Latest Updates
-
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க..
கல்லீரலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்கணுமா? ஆயுர்வேதம் சொல்லும் இந்த பொருட்களே போதும்...!
Fatty Liver Disease: கல்லீரல் கொழுப்பு என்பது உடலில் சேரும் அதீத கொழுப்பு கல்லீரலை சுற்றி படிந்திருக்கும் நிலையாகும். இதில் முதல் நிலை பெரும்பாலானோருக்கு இருக்க கூடிய ஒன்று தான். இது மிதமான உணவு கட்டுப்பாட்டுடன் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இந்த நிலை இரண்டாம் நிலையை அடைந்தால் அதனை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம்.

அதீத உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை சரிவர பின்பற்றினால், இயல்புநிலைக்கு திரும்பலாம். இதை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியம் செய்தால், கல்லீரல் புற்றுநோயாகவோ அல்லது கல்லீரல் செயலிழப்பு நிலையை ஏற்படுத்தக்கூடும். மேலும், இதன் அறிகுறிகளை இறுதி நிலையிலேயே கண்டுபிடிக்க முடியும் அல்லது வேறு ஏதேனும் உடல் உபாதைகளுக்காக ஸ்கேன் செய்யும் போது மட்டுமே இது கண்டுபிடிக்கபடலாம். இந்த கல்லீரல் கொழுப்பு நோயை குணமாக்க உதவக் கூடிய 5 ஆயுர்வேத பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள்
ஆயுர்வேதத்தில் தங்க மசாலா என அழைக்கப்படும் மஞ்சள், அதன் சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு பண்பு, மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளுக்கு பெயர்பெற்றது. இதில் இருக்கும் குர்மின் எனும் வேதிப்பொருள் கல்லீரல் அழற்சி, உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் ஏற்றத்தாழ்வால் ஏற்படும் செல் சேதத்தை குறைக்க உதவுகிறது. கொழுப்பு கல்லீரல் நோயை தடுக்க உணவில் மஞ்சளை டீ, குழம்புகள், மற்றும் நமக்கு விருப்பமான வடிவில் எடுத்து கொள்ளலாம்.
அம்ருதவல்லி
அம்ருதவல்லி பொதுவாக சீந்தில் கொடி என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறந்த சக்திவாய்ந்த மூலிகையாக ஆயுர்வேதத்தில் இருக்கிறது. இதன் நச்சு நீக்கும் பண்புகளுக்காகவே பெயர் பெற்றது. இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுவதிலும், புதிய கல்லீரல் செல்களை மீண்டும் உருவாக்குவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
இது இயற்கையாக கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்கும் முகவராக செயல்படுவதோடு, கொழுப்பு கல்லீரலை குணப்படுத்தவும் உதவுகிறது. அம்ருதவல்லியை சாறு, பொடி அல்லது காப்ஸ்யூல் என பல வடிவங்களில் எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய்
ஆம்லா என்று அழைக்கப்படும் நெல்லிக்காய் அல்லது இந்திய வகை நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது. இது கல்லீரலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரலில் நச்சுக்களை நீக்கி கல்லீரல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. நெல்லிக்காயை முழுதாகவோ, சாறாகவோ, தூள் வடிவிலோ அல்லது தேனில் ஊறவைத்தோ சாப்பிடலாம்.
திரிபலா
ஹரிடகி, பிபிதாகி மற்றும் அமலாகி ஆகிய மூன்று பழங்களை உள்ளடக்கிய ஒரு ஆயுர்வேத கலவையே திரிபலா என்று அழைக்கப்படுகிறது. இந்த கலவை கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும், நச்சு தன்மையை நீக்குவதிலும் சிறப்பாக செய்யப்படுகிறது.
திரிபலா பித்த நீர் சுரப்பை ஊக்குவித்து கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. இது கொழுப்பின் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் இரவில் உட்கொள்வது சிறப்பான பலன்களை தரவல்லது.
பூண்டு
சக்திவாய்ந்த மருத்துவ குணங்கள் கொண்ட பொதுவான சமையலறை மூலப்பொருள்களில் ஒன்று பூண்டு. தேசிய சுகாதார நிறுவனம் பூண்டில் அல்லிசின் மற்றும் செலினியம் உள்ளது என கண்டுபிடித்திருக்கிறது. இது நச்சுகளை வெளியேற்ற கல்லீரல் நொதிகளை செயல்படுத்தி கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.
பூண்டு நோய் எதிர்ப்பு பண்பு, மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்டுள்ளதால், கல்லீரல் கொழுப்பிற்கு நன்மை பயக்கும். தினசரி உணவில் பூண்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

