Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா?
Kiss Day 2024: அடிக்கடி லிப் கிஸ் குடுத்தா இவ்வளவு நன்மை இருக்கா? இனிமே மிஸ் பண்ணிடாதீங்க...
Kiss Day 2024: காதலர் வாரத்தின் 7 ஆவது நாள் முத்த தினம் கொண்டாடப்படுகிறது. முத்தம் என்பது அன்பை வெளிக்காட்டும் ஒரு வழியாகும். முத்தம் காதலை வெளிக்காட்டும் போதோ அல்லது வாழ்த்துக்களை தெரிவிக்கும் போதோ கொடுக்கப்படுகிறது. முக்கியமாக தம்பதிகள் ஒவ்வொரு நாளும் உதட்டோடு உதடு முத்தமிட வேண்டும்.
இப்படி தினமும் முத்தமிடும் போது, அன்பு, பிணைப்பு, நெருக்கம் போன்றவை அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்பது தெரியுமா? ஆம், முத்தமானது வெறும் அன்பின் வெளிப்பாடு மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது.

அதுவும் திருமணமான தம்பதிகள் தங்கள் துணைக்கு தினமும் உதட்டோடு உதடு முத்தத்தைக் கொடுக்கும் போது, நினைத்துப் பார்க்க முடியாத அளவில் அற்புதங்கள் உடலில் நிகழ்கிறது. இன்று காதலர் வாரத்தின் முத்த தினம் என்பதால், ஒரு உதட்டு முத்தம் எப்படி உடலுக்கு நன்மைகளை வழங்குகிறது, ஏன் தினமும் முத்தம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து காண்போம்.
1. மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்
நீங்கள் செய்யும் வேலை மன அழுத்தம் நிறைந்த வேலையா? அப்படியானால் தினமும் உங்கள் துணைக்கு லிப் கிஸ் கொடுங்கள். ஏனெனில் முத்தம் கொடுக்கும் போது, உடலில் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோலின் அளவு குறைகிறது. இதன் விளைவாக மனதில் உள்ள பதட்டம், இறுக்கம் போன்றவை நீங்கி, மனம் ரிலாக்ஸாகவும், அமைதியாகவும் இருக்கும். அதனால் தான் பதட்டம் அல்லது மன அழுத்தத்துடன் இருப்பவரை அரவணைத்து, பாசத்தைக் காட்டி முத்தமிடும் போது, அவர்களது மனம் சாந்தமடைகிறது.
2. இரத்த அழுத்தம் குறையும்
ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் போது, இதயத் துடிப்பு வேகமாக இருக்கும். இதனால் இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் அதிகரித்து, உடலில் இரத்த அழுத்தமானது சட்டென்று குறைகிறது.
3. மனநிலை சிறப்பாக இருக்கும்
முத்தம் கொடுக்கும் போது, மூளை ரசாயனங்களின் காக்டெயிலை வெளியிடுகிறது. அதாவது ஆக்ஸிடோசின், டோபமைன் மற்றும் செரடோனின் போன்ற கெமிக்கல்களை வெளியிட்டு, மனநிலையை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது.
4. மாதவிடாய் கால பிடிப்புகள் சரியாகும்
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலியால் அதிகம் சிரமப்படுவார்கள். ஆனால் இக்காலத்தில் பெண்கள் தங்கள் துணைக்கு முத்தம் கொடுத்தால், அது தசைகளை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வலிகளில் இருந்து நிவாரணத்தைத் அளிக்கிறது. இதுவரை நீங்கள் முயற்சி செய்ததில்லை என்றால் அடுத்தமுறை ட்ரை செய்து பாருங்கள்.
5. நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும்
உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் போது வேகமாக சுவாசிக்க நேரிடும். சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கும் நாம், முத்தம் கொத்த பின் நிமிடத்திற்கு 60 முறை சுவாசிப்போம். இந்த நேரத்தில் அதிகமாக மூச்சை உள் வாங்கி வெளியிடும் போது, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
6. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் பரிமாறப்படுகிறது. இப்படி வாய் பாக்டீரியாக்கள் பரிமாறப்படும் போது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதுவும் ஒருமுறை லிப் கிஸ் கொடுக்கும் போது, நாம் உருவாக்கும் அதிகப்படியான உமிழ்நீர் ஏராளமான கொடிய பாக்டீரியாக்களை அழிக்கிறது என்பது தெரியுமா?
7. கலோரிகள் குறையும்
ஒரு நிமிடம் உதட்டோடு உதடு உணர்ச்சிமிக்க முத்தம் கொடுக்கும் போது, உடலில் இருந்து 26 கலோரிகள் எரிக்கப்படுவதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் லிப் கிஸ் கொடுக்கும் போது, 34 முக தசைகளும், 113 தோரணை தசைகள் உட்பட சுமார் 146 தசைகள் இந்த தருணத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரியுமா?
எனவே இவ்வளவு நன்மைகளை வழங்கும் லிப் கிஸ்ஸை இனிமேல் உங்கள் துணையிடம் இருந்து பெற தவறாதீர்கள். அதுவும் இன்று கிஸ் டே என்பதால், அதை காரணமாக கொண்டு கூடுதல் நேரம் முத்தத்தைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
