Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
உங்க வாயில் இந்த அறிகுறிகள் 3 வாரத்துக்கு மேல் தெரியுதா? அப்ப உங்களுக்கு வாய் புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்
Mouth Cancer Symptoms In Tamil: உலகளவில் புற்றுநோயால் மில்லியன் கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றின் அறிகுறிகளைப் பற்றிய அறிவு நிறைய பேருக்கு இருக்கும். ஆனால் பெரும்பாலானோருக்கு சரியாக அறிகுறிகள் தெரியாத ஒரு புற்றுநோய் என்றால் வாய் புற்றுநோயாக இருக்கும்.
புற்றுநோய்களிலேயே வாய் புற்றுநோய் மிகவும் கொடியது. ஏனெனில் உணவை உண்ணும் வாயில் புற்றுநோய் வந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நினைத்துப் பார்க்கும் போதே எவ்வளவு கொடுமையாக உள்ளது. எனவே இந்த புற்றுநோயில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் உருவாகும் புற்றுநோய் தான் வாய் புற்றுநோய். எந்த வகையான புற்றுநோயாக இருந்தாலும், அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், சிகிச்சை அளிக்க எளிதாக இருப்பதோடு, உயிரிழப்பதைத் தடுக்கலாம். கீழே வாய் புற்றுநோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் உங்களிடம் தெரிந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
வாய் புற்றுநோய் எதனால் வருகிறது? யாருக்கெல்லாம் வாய் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது?
புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் ஆகிய இரண்டும் தான் ஒருவருக்கு வாய் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, வாய் புற்றுநோயின் அபாயத்தை நான்கு மடங்கு அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர ஒருவருக்கு வாய் புற்றுநோயானது மோசமான உணவுப் பழக்கம், வெயிலில் அதிகம் சுற்றுவது மற்றும் பாதுகாப்பு இல்லாத வாய்வழி உடலுறவு மூலம் பரவக்கூடிய மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஆகியவற்றாலும் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
வீக்கம், கட்டிகள் அல்லது புண்
வாய் புற்றுநோயின் மிகவும் முக்கியாமன அறிகுறி வாய், தொண்டை, நாக்கு போன்ற பகுதியில் கட்டிகள் அல்லது வீக்கம் காணப்படுவது. அதுவும் வாய் அல்லது கழுத்துப் பகுதியில் வந்துள்ள கட்டிகளானது நீண்ட நாட்கள் நீடித்திருக்கும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி அதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
மேலும் வாயில் எங்கேனும் சிவப்பு அல்லது வெள்ளை திட்டுக்கள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இப்படி இருந்தால், அதற்கு வாய் புற்றுநோய் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும், இம்மாதிரி வித்தியாசமாக உங்களுக்கு தோன்றினால், ஒருமுறை மருத்துவரை அணுகுவது நல்லது.
தொண்டைப் புண் அல்லது விழுங்குவதில் சிரமம்
உங்களால் உணவை அல்லது நீரை விழுங்க முடியவில்லையா? மிகுந்த வலியுடன், சிரமத்தை உணர்கிறீர்களா? உணவை மெல்ல கூட முடியவில்லையாஈ அப்படியானால் அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் தொண்டையில் இப்படியான அசௌகரியமானது 6 வாரத்திற்கும் மேலாக நீடித்திருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
நாக்கு மத்துப் போதல் அல்லது பல் இழப்பு
திடீரென்று காரணமின்றி உங்கள் நாக்கு அல்லது வாயின் ஏதேனும் ஒரு பகுதி மரத்துப் போவதை உணர்கிறீர்களா? அப்படியானால் அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்றும் உணரக்கூடும். அதோடு காரணமின்றி ஒன்றிற்கு மேற்பட்ட பற்கள் வலுவிழந்து ஆட்டம் காட்டுவதோடு, விழவும் செய்யும்.
எப்போது மருத்துவரை காண வேண்டும்?
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் 3 வாரத்திற்கும் மேலாக சந்தித்து வந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று வந்தால், முழுமையாக குணமடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே கவனமாக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications