Neeraj Chopra's Diet: நீரஜ் சோப்ரா ஃபிட்டா இருக்க.. இந்த டயட்டும்.. உடற்பயிற்சியும் தான் காரணமாம்..

Neeraj Chopra's Diet Plan: 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இன்னும் எந்த ஒரு தங்க பதக்கத்தையும் வெல்லவில்லை. இந்தியாவின் தங்கமகன் என்று செல்லமாக அழைக்கப்படும் நீரஜ் சோப்ரா, இந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச்சுற்று இன்று மதியம் 3.20 மணியளவில் நடக்கவுள்ளன.

இந்த தகுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றால் ஆகஸ்ட் 08 ஆம் தேதி ஈட்டி எறிதலுக்கான இறுதிப்போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீரஜ் சோப்ரா இந்த ஆண்டும் இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை வாங்கி தர வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

Neeraj Chopra s Diet And Fitness Plan Ahead Of Paris Olympics 2024

26 வயதான நீரஜ் சோப்ரா 2024 ஒலிம்பிக்கில் உலகின் தலைச்சிறந்த ஈட்டி எறிதல் வீரர்களை எதிர்கொண்டு, தனது சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டி, இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை வாங்கி தர வேண்டும் என்று நிச்சயம் விரும்புவார். இதுவரை இவர் கண்ட வெற்றியில் அவரது உணவும், உடற்பயிற்சியும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. எப்போதும் விளையாட்டு வீரர்கள், அதுவும் தளகட வீரர்கள் ஃபிட்டாக இருந்தால் தான், நினைத்ததை சாதிக்க உடலுக்கு வேண்டிய ஆற்றலும், வலிமையும் கிடைக்கும்.

நீங்கள் நீரஜ் சோப்ராவின் டயட் மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? கீழே நீரஜ் சோப்ராவின் ஃபிட்டான உடலுக்கு காரணமான டயட் மற்றும் உடற்பயிற்சி திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நீரஜ் சோப்ராவின் டயட்

நீரஜ் சோப்ரா ஃபிட்டான கட்டுடலைப் பராமரிக்க அவரது உணவுமுறை திட்டங்கள் தான் காரணம். நீரஜ் தனது உணவில் பழங்கள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் எடுப்பாராம். இவை தசைகளின் வளர்ச்சியை ஆதரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான உடல் கொழுப்பை பராமரிக்க உதவுகிறது. இவரது ஒருநாள் உணவுத் திட்டம் எப்படி இருக்கும் என்றால்,

காலை உணவு - காலை வேளையில் எழுந்ததும் நீரஜ் பழச்சாறு அல்லது இளநீருடன் நாளை தொடங்கி, பின் காலை உணவின் போது பழங்கள், தயிர், ஓட்ஸ், 3-4 வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கரு, 2 துண்டு பிரட், , உலர் பழங்கள் ஆகியவை நிறைந்த உணவுகளை உண்பாராம்.

மதியம் - மதிய வேளையில் இவரது உணவில் தயிர் மற்றும் சாதம், பருப்பு வகைகள், காய்கறிகள், க்ரில் சிக்கன், சாலட் ஆகியவை அடங்கியிருக்கும்.

ஸ்நாக்ஸ் - ஸ்நாக்ஸ் நேரத்தில் சியா விதைகள், உலர் பழங்கள், வாழைப்பழம், நற்பதமான ஜூஸ் அல்லது இளநீர் என ஏதாவது எடுப்பாராம்.

இரவு - இரவு நேரத்தில் நீரஜ் சூப், வேக வைத்த காய்கறிகள், சாலட்டுகள், பழங்கள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்பாராம்.

முக்கியமாக இவர் உடலை ஃபிட்டாக பராமரிப்பதற்கு க்ளுட்டன் நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்த்து வருகிறார்.

நீரஜ் சோப்ராவின் உடற்பயிற்சி வழக்கம்

நீரஜ் சோப்ரா ஃபிட்டாக இருக்க உணவு முறையுடன், உடற்பயிற்சிகளும் தான் காரணம். சொல்லப்போனால் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் சிறந்து விளங்க, அவரது உடலில் கொழுப்பை சரியான அளவில் பராமரிப்பது தான். விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இலக்கை அடைய இதை பராமரிக்க வேண்டியது அவசியம். அதுவும் ஈட்டி எறிதலுக்கு தசைகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் கைகள் மற்றும் முழுங்கைகளை வலுப்படுத்த, அதற்கான வலிமை பயிற்சியுடன், மெடிசன் பால் பயிற்சிகளும் அவரது தினசரி உடற்பயிற்சி வழக்கத்தில் ஒருங்கிணைந்தவை. மேலும் நீரஜ் வலுவான தோள்கள், முழங்கைகள் மற்றும் கை தசைகளை உருவாக்குவதற்கு கேபிளை இழுக்கும் பயிற்சியை (Cable Pulls) மேற்கொள்கிறார். அதோடு ஸ்குவாட்ஸ், ஸ்நாட்ச்சஸ, வெயிட்டட் லஞ்சஸ் மற்றும் டைம் சர்க்யூட்ஸ் போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்.

மேலும் இவர் இடுப்பு தசை மற்றும் கணுக்கால் வலிமை ஆகியவற்றிற்காகவும் சில சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்கிறார். அதோடு தபாட்டா என்று அழைக்கப்படும் HIIT பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். இந்த வகை பயிற்சியில் 20 நொடிகள் தீவிரமாக உடற்பயிற்சியை செய்துவிட்டு, அடுத்த 20 நொடிகள் ஓய்வு எடுத்து, பின் மீண்டும் அதே பயிற்சியை செய்வதாக இருக்கும். இந்த வகை பயிற்சி ஒரு சிறந்த கார்டியோ பயிற்சியாகும். இந்த மாதிரியான பயிற்சிகளில் தினமும் நீரஜ் தவறாமல் மேற்கொண்டு வருகிறார்.

எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலும், உடலுக்கு போதுமான ஓய்வை கொடுக்க வேண்டும். அதற்கு தினமும் போதுமான தூக்கத்தை, அதாவது 8-9 மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். இதையும் நீரஜ் தவறாமல் மேற்கொள்வாராம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion