Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
நடிகை சோபிதா துலிபாலாவின் ஃபிட்னஸ் சீக்ரெட் பற்றி தெரியுமா?உடல் எடையை குறைக்க ட்ரை பண்றவங்க இதை ஃபாலோ பண்ணுங்க
நடிகர் நாகார்ஜுனன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நேற்று தனது மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என நேற்று அறிவித்தார்.. இந்தியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் சோபிதா துலிபாலா மலையாள திரையுலகில் அறிமுகமாகி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த 'குருப்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவரை லட்சக்கணக்கானோர் பாலோவ் செய்து வருகின்றனர்.
ஆந்திராவை சேர்ந்த நடிகை சோபிதா துலிபாலா பட்டப்படிப்பை முடித்தவுடன் மாடலிங் துறையில் உள்ள ஆர்வம் காரணமாக அந்த பணியில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார்.. இவர், ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்னர் மிஸ் இந்தியா எர்த் - 2013 பட்டத்தை வென்றார்.

பார்ப்பதற்கு மிகவும் ஸ்லிம்மாக அதே சமயம் ஃபிட்டாக இருக்கும் நடிகை சோபிதா துலிபாலா, பல ரசிகர்களிடைய ஃபிட்னஸ் ஃப்ரீக் ரோல்மாடலாக வலம் வருகிறார். விரைவாக எடையை இழக்கும் முயற்சிக்கான இவரது ஃபிட்னஸ் பயணமானது சீரான டயட் பிளான் மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது, எடையை குறைக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு உள்ளிட்டவை கலந்தது. இவற்றின் மூலம் தனது உடலை ஸ்லிம் & ஃபிட்டாக வைத்து கொள்ள முன்னுரிமை அளித்து வருகிறார். நீங்களும் ஷோபிதாவை போல அழகிய உடலமைப்பை பெற அவருடைய டயட் பிளானை ஃபாலோ பண்ணுங்கள்.. வாங்க விரைவாக எடையை குறைக்க உதவும் நடிகை சோபிதா துலிபாலாவின் டயட் பிளான் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..
1. 32 வயதான மாடலும் நடிகையுமான சோபிதா துலிபாலா உடற்பயிற்சி ஆர்வலர் என்பது உங்களுக்குத் தெரியுமா? பிரமிக்க வைக்கும் நடிகரும் மாடலுமான சோபிதா துலிபாலா தனது உடலையும் ஆரோக்கியத்தையும் எவ்வாறு பராமரிக்கிறார் தெரியுமா? ஜிம்முக்கு சென்று பைலேட்ஸ் செய்கிறார்..
2. பைலேட்ஸ் என்பது உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகும், இது சமநிலை, நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த உடல் வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது ஒவ்வொரு தசையையும் குறிவைக்கும் முழு உடல் பயிற்சியாகும், இது நமது பாலிவுட் அழகிகளைப் போலவே, மெல்லிய மற்றும் ஃபிட்டான உருவத்தை விரும்புவோருக்கு பிரபலமான தேர்வாக அமைகிறது. ஆனால் இது உடல் நலன்களைப் பற்றியது அல்ல.. பைலேட்ஸ் மன ஆரோக்கியத்தில் சமநிலைப்படுத்துகிறது.. பிலேட்ஸில் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்கள் மற்றும் சுவாசம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனத் தெளிவை மேம்படுத்தவும் உதவுகிறது..
3. மேலும் சோபிதா துலிபாலா தினமும் தனது உணவின் ஒரு பகுதியாக சுத்தமான நெய்யை சேர்த்துக் கொள்கிறார்.. அதிகாலையில் எழும் இவர் தனது காலை உணவில் அதிக கார்போஹைட்ரேட்ஸ் கொண்ட உணவுகளுக்கு பதிலாக, முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு பொருட்களை சேர்த்து கொள்கிறார்.. ஓட்மீலுடன் ஃபிரெஷ்ஷான பழங்கள், கிரீக் யோகர்ட் மற்றும் சிறிது தேன் ஆகியவற்றுடன் காலை உணவை சாப்பிடுகிறார்.. இந்த காலை நேர டயட் நடிகை தன் நாளை உற்சாகமாக துவக்க தேவையான ஆற்றலை வழங்குகிறது.
4. நாள் முழுவதும் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதனை உணர்ந்து தன்னை ஹைட்ரேட்டாக வைத்திருக்க நடிகை ஷோபிதா நிறைய தண்ணீர் குடிக்கிறார். தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் அருந்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறார்..
5. மேலும் இவர் தனது மதிய உணவில் ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுகிறார். அதில் பல்வேறு காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் கொண்டைக்கடலை நிறைந்த சாலட்டை சாப்பிடுகிறார்.. எப்போதும் பிரவுன் அரிசியை தனது வயிறு நிரம்ப சாப்பிடுகிறாராம்.. இது அவருக்கு நல்ல எனர்ஜியை பெற உதவுகிறது.
6. ஈவினிங்க டைம்ல இவர், நட்ஸ், சீட்ஸ் மற்றும் ஃபிரெஷ்ஷான பழங்களை எடுத்து கொள்கிறார். இது தனக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் அல்லது உணவுகளை சாப்பிடுவதை தடுக்க உதவுவதாக என்று கூறுகிறார்.
7. அதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் என்ன சாப்பிடுகிறார் தெரியுமா? நடிகை தனது இரவு உணவில் லைட்டான உணவுகளை மட்டுமே தேர்வு செய்கிறார். இரவில் வறுக்கப்பட்ட காய்கறிகளை சாப்பிட விரும்புகிறார், சூப்-ஐ விரும்பி குடிக்கிறார். இவரது டின்னர் டயட் இரவு நேர தூக்கத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் இரவு உணவை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க உதவும் வகையில் உள்ளது.
8. உடல் எடையை குறைக்க டயட்டில் சமநிலையை பேணுவது மிகவும் அவசியம் என்பதை ஷோபிதா அறிந்திருக்கிறார். இதற்காக வாரம் ஒரு முறை சீட் மீல் டே(Cheat meal) முறையை கடைப்பிடிக்கிறார். அந்த நாளில் அவர் தனக்கு பிடித்தவற்றை சாப்பிடுவார். ஆனால் பிடித்த உணவுகள் என்றாலும் கூட அவற்றை மிகக் குறைந்த அளவிலேயே சாப்பிடுவாராம்..
9. சோபிதா யோகா பயிற்சியும் செய்கிறார். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்.. வலிமை, சுறுசுறுப்பு, ஒழுக்கம், கவனம், ஒருங்கிணைப்பு மற்றும் தற்காப்பு ஆகியவற்றிற்காக சோபிதா தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெறுகிறார்.
10. உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியமும் அமைதியும் முக்கியம் என்று சோபிதா கூறுகிறார்.. உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உதவும் செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிறார்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












