Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
Norovirus: அமெரிக்காவில் வேகமாக பரவும் நோரோ வைரஸ்: இது எப்படி பரவுகிறது? இதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?
Norovirus Outbreak In US: அமெரிக்காவில் தற்போது நோரோ வைரஸ் தொற்றினால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கையின் படி, நவம்பர் மாத இறுதியில் 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் 91 வழக்குகள் பதிவாகியுள்ளது. இப்படி குறுகிய நாட்களில் நோரோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நோரோ வைரஸ் என்பது மிகவும் வேகமாக தொற்றக்கூடிய வைரஸ் ஆகும். இந்த வைரஸ் உணவு மூலம் மனிதர்களிடையே பரவுகிறது. இந்த நோரோ வைரஸ் தொற்றினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 58 சதவீத வழக்குகள் பதிவாகி வருகின்றன. நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,500 நோரோ வைரஸ் வழக்குகள் பதிவாகி வருகின்றன.

அதுவும் பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்றுகள் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் தான் அதிகம் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்த வைரஸ் மக்களிடையே மிகவும் வேகமாக பரவும் திறன் கொண்டது. இந்த வைரஸ் பெரும்பாலும் முதியோர் இல்லங்கள், பயணக் கப்பல்கள், பள்ளிகள், சிறைச்சாலைகள் போன்ற கூட்டமான சூழல்களில் தான் அதிகம் ஏற்படும்.
நோரோ வைரஸ் எப்படி பரவுகிறது?
நோரோ வைரஸ் உணவு மற்றும் பாத்திரங்கள் மூலமாக பரவுகிறது. அதுவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உணவுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தி பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. இது தவிர அசுத்தமான நீர் மற்றும் மோசமான மேற்பரப்புகள் மூலமாகவும் மற்றவர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸின் லேசான வெளிப்பாடும் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
நோரோ வைரஸ் அறிகுறிகள் என்ன மற்றும் அது எவ்வளவு காலம் நீடிக்கும்?
நோரோ வைரஸ் தொற்று ஏற்பட்டால், அது வாந்தி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வயிற்று வலி போன்ற கடுமையான இரைப்பை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர உடல் வலி, தலை வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் சந்திக்க நேரிடும். அதுவும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட 12 முதல் 48 மணிநேரத்திற்கு பின் இந்த அறிகுறிகள் ஒவ்வொன்றாக தெரியத் தொடங்குவதோடு, இந்த அறிகுறிகள் முதல் மூன்று நாட்கள் வரை நீடித்திருக்கும்.
அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆணடும் சுமார் 19 முதல் 21 மில்லியன் வழக்குகள் பதிவாகி வருகின்றன. வயதானவர்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்படும் போது, அது சில சமயங்களில் இறப்புகளுக்கு வழிவகுக்கும்.
யாருக்கெல்லாம் நோரோ வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது?
நோரோ வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. இருப்பினும், இந்த வைரஸ் சிறு குழந்தைகள், வயதானவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் போன்றவர்களை அதிகம் பாதிக்கும். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது வாந்தி, வயிற்றுப்போக்கினால், கடுமையான நீரிழப்புக்கு வழிவகுத்து, பெரும் கவலையை அளிக்கும். இந்த நீரிழப்பு தீவிரமாகும் போது, அதன் விளைவாக உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
நோரோ வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
நோரோ வைரஸ் தொற்றிற்கு என்று தனி சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், இத்தொற்று ஏற்பட்டால் நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது முக்கியம். அதற்கு நிறைய நீரை அருந்த வேண்டும். முக்கியமாக இத்தொற்று ஏற்பட்டால் காபி, டீ, ஆல்கஹால் போன்றவற்றை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். கடுமையான நீர்ப்போக்கு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். எதை உட்கொள்வதாக இருந்தாலும், கைகளை சநன்கு கழுவ வேண்டும். வீட்டை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications