Latest Updates
-
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம் -
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
ஆந்திரா முட்டைக்கோஸ் பச்சடி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
தங்க நகைகள் ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுக்கப்படுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க..
கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
Symptoms Of Kidney Disease In Tamil: நமது உடலில் சிறுநீரகங்களானது மிகவும் முக்கியமான உறுப்புக்களாகும். இவை இரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்கள், யூரியா, கிரியேட்டினைன் போன்ற நச்சுக்களை சிறுநீரின் வடிவில் வெளியேற்றுகின்றன. இப்படி சுத்தப்படுத்தும் வேலையை சிறுநீரகங்கள் செய்வதால், இவற்றில் நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
சிறுநீரகங்களில் நோய்கள் இருந்தால், அவற்றின் செயல்பாடு பாதிக்கப்படும். அதோடு உடலின் பல செயல்பாடுகளும் மெதுவாக பாதிக்கப்படத் தொடங்கும். சிறுநீரக நோய்களை ஒருவர் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக இதய நோய், சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றின் அபாயம் அதிகரிப்பதோடு, சில சமயங்களில் மரணத்தையும் உண்டாக்கலாம்.

எனவே சிறுநீரக நோயின் அறிகுறிகளை ஒவ்வொருவருமே தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். சிறுநீரகங்களில் நோய் இருந்தால், அது உடலில் பல அறிகுறிகளை வெளிக்காட்டும். குறிப்பாக கால்களில் ஒருசில அறிகுறிகள் தெரியத் தொடங்கும். இந்த அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால், உங்களுக்கு சிறுநீரக நோய் இருக்க வாய்ப்புள்ளது. இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
கால் வீக்கம்
சிறுநீரக நோய் இருந்தால் முதலில் தெரியும் முக்கியமான அறிகுறி கால் வீக்கம். ஏனெனில் சிறுநீரகங்கள் மோசமாக செயல்படும் போது, உடலில் இருந்து அதிகப்படியான திரவம் மற்றும் சோடியம் போன்றவை சரியாக வெளியேற்றப்படாமல், அப்படியே உடலில் தேங்கி வீக்கத்தை உண்டாக்கும். அதுவும் இந்த வீக்கமானது பாதங்களில் தான் பெரும்பாலும் தெரியும்.
சரும நிற மாற்றம்
சிறுநீரக நோயானது நீண்ட நாட்களாக இருந்தால், சருமத்தில் மாற்றங்களைக் காணக்கூடும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் பாதங்களில் உள்ள சருமத்தில் தெரியும். அதுவும் சருமம் கருமையாக அல்லது ஒருவித பழுப்பு நிறத்தில் காணப்படும் அதோடு சருமத்தின் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக பாதங்கள் வறண்டு, தோல் செதில் செதிலாக உரியத் தொடங்கும். இம்மாதிரியான அறிகுறிகளை பாதங்களின் அனுபவித்தால் உடனே அதை கவனியுங்கள்.
தொடர்ச்சியான அரிப்பு
ஒருவர் தொடர்ச்சியாக பாதங்களில் கடுமையான அரிப்பை சந்தித்தால், அது சிறுநீரக நோயுடன் தொடர்புடைய அறிகுறியாகும். ஏனெனில் எப்போது சிறுநீரகங்கள் சரியாக நச்சுக்களை வெளியேற்றாமல் உள்ளதோ, அப்போது அந்த நச்சுக்கள் இரத்த ஓட்டத்தில் குவிந்து, அரிப்புக்களை ஏற்படுத்துகிறது.
நரம்பு பிரச்சனைகள்
சிறுநீரக நோயானது நரம்புகளை சேதப்படுத்தும். இதன் விளைவாக நரம்பு பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். அதுவும் கால்களில் கூச்சம், உணர்வின்மை, எரிச்சல் உணர்வு போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும். ஆகவே உங்களுக்கு திடீரென்று காரணமின்றி சில நாட்களாக இந்த பிரச்சனைகள் இருந்தால், அதை புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
கால் வலி
தாங்க முடியாக கால் வலிக்கு சிறுநீரக நோயும் ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாக சிறுநீரக நோய் முற்றிய நிலையில் கால்சிஃபிலாக்ஸிஸ் என்னும் அரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். கால்சிஃபிலாக்ஸிஸ் என்பது கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படக்கூடியது. இந்நிலையில் கால்களில் குணமடையாத காயங்களுடன், கடுமையான வலியை சந்திக்க நேரிடும். இது பெரும்பாலும் பாதங்களின் அடிப்பகுதியில் ஏற்படும்.
நகங்களில் மாற்றங்கள்
நகங்களின் தோற்றங்கள் மற்றும் அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் கால் விரல் நகங்களானது நிறம் மாறி, கெட்டியாகவோ அல்லது எளிதில் உடையக்கூடியதாகவோ இருந்தால், சிறுநீரகங்களில் ஏதோ தீவிர பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அதை உடனே கவனித்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம், சிறுநீரக நோயில் இருந்து எளிதில் குணமடையலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications