Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
உங்களுக்கு இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல இந்த சத்து ரொம்பவும் கம்மியா இருக்குன்னு அர்த்தம்...
Symptoms Of Magnesium Deficiency In Tamil: உடலின் செயல்பாடுகள் சீராக நடைபெற வேண்டுமானால், அந்த செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் உடலில் போதுமான அளவில் இருக்க வேண்டும். அப்படி உடல் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்களுள் ஒன்று தான் மக்னீசியம். இந்த மக்னீசியம் தசைகள், நரம்புகள், எலும்புகள் மற்றும் இரத்த சர்க்கரையின் அளவு போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மிகவும் இன்றியமையாதது.
இந்த மக்னீசியம் உடலில் போதுமான அளவு இல்லாவிட்டால், அதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கும். எனவே உடலில் மக்னீசியத்தை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். ஒருவரது உடலில் மக்னீசியம் போதுமான அளவில் இல்லாவிட்டால் அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும்.

அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, மருத்துவரை அணுகினால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். சரி, மக்னீசியம் உடலில் குறைவாக இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். ஆகவே தான், உங்களுக்காக மக்னீசியம் குறைபாட்டின் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளோம். உங்களுக்கு இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
தசைப்பிடிப்பு மற்றும் தசை வலி
தசைகளின் செயல்பாட்டிற்கும், ஆரோக்கியத்திற்கும் மக்னீசியம் மிகவும் இன்றியமையாது. இந்த மக்னீசியம் உடலில் போதுமான அளவில் இல்லாவிட்டால், அதன் விளைவாக கடுமையான தசை வலி மற்றும் தசைப்பிடிப்புக்களால் அவதிப்படக்கூடும். எனவே உங்களுக்கு திடீரென்று தசைகளில் பிடிப்புகள், கால் குடைச்சல், உடல் வலி போன்றவை ஏற்பட்டால், உங்களுக்கு மக்னீசியம் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
உடல் சோர்வு மற்றும் பலவீனம்
மக்னீசியம் உடலின் ஆற்றல் உற்பத்தியில் ஈடுபடுகிறது. எனவே இந்த மக்னீசியம் உடலில் குறைவாக இருக்கும் போது, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல், மிகுந்த உடல் சோர்வையும், பலவீனத்தையும் சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் அடிக்கடி இப்படியான உடல் சோர்வை சந்திக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு மக்னீசியம் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
சீரற்ற இதயத் துடிப்பு
இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டுமானால் மக்னீசியம் உடலில் போதுமான அளவில் இருக்க வேண்டும். இந்த மக்னீசியம் உடலில் குறைந்தால், அது அரித்மியா அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்புக்கு வழிவகுக்கும். ஆகவே உங்களுக்கு திடீரென்று படபடப்பு ஏற்படுகிறது அல்லது இதயத்துடிப்பு சீராக இல்லாததை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்யுங்கள்.
குமட்டல் மற்றும் பசியின்மை
குமட்டல், பசியின்மை போன்ற செரிமான பிரச்சனைகளை சந்திப்பதற்கும், மக்னீசியம் குறைபாட்டிற்கும் தொடர்பு உள்ளது. ஏனெனில் இந்த கனிமச்சத்து செரிமான மண்டலத்தில் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இந்த மக்னீசியம் உடலில் மிகவும் குறைவாக இருந்தால், அது செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வைக்கும். இந்நிலையில் மக்னீசியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கால்சியத்தின் அளவுகளில் ஏற்றத்தாழ்வு
எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், நரம்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய இரண்டும் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும். இந்த கனிமச்சத்துக்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், அது தசைப்பிடிப்புகள், தசை வலி போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய இரண்டு சத்துக்களையும் சமநிலையில் பராமரிக்க வேண்டியது முக்கியம்.
மக்னீசியம் அதிகம் நிறைந்த உணவுகள்
மக்னீசியம் குறைபாடு உள்ளவர்கள், மக்னீசியம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், அந்த குறைபாட்டை சரிசெய்யலாம். இந்த மக்னீசியம் சத்தானது பின்வரும் உணவுகளில் அதிகம் உள்ளன. அவை:
* பூசணி விதைகள் மற்றும் சியா விதைகள்
* பாதாம் மற்றும் முந்திரி
* பசலைக்கீரை
* கருப்பு காராமணி
* சோயா பால், டோஃபு
* வேர்க்கடலை வெண்ணெய்
* கைக்குத்தல் அரிசி
* சால்மன் மீன்
இந்த உணவுகளை தினமும் உட்கொண்டு வந்தால், மக்னீசியம் குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
