகளை கூட செய்ய முடியாமல் சிரமப்படுவார்கள்.
அதிர்ஷ்டவசமாக, இதற்கு ஒரு அற்புத தீர்வு உள்ளது. அது தான் வெண்டைக்காய் நீர். இந்த நீரைக் குடித்து வந்தால், அதில் உள்ள ஜெல் போன்ற பொருள் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவித்து, குடலியக்கத்தை மென்மையாக்கும். எனவே 30 வயதை தாண்டிய ஆண்கள் இந்த வெண்டைக்காய் நீரைக் குடித்து வருவது நல்லது.
3. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
வயது அதிகரிக்கத் தொடங்கும் போது உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, நோய்த் தொற்றுக்களின் அபாயமும் அதிகரிக்கும். ஆனால் 30 வயதை எட்டிய ஆண்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த நினைத்தால், அதற்கு வெண்டைக்காய் நீர் ஒரு சிறந்த தேர்வு. வெண்டைக்காயில் வைட்டமின்கள், வைட்டமின் சி, ப்ளேவோனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
முக்கியமாக வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். எனவே நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்க நினைத்தால், வெண்டைக்காயை நீரை தினமும் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
4. இதய நோய் தடுக்கப்படும்
உலகளவில் இதய நோயால் பெண்களை விட ஆண்கள் அதிகமாக மரணத்தை சந்திக்கிறார்கள். குறிப்பாக 30 வயதை எட்டிய ஆண்கள் இந்த இதய நோயாள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே 30 வயதிற்கு மேலான ஆண்கள் தங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். அதற்கு வெண்டைக்காய் நீர் பெரிதும் உதவி புரியும்.
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்தால், இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயமும் குறையும். மேலும் வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தமனிகளில் ப்ளேக்குகள் தேங்குவதைத் தடுக்க உதவுகிறது. இந்த ப்ளேக்குகள் தான் மாரடைப்பிற்கு முக்கிய காரணம். எனவே வெண்டைக்காய் நீரை 30 வயதை எட்டிய ஆண்கள் தினமும் குடித்து வந்தால், இதய நோயின் அபாயத்தைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
5. எலும்புகளுக்கு நல்லது
வயது அதிகரிக்கும் போது எலும்புகளின் வலிமையும், அடர்த்தியும் குறையத் தொடங்கும். இதன் விளைவாக எலும்பு முறிவு, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றின் அபாயமும் அதிகரிக்கும். ஆனால் வெண்டைக்காய் நீரை குடித்து வந்தால், எலும்புகளின் ஆரோக்கியமும், வலிமையும் சீராக பராமரிக்கப்படும்.
வெண்டைக்காயில் கால்சியம், மக்னீசியம், வைட்டமின் கே போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே இப்படிப்பட்ட வெண்டைக்காயை நீரில் ஊற வைத்து ஆண்கள் குடித்து வரும் போது, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படும். அதுவும் 30 வயதிற்கு மேலான ஆண்கள் இந்த நீரைக் குடிக்கும் போது, எலும்புகளின் ஆரோக்கியம் சிறப்பாக பராமரிக்கப்படும்.
வெண்டைக்காய் நீரைத் தயாரிப்பது எப்படி?
வெண்டைக்காய் நீரைத் தயாரிப்பது என்பது அவ்வளவு பெரிய கடினமான வேலை அல்ல. மிகவும் எளிதானது. இதோ அதைத் தயாரிக்கும் முறை:
* 4-5 வெண்டைக்காயை எடுத்து அவற்றை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வெண்டைக்காயை சிறுசிறு துண்டுகளாக வெடடிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு டம்ளர் நீரில் இந்த துண்டுகளாக்கப்பட்ட வெண்டைக்காயை சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில எழுந்ததும், நீரில் உள்ள வெண்டைக்காயை நீக்கிவிட்டு, அந்நீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இப்படி வெண்டைக்காய் நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதில் உள்ள முழு சத்துக்களையும் பெறலாம். முதன்முதலாக குடிப்பவர்கள் கொஞ்சமாக குடிக்கத் தொடங்கி, பின் மெதுவாக அளவை அதிகரிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications