Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா? அப்ப உங்களுக்கு புதிய கொரோனா இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
New COVID Arcturus Variant In Tamil: தற்போது இந்தியாவில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரானின் புதிய துணை மாறுபாடான XBB.1.16 மாறுபாடு கடந்த சில மாதங்களாக உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதில் இந்தியாவில் 63 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஒரு நாளைக்கு இந்தியாவில் 5000-க்கும் அதிகமான புதிய கொரோனா வழக்குகளும் பதிவாகி வருகின்றன. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், சுமர் 500 புதிய கொரோனா வழக்குகள் ஒவ்வொரு நாளும் பதிவாகி வருகின்றன. இப்படி கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எங்கு மீண்டும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சம் மனதில் எழுகிறது.

அதுவும் இந்த வகை கொரோனாவால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, நாம் தற்போது கொரோனாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது மட்டும் புரிகிறது.
எப்படி ஓராண்டிற்கு முன் முக கவசம் அணிவது, சானிடைசர்களைப் பயன்படுத்துவது, கூட்டமான பகுதிகளை தவிர்ப்பது என்று இருந்தோமோ, அதேப் போல் தற்போது நாம் பாதுகாப்பு நடிவடிக்கைகளை மேற்கொண்டு வந்தால், இந்த கொரோனாவில் இருந்தும் தப்பிக்கலாம். தற்போது இந்தியாவில் பரவும் XBB.1.16, கோவிட் ஆர்க்டரஸ் மாறுபாடு என்று அழைக்கப்படுகிறது.
இப்போது இந்த கோவிட் ஆர்க்டரஸ் மாறுபாடு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, இது கொடியதா மற்றும் எம்மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக காண்போம்.
கோவிட் ஆர்க்டரஸ் மாறுபாடு என்றால் என்ன?
கோவிட் ஆர்க்டரஸ் மாறுபாடு என்பது வேறொன்றும் இல்லை, ஓமிக்ரானின் புதிய துணை மாறுபாடான XBB.1.16 தான். இந்த மாறுபாடு முதன்முதலாக இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஓமிக்ரானின் இந்த வகை மாறுபாடு ஸ்பைக் புரோட்டீனில் 42 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. முக்கியமாக இந்த மாறுபாடு முழுமையாக தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கும் திறன் கொண்டது.
ஆர்க்டரஸ் மாறுபாடு மற்றொரு கொடிய கோவிட் அலையை ஏற்படுத்துமா?
ஆர்க்டரஸ் மாறுபாடு தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகின்றன. நாளுக்கு நாள் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மாறுபாடு இந்தியாவில் மட்டுமின்றி, 29 நாடுகளிலும் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த மாறுபாட்டினை மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கோவிட் ஆர்க்டரஸ் மாறுபாடு எவ்வளவு ஆபத்தானது?
கோவிட் ஆர்க்டரஸ் ஓமிக்ரானின் துணை மாறுபாடு மற்றும் இது வைரஸின் முந்தைய அனைத்து விகாரங்களையும் விடவும் வேகமாக பரவும் திறன் கொண்டது. இது XBB.1.5 மாறுபாட்டை ஒத்தது ஆனால் இந்த ஆர்க்டரஸ் மாறுபாட்டில் ஒரு கூடுதல் பிறழ்வு உள்ளது. இது தான் வேகமாக பரவ காரணமாக இருப்பது. மேலும் இது இந்தியாவின் பல மாநிலங்களில் பரவி வருகிறது என்றாலும், இந்த மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதோடு, இந்த மாறுபாட்டின் அறிகுறிகளானது பெரும்பாலும் சமாளிக்கக்கூடியவையாகவே உள்ளன.
கோவிட் ஆர்க்டரஸ் அல்லது XBB.1.16 மாறுபாட்டின் அறிகுறிகள்
ஆர்க்டரஸ் மாபாட்டின் அறிகுறிகளானவை முந்தைய மாறுபாடுகளின் அறிகுறிகளுடன் சற்று ஒத்திருக்கும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை காய்ச்சல், உடல் வலி, தலைவலி, தொண்டை புண், மூக்கு ஒழுகல், உடல் சோர்வு, இருமல், நெஞ்சு நெரிசல் போன்றவை ஆகும். குழந்தைகள் இந்த வகை கோவிட் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உயர் காய்ச்சல், இருமல், கண் இமை அழற்சி அல்லுது பிங்க் ஐ போன்ற அறிகுறிகளை சந்திப்பார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஆர்க்டரஸ் மாறுபாட்டின பரவலைத் தடுக்க ஒருவர் ஆரம்ப காலத்தில் பின்பற்றிய கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவை பின்வருமாறு:
* வெளியிடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும் மற்றும் கூட்டமான பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
* கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
* இதுவரை பூஸ்டர் தடுப்பூசி போடாமல் இருந்தால், அதை உடனே போட்டுக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications