Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு அதிகமா இருக்கா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு... உஷார்..
Menstrual Hygiene In Tamil: ஒவ்வொரு மாதமும் பெண்கள் சந்திக்கும் மாதவிடாயின் போது, சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு இருக்கும். இப்படி அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டால், அதுவும் 1-2 நாட்களுக்கு மேல் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், அதை சாதாரணமாக நினைக்கக்கூடாது.
ஏனெனில் மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் கடுமையான இரத்தப் போக்கை சந்தித்தால், அது உடலில் உள்ள குறிப்பிட்ட பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம் மற்றும் அதிகளவு இரத்தப்போக்கு இரத்தசோகைக்கு வழிவகுக்கலாம்.

எனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் வழக்கத்தை விட அதிகளவு இரத்தப்போக்கை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். பெரும்பாலும் இப்படி அதிகப்படியான இரத்தப்போக்கை 30-50 வயதிற்குட்பட்ட பெண்கள் அதிகம் சந்திக்க நேரிடும்.
ஆகவே இதுவரை நீங்கள் சந்திக்காத அளவில் இரத்தப்போக்கு கடுமையாக இருந்தால், மருத்துவரை அணுகுங்கள். இப்போது எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
1. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு - ஒரு பெண்ணுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளானது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS), உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தைராய்டு பிரச்சனைகள் போன்றவற்றை கொண்டிருந்தால், ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இதன் விளைவாக மாதவிடாய் காலத்தில் அதிகப்படியாக இரத்தப்போக்கு ஏற்படக்கூடும்.
2. கட்டிகள் - கருப்பையின் வெளிச்சுவர்களில் சிறிய அளவிலான தீங்கு விளைவிக்கத கட்டிகள் வளர ஆரம்பித்தால், அதன் காரணமாக அதிகளவிலான அல்லது நீடித்த இரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த வகையான கட்டிகள் கருப்பை பாலிப்கள் என்று அழைக்கப்படும்.
3. கருப்பை செயலிழப்பு - மாதவிடாய் சுழற்சியின் போது கருப்பைகள் முட்டைகளை வெளியிடாமல் இருந்தால், வழக்கமான மாதவிடாய் காலத்தில் உற்பத்தி செய்யப்படும் புரோஜெஸ்டிரோன் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்யப்படாமல் போகும். இதன் விளைவாக ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, கடுமையான இரத்தப்போக்கு ஏற்படக்கூடும்.
4. அடினோமயோசிஸ் - எண்டோமெட்ரியத்தில் இருந்து சுரப்பிகள் கருப்பை தசையில் உட்பொதிக்கப்படும் போது அடினோமயோசிஸ் ஏற்படுகிறது. இப்பிரச்சனை இருந்தாலும், பெண்கள் கடுமையான இரத்தப்போக்கு மற்றும் வலிமிக்க பீரியட்டை சந்திக்க நேரிடும்.
5. கருப்பை நார்த்திசுக்கட்டிகள் - கருப்பையில் புற்றுநோயல்லாத கட்டிகள் குழந்தை பிறக்கும் காலத்தில் வளர்ச்சியடைந்தால், அதன் காரணமாக கடுமையான மற்றும் நீடித்த இரத்தப்போக்கு ஏற்படக்கூடும்.
6. கருப்பையக சாதனம் (IUD) - பெண்களுக்கான கருத்தடை சாதனங்களுள் ஒன்றான ஹார்மோன் அல்லாத கருப்பையக சாதனத்தை பயன்படுத்தும் போது, அதன் பக்கவிளைவாக கடுமையான இரத்தப்போக்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே பெண்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த விரும்பினால், பெரும்பாலும் இந்த முறைக்கு பதிலாக, வேறொன்றையே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
7. கர்ப்பகால சிக்கல்கள் - கருச்சிதைவு ஏற்பட்டால், அது கடுமையான மற்றும் தாமதமான பீரியட்டிற்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி அசாதாரண இடத்தில் இருந்தால், அதன் காரணமாக அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படலாம்.
8. புற்றுநோய் - கருப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருந்தால், அதன் காரணமாகவும் மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படலாம். முக்கியமாக மாதவிடாய் நின்ற பெண்கள் அல்லது கடந்த காலத்தில் அசாதாரணமான பாப் பரிசோதனை செய்திருந்தால், அதனாலும் இது ஏற்படலாம்.
9. பரம்பரை இரத்தப்போக்கு கோளாறுகள் - Von Willebrand's நோய் போன்ற இரத்தப்போக்கு கோளாறுகள் இருந்தால், அதன் காரணத்தினாலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கை சந்திக்கலாம்.
10. மருந்துகள் - அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டின்கள் போன்ற ஹார்மோன் மருந்துகள் மற்றும் வார்ஃபரின் அல்லது எனோக்ஸாபரின் போன்ற இரத்த உறைதல் எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டால், அதன் விளைவாகவும் மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications