Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
நைட் நேரத்துல இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்..
Liver Damage Symptoms In Tamil: நமது உடலிலேயே கல்லீரல் மிகவும் முக்கியமான பெரிய உறுப்பாகும். இது அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில் உதரவிதானத்திற்கு கீழே மற்றும் இரைப்பைக்கு மேலே அமைந்துள்ளது. இந்த கல்லீரல் உடலில் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை உற்பத்தி செய்யுவும், மெட்டபாலிசத்திற்கும், நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றவும், சத்துக்களை சேமிக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ளவும் என பல முக்கியமான வேலைகளை செய்கிறது.
இவ்வளவு வேலைகளை செய்யும் கல்லீரலில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. கல்லீரலில் பிரச்சனை இருந்தால், அதன் விளைவாக உடலின் பல முக்கியமான செயல்பாடுகளின் வேகம் குறைந்து பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த கல்லீரல் பிரச்சனையை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், பின் கல்லீரல் செயலிழந்துவிடுவதோடு, ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

பொதுவாக கல்லீரலில் பிரச்சனை வருவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கங்களும் தான் என்று நிபுணர்கள் பலர் கூறுகின்றனர். ஒருவரது கல்லீரல் கடுமையாக சேதமடைந்திருந்தால், இரவு நேரத்தில் ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது கல்லீரல் சேதத்தைக் குறிக்கும் சில இரவுநேர அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. பசியின்மை
எப்போது ஒருவரது கல்லீரல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதோ, அந்நபரின் செரிமானம் மோசமாக இருக்கும் மற்றும் இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகமாக இருக்கும். இது இப்படியே நீடிக்கும் போது, ஒருகட்டத்தில் அது அடிக்கடி குமட்டலை ஏற்படுத்துவதோடு, பசியுணர்வைக் குறைத்து, பசி ஏற்படுவதையே தடுத்துவிடும்.
ஒருவரது உடலில் பசியைக் கட்டுப்படுத்தும் இரண்டு ஹார்மோன்கள் உள்ளன. அவை லிப்டின் மற்றும் க்ரெலின். இதில் லிப்டின் பசியைக் குறைக்கும். க்ரெலின் பசியை அதிகரிக்கும். எப்போது கல்லீரலில் தீவிர பிரச்சனை உள்ளதோ அல்லது கல்லீரல் செயலிழந்து உள்ளதோ, அப்போது க்ரெலின் அளவு அதிகரிக்காது. இதன் விளைவாக பசி உணர்வே ஒருவருக்கு ஏற்படாது.
2. தூக்கமின்மை
மருத்துவர்களின் கூற்றுப்படி, சீரற்ற மற்றும் தொடர்ச்சியில்லாத தூக்க முறையானது கல்லீரல் செயலிழப்பின் பொதுவான அறிகுறிகளாகும். ஆய்வுகளின் படி, உடலில் மெலடோனின் மற்றும் க்ளுக்கோஸ் செயல்முறையில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ, அப்போது ஒருவரால் சரியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. எனவே இரவு நேரத்தில் தூக்கம் வராமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், கல்லீரலில் ஏதேனும் தீவிர பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.
3. சரும அரிப்பு
கல்லீரல் செயலிழப்பின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்று தொடர்ச்சியான மற்றும் நாள்பட்ட அரிப்பு. அதுவும் இந்த அரிப்பு இரவு நேரத்தில் தூங்க செல்லும் போது தீவிரமாக இருக்கும். முக்கியமாக இந்த அரிப்பு உடலின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். பெரும்பாலும் உள்ளங்கை, உள்ளங்கால் அல்லது கைகால்களில் ஏற்படும். அதுவும் இந்த அரிப்பு ஒரே இடத்தில் மட்டும் ஏற்படாமல், உடல் முழுவதும் கூட ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே காரணமின்றி திடீரென்று சருமத்தில் அரிப்பை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி காரணத்தை கண்டறியுங்கள்.
4. வீக்கம்
இரவு நேரத்தில் தூங்க செல்லும் போது, உங்களின் வயிற்றுப் பகுதி வீங்கியிருப்பதை அல்லது மிகுந்த உப்புசமாக இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் அது கல்லீரல் செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், திரவங்களானது அடிவயிற்றுப் பகுதியைச் சுற்றி தேங்குவதோடு, கடுமையான வலியையும் உண்டாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே உங்கள் வயிற்றுப் பகுதியைச் சுற்றி திடீரென்று வீக்கத்தை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
5. கண் மற்றும் வாய் வறட்சி
கல்லீரல் செயலிழப்பின் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி கண்கள் மற்றும் வாயில் வறட்சியை சந்திப்பது. நிபுணர்களின் கூற்றுப்படி, முதன்மை பித்தநீர்க்குழாய் அழற்சி என்பது ஒரு தன்னுடல் தாக்க நிலை. இது கல்லீரலின் பித்த நாளங்கள் மெதுவாக இறக்க காரணமாகிறது. இப்படியான நிலையால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நபர் வாய் மற்றும் கண்களில் மிகுந்த வறட்சியை சந்திக்க நேரிடும். எனவே இப்படியான அறிகுறியை திடீரென்று சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் திடீரென்று இரவு நேரங்களில் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி, அது என்னவென்று பரிசோதனை செய்து பார்த்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications