Latest Updates
-
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்!
மீண்டும் கேரளாவில் பரவும் நிபா வைரஸ்: இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது, தடுப்பது எப்படி?
Nipah Virus Outbreak in Kerala Malapuram: மழைக்காலம் என்பதால் பலவிதமான நோய்த்தொற்றுக்கள் இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கின்றன. அதில் சமீபத்தில் வட இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் தொற்றால் 4 குழந்தைகள் பலியாயினர். இந்நிலையில் தற்போது கேரளாவின் மலப்புரத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறுவன் தற்போது தனியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சிறுவனின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது முதற்கட்ட சோதனை தெரிய வந்தது. இருப்பினும் இதை மீண்டும் உறுதிப்படுத்த புனே தேசிய வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் முதன்முதலாக 2018 ஆம் ஆண்டில் இந்த நிபா வைரஸ் தொற்று ஒரு மோசமான சூழ்நிலையை சந்திக்க வைத்தது. அதுவும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் இத்தொற்று பரவியது. அப்போது ஏற்பட்ட தொற்றின் காரணமாக 18 பேர் பாதிக்கப்பட்டனர் மற்றும் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் நிபா வைரஸால் சிறுவன் ஒருவன் பாதிக்கப்பட்டிருப்பது பீதியை கிளப்பியுள்ளது. இபோது நிபா வைரஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி மக்களிடையே பரவுகிறது மற்றும் இதைத் தடுப்பது எப்படி என்பனவற்றைக் காண்போம்.
நிபா வைரஸ் என்றால் என்ன? இது எப்படி பரவுகிறது?
நிபா வைரஸ் என்பது பழந்திண்ணி வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும். இருப்பினும், இந்த வைரஸ் பன்றிகள், ஆடுகள், குதிரைகள், நாய்கள் மற்றும் பூனைகள் மூலமும் பரவும். இந்த வைரஸானது பாதிக்கப்பட்ட மனிதர்கள் அல்லது விலங்குகளின் இரத்தம், எச்சில், மலம், சிறுநீர் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு கொள்ளும் போது அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகள் கடித்த பழங்களை உட்கொள்ளும் போது அல்லது இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பு கொள்ளும் போது பரவும் வாய்ப்பு உள்ளது.
நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகள்
நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆரம்ப காலத்தில் பின்வரும் அறிகுறிகள் தெரியும். அவை:
* காய்ச்சல்
* தலைவலி
* மூச்சு விடுவதில் சிரமம்
* இருமல் மற்றும் தொண்டை புண்
* வயிற்றுப்போக்கு
* வாந்தி
* தசைவலி மற்றும் கடுமையான உடல் பலவீனம்
பொதுவாக இப்படியான அறிகுறிகள் நிபா வைரஸ் உடலினுள் நுழைந்த 4 முதல் 14 நாட்களுக்குள் தெரிய தொடங்கும். அதுவும் முதலில் காய்ச்சல் அல்லது தலைவலியில் தொடங்கும். அதன் பின் இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கும். இன்னும் தீவிர நிலையில், இது மூளையில் பாப்பை ஏற்படுத்தி என்செபாலிடிஸை உருவாக்கி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.
தீவிர நிலையில் தெரியும் அறிகுறிகள்
நிபா வைரஸ் தொற்று தீவிரமாக ஏற்பட்டிருந்தால், அந்நபர் பின்வரும் அறிகுறிகளை சந்திக்கக்கூடும். அவை:
* மனக்குழப்பம்
* பேசும் போது வாய் குளறுவது
* வலிப்பு
* கோமா
* சுவாசக்கோளாறு
தடுப்பது எப்படி?
நிபா வைரஸ் தொற்றை தடுக்க சிறந்த வழி, நோய்வாய்ப்பட்ட பன்றிகள் மற்றும் வௌவால்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு அவை இருக்கும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக இந்த வைரஸ் தொற்று பரவும் காலத்தில் வௌவால்கள் கடிக்கக்கூடிய பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் நோய் பரவாமல் இருக்க சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், வெளியே செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். முக்கியமாக தனிப்பட்ட சுகாதாரத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது வெளியே சென்று விட்டு வந்தாலோ அல்லது எதை சாப்பிடுவதற்கு முன்பும் சோப்பு பயன்படுத்தி கைகளை நன்கு கழுவ வேண்டும்.
அதோடு நோயாளியிடம் இருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரத்தைப் பராமரிக்க வேண்டும். நோயாளிகளின் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. நோயாளிகளை பராமரிக்கும் போது தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
