Latest Updates
-
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
Monkey Fever: கர்நாடகாவில் அதிவேகமாக பரவும் குரங்கு காய்ச்சல் - இதன் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
Monkey Fever Symptoms In Tamil: கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் 21 குரங்கு காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த 21 நோயாளிகளில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மீதமுள்ள 13 பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குரங்கு காய்ச்சலின் மருத்துவ பெயர் கியாசனூர் காடு நோய் (KFD). இது மிகவும் தனித்துவமான நோய் மற்றும் இது ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாகும். இந்த வகை குரங்கு காய்ச்சல் பெரும்பாலும் மேற்கு இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கண்டறியப்பட்ட.து. இந்த நோய்த்தொற்றை உண்டாக்கும் வைரஸ் கியாசனூர் காடு நோய் வைரஸ் (KFD). இந்த வைரஸ் ஃபிளவிவிரிடே குடும்பத்தின் ஆர்போவைரஸ் ஆகும்.

இந்த வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களிடம் பரப்புவதற்காக கர்நாடக அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். ஏற்கனவே 21 வழக்குகள் பதிவாகியுள்ளதால், இன்னும் இந்த தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அதிகாரிகள் கவனமாக உள்ளனர்.
குரங்கு காய்ச்சல் என்றால் என்ன? யாருக்கெல்லாம் இத்தொற்று ஏற்படலாம்?
குரங்கு காய்ச்சல் என்பது ஒரு பருவ கால இரத்தக்கசிலை ஏற்படுத்தும் வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சல் சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் பெரும்பாலும் காடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. எனவே தான் காட்டுப் பகுதியை சுற்றியிருப்பவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றின் அபாயம் அதிகம் உள்ளது.
குரங்குகளுடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கு இந்த குரங்கு காய்ச்சல் எளிதில் தொற்றக்கூடும். மேலும் குரங்கு கடித்தாலோ அல்லது குரைங்கு கீறினாலோ, அதன் காரணமாகவும் இந்த நோய் பரக்கூடும். இருந்தாலும், இந்த நோய் குரங்குகளால் மட்டும் பரவாது. மனிதர்களிடம் இருந்து மனிதனுக்கும் வேகமாக பரவும்.
குரங்கு காய்ச்சல் அறிகுறிகள்
குரங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்தால், பின்வரும் அறிகுறிகள் தெரியும். அந்த அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
* திடீரென்று உடல் வெப்பநிலை அதிகரிப்பது
* முதுகு வலி
* குளிர் காய்ச்சல்
* தலைவலி
* குமட்டல் மற்றும் வாந்தி
* மூட்டு வீக்கம்
* தசைவலி
* இருமல்
* மங்கலான பார்வை
நண்பர்களே! நீங்கள் கர்நாடகா பகுதிகளில் இருந்து, மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications