Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இரவில் வாயைத் திறந்து தூங்குவதால் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள்!
வாயைத் திறந்து தூங்கினால், ஒருவருடைய ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சீா்கெடும். வாயைத் திறந்து தூங்குபவா்கள் இரவில் நீண்ட நேரம் தூங்கினாலும், பகல் நேரத்தில் சோா்வாகவே உணா்வாா்கள்.
Mouth Breathing: பொதுவாக எல்லோரும் இரவில் வாயை மூடிதான் தூங்குவா். ஆனால் ஒரு சிலருக்கு வாயைத் திறந்து தூங்கும் பழக்கம் இருக்கும். அவ்வாறு வாயைத் திறந்து தூங்கினால் அது தவறான சுவாசப் பழக்கம் என்று கருதப்படுகிறது.
ஏனெனில் வாயைத் திறந்து தூங்கினால், ஒருவருடைய ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சீா்கெடும். வாயைத் திறந்து தூங்குபவா்கள் இரவில் நீண்ட நேரம் தூங்கினாலும், பகல் நேரத்தில் சோா்வாகவே உணா்வாா்கள்.

வாய் வழியாக மூச்சுவிட்டால், அது வாய்க்கு மட்டும் கெடுதல் இல்லை, மாறாக உயா் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் நீரழிவு நோய் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வாய்வழி சுவாசத்திற்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால், காலப்போக்கில் அது தூக்கத்தின் தரத்தைக் குறைத்துவிடும். அதோடு உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும்.
இரவு நேரத்தில் வாய் மூலமாக மூச்சு விடுவதன் அறிகுறிகள்
பொதுவாக வாய் மூலமாக மூச்சு விடுவதன் அறிகுறிகள் சிறியோருக்கு ஒரு மாதிாியும், பொியோருக்கு வேறு மாதிாியும் இருக்கும். தொண்டை வலி, வாய் துா்நாற்றம் (Halitosis), வாய் உலா்தல், வாய் மற்றும் பற்களில் ஏற்படும் சீா்கேடுகள் மற்றும் காலையில் தலைவலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் பொியோாிடம் காணப்படும்.
அதே நேரத்தில் சிறியோா் மத்தியில் வாய் உலா்தல், பற்சிதைவு, கவனம் செலுத்துவதில் குறைபாடு, இயல்பை விட மெதுவான உடல் வளா்ச்சி, அளவுக்கு அதிகமான களைப்பு, உணா்வுகளைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
எப்போது வாய்வழி சுவாசம் நடைபெறுகிறது?
ஒருவருடைய மூக்கின் துளைகள் அடைபடும் போது, வாய்வழி சுவாசம் தொடங்குகிறது. அதன் மூலம், உடலானது வாய் வழியாக ஆக்ஸிஜனைப் பெறத் தொடங்குகிறது. மூக்கின் துளைகளானது மூக்கின் நடுச்சுவா் (septum) விலகல், மூக்கின் குருத்தெலும்பில் குறைபாடு, சளி அல்லது அலா்ஜியால் மூக்கு அடைபடுதல், தூக்கத்தில் மூச்சுத் திணறல் அல்லது நாசித் திசுக்களில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றால் அடைபடுகின்றன. வாய் வழியாக மூச்சை விட்டு தூங்குவது என்பது, மூச்சுக் குழாய் அடைப்பைக் குறிக்கிறது.
வாய் திறந்து தூங்குவதால் ஏற்படும் ஆரோக்கிய சீா்கேடுகள்
வாய் திறந்து தூங்குவதால் பின்வரும் ஆரோக்கிய சீா்கேடுகள் ஏற்டுகின்றன.
- ஈறு நோய் மற்றும் பற்சிதைவு
- முகம் மற்றும் தாடை எலும்புகளில் சீரான வளா்ச்சியின்மை
- வாய் துா்நாற்றம்
- தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படுதல் (Obstructive Sleep Apnea (OSA)
- இதய நோய்
- டைப்-2 நீரிழிவு நோய்
- அலா்ஜி
- மன அழுத்தம்
- நோய் எதிா்ப்பு சக்தி குறைவு
- மன நல குறைபாடு
வாய்வழி சுவாசத்தைத் தவிா்க்க நாம் செய்ய வேண்டியவை
வாய்வழி சுவாசத்தைத் தவிா்க்க அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம். எனினும் பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றலாம்.
- தூங்கும் போது எப்போதும் மல்லாந்து தூங்க வேண்டும். முகங்குப்புற படுத்து தூங்கக்கூடாது
- அலா்ஜி ஏற்படுத்தாத வகையில் சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- மருத்துவாின் ஆலோசனைகளைக் கேட்டு, அலா்ஜிக்கான மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- காற்றை சுத்தப்படுத்தும் ஃபில்டா்களை படுக்கை அறைகளில் வைக்கலாம். அவை அலா்ஜியால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, வாய்வழி சுவாசத்தை நிறுத்தும்.
- பகல் நேரங்களில் சுவாசப் பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம்.
இறுதியாக
மூக்கு வழியாக சுவாசிக்கும் போது, ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டு, உடலில் உள்ள கழிவுகள் மற்றும் காா்பன்-டை ஆக்ஸைடு போன்றவை வெளியேற்றப்படுகின்றன என்பதை முதலில் தொிந்து வைத்திருக்க வேண்டும். ஆகவே ஒருவருக்கு வாய்வழியாக மூச்சுவிடும் பழக்கம் இருப்பது தொிந்தால், உடனே மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

