Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
பெண்களே! சானிட்டரி பேடுகளை பயன்படுத்தும் போது ஒருபோதும் இந்த தவறுகளை செய்யாதீங்க...
Menstrual Hygiene Day 2023: ஒவ்வொரு மாதமும் பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சியானது பெண்களின் கருப்பையில் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றங்களைக் குறிக்கிறது. மாதவிடாய் சுழற்சியின் போது 3-5 நாட்கள் வரை பெண்களின் உடலில் இருந்து இரத்தம் வெளியேற்றப்படும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி நிகழும். மாதவிடாய் சுழற்சி காலத்தில் பெரும்பாலான பெண்கள் சானிட்டரி பேடுகளை பயன்படுத்தி வருகிறார்கள். சானிட்டரி பேடுகளை பயன்படுத்தும் போது ஒருசில விஷயங்களை அவசியம் நினைவில் கொண்டு பின்பற்ற வேண்டும்.

மாதவிடாய் கால சுகாதாரம் என்பது மிகவும் இன்றியமையாதது. மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்துடன் இல்லாவிட்டால் அது யோனியில் மட்டும் பிரச்சனைகளை ஏற்படுத்தாது, கருப்பையிலும் பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்த மே 28 ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, சானிட்டரி பேடுகளை பயன்படுத்தும் போது பெண்கள் அவசியம் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
4-6 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடுகளை மாற்றவும்
மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி பேடுகளை 4-6 மணிநேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். மாதவிடாய் காலத்தில் வெளியேறும் இரத்தமானது பல்வேறு கிருமிகளை ஈர்க்கும் திறன் கொண்டது. ஈரப்பதமான பகுதிகளில் கிருமிகள் பன்மடங்கு பெருக்கமடைந்து, எரிச்சல், அரிப்பு அல்லது சிறுநீர் பாதை தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கவும், தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கவும், சானிட்டரி பேடுகளை 4-6 மணிநேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
யோனியை சரியாக சுத்தம் செய்யவும்
யோனி பகுதியை சீரான இடைவெளியில் சரியாக சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம். சானிட்டரி பேடுகளை அகற்றிய பின் பெண்கள் தங்களின் யோனி பகுதியை நீரால் தவறாமல் கழுவுவார்கள். ஆனால் நிறைய பெண்கள் சரியான வழியில் யோனியை கழுவுவதில்லை. அதாவது, பல பெண்கள் யோனியை பின்பக்கம் இருந்து முன்பக்கமாக கழுவுகிறார்கள். இப்படி கழுவும் போது, ஆசனவாயில் உள்ள கிருமிகள் யோனியை அடைந்து, யோனியில் மட்டுமின்றி, சிறுநீர்க்குழாயிலும் தொற்றுக்களை ஏற்படுத்திவிடும். எனவே எப்போதும் யோனியை கழுவும் போது, முன்பக்கம் இருந்து பின்பக்கமாக கழுவ வேண்டும்.
சோப்பு அல்லது யோனியை சுத்தம் செய்யும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது
மாதவிடாய் காலத்தில் யோனி பகுதியை சுத்தம் செய்யும் பொருட்களை பயன்படுத்துவது சரியான யோசனையாக தோன்றலாம். ஆனால் இந்த பொருட்களை நன்மையை விளைவிப்பதை விட தீங்கையே விளைவிக்கும். பொதுவாக மாதவிடாய் காலத்தில் யோனியானது தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும் திறன் கொண்டது. செயற்கை பொருட்களால் யோனியை சுத்தம் செய்தால், அது யோனியில் நிகழும் இயற்கை செயல்முறைக்கு இடையூறை ஏற்படுத்தி தொற்றுகள் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடும்.
சானிட்டரி பேடுகளை சரியாக அப்புறப்படுத்தவும்
சானிட்டரி பேடுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். எப்போதும் பேடுகளை டாய்லெட்டில் போட்டு பிளஷ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது அடைப்பை ஏற்படுத்திவிடும். எனவே பயன்படுத்திய பேடுகளை சரியாக மடித்து ஒரு பேப்பரில் வைத்து மடித்து தூக்கி எறிய வேண்டும். முக்கியமாக பேடுகளை தொட்ட பின் கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.
ஒரு சுகாதார முறையை பின்பற்றவும்
பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கின் போது ஒன்றிற்கு மேற்பட்ட சானிட்டரி பேடுகளை ஒரே நேரத்தில் வைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் இது மிகவும் மோசமான பழக்கம் மற்றும் இது கடுமையான தொற்றுக்களை ஏற்படுத்திவிடும். எனவே ஒரு நேரத்தில் ஒரே ஒரு சானிட்டரி பேடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் அதிக இரத்தப்போக்கு இருந்தால், அடிக்கடி பேடுகளை மாற்றுங்கள். இதைப் பின்பற்றினால், மாதவிடாய் காலம் ஆரோக்கியமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

