Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம்
கல்லீரல் முழுமையாக சேதமடைந்துள்ளது என்பதை உணர்த்தும் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
Liver Disease In Tamil: நமது உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இந்த கல்லீரல் நமது உடலில் சுமார் 500-க்கும் அதிகமான வேலைகளை செய்கிறது. அதில் இரத்தத்தில் இருந்து நச்சுக்களை நீக்குவது, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிப்பது, இரத்தம் உறைவதை தடுப்பது, பித்த நீரை உற்பத்தி செய்வது மற்றும் வெளியேற்றுவது, நொதிகளை செயல்படுத்துவது, கிளைகோஜன், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேமிப்பது, கொழுப்புகள், புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை வளர்சிதை மாற்றம் செய்வது, பிலிரூபின், கொலஸ்ட்ரால், ஹார்மோன்கள் மற்றும் மருந்துகளை வெளியேற்றுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இவ்வளவு வேலைகளை செய்வதாலோ என்னவோ, கல்லீரலில் பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. கல்லீரலில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், நமது ஒட்டுமொத்த உடலிலும் அதன் தாக்கம் நன்கு தெரியும். ஆனால் கல்லீரலில் பிரச்சனை இருப்பதை நமது உடல் வெளிப்படுத்தும் போது, பெரும்பாலானோர் அவற்றை புறக்கணித்துவிடுகின்றனர். ஏனெனில் அந்த அறிகுறிகள் நாம் தினசரி சந்திக்கும் பொதுவான உடல்நல பிரச்சனைப் போன்று இருக்கும். இப்போது கல்லீரல் சேதமடைந்திருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

1. உடல் சோர்வு
ஒருவரது கல்லீரல் சரியாக செயல்படாமலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ, அந்நபர் மிகுந்த சோர்வை சந்திக்க நேரிடும். இப்படி மிகுதியான உடல் சோர்வை தொடர்ந்து பல நாட்களாக சந்தித்தால், அதை சற்றும் புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், உடலில் உள்ள புரோட்டீனில் இருந்து போதுமான ஆற்றல் கிடைக்காமல், மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும்.
2. பசியின்மை
கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது சரியாக செயல்படாமல் இருந்தாலோ, சரியாக பசிக்காது. எனவே உங்களுக்கு சமீப நாட்களாக பசி எதுவும் எடுக்காமல் இருந்தால், அதை புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். கல்லீரலில் பிரச்சனை இருக்கும் போது, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் குறைவதன் காரணமாக பசியின்மையை சந்திக்க நேரிடுகிறது.
3. வயிற்று வலி
கல்லீரல் கடுமையாக சேதமடைந்திருந்தால் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை தான் வயிற்று வலி. ஒருவருக்கு வயிற்று வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனால் வயிற்று வலியுடன், மிகுந்த உடல் சோர்வையும் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள். ஆரம்பத்திலேயே கல்லீரல் பிரச்சனையை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்கலாம்.
4. மஞ்சள் நிற சருமம் மற்றும் கண்கள்
உங்கள் கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறத? அப்படியானால் கல்லீரல் சரியாக செயல்படாமல், இரத்தத்தில் பிலிரூபின் அதிகம் தேங்கியுள்ளது என்று அர்த்தம். இரத்தத்தில் பிலிரூபின் அதிகரித்து, அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக உயிரிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது. எனவே இந்த அறிகுறியை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. அடர் நிற சிறுநீர்
கல்லீரலில் கடுமையான சேதம் ஏற்பட்டால், அதன் விளைவாக சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். அதுவும் சிறுநீரானது அடர் நிறத்தில் வெளியேறும். இப்படி அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவதற்கு பல ஆரோக்கிய பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், அதன் விளைவாக அடர் நிறத்தில் சிறுநீரை கழிக்க நேரிடும். இருப்பினும் அடர் நிற சிறுநீர் கல்லீரல் செயலிழப்பின் தீவிர அறிகுறி என்பதால், அதை சற்றும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











