Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அசால்ட்டா இருக்காதீங்க.. உங்க சிறுநீரகம் ஆபத்துல இருக்குன்னு அர்த்தம்..
Kidney Damage Symptoms In Tamil: ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் சிறுநீரகங்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏனெனில் சிறுநீரகங்கள் நமது உடலில் இருந்து கழிவுகளை அகற்றுகின்றன, திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிக்கின்றன, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவுகின்றன.
இவ்வளவு முக்கியமான பணிகளை செய்யும் சிறுநீரகங்களானது சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் சேதமடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் சிறுநீரகங்களில் ஏற்படும் சேதமானது ஒரே இரவில் ஏற்பட்டுவிடாது. அது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் ஏற்படும். அப்படி ஒருவரது சிறுநீரகங்கள் சேதமடைந்து கொண்டிருந்தால், அது ஒருசில அறிகுறிகளை ஆரம்பத்திலேயே வெளிக்காட்டும்.

ஆனால் அந்த அறிகுறிகள் நாம் தினமும் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று இருப்பதால், நிறைய பேர் அவற்றை புறக்கணிக்கின்றனர். இப்போது சிறுநீரகங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
1. தொடர்ச்சியான உடல் சோர்வு மற்றும் பலவீனம்
சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், இரத்தத்தில் நச்சுக்கள் தேங்கத் தொடங்குவதோடு, உடலின் ஆற்றல் அளவுகள் பாதிக்கப்படும். இது தவிர சிறுநீரகங்களால் எப்போதும் போதுமான எரித்ரோபொய்டின் என்னும் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்தை தூண்டும் ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியவில்லையோ, அப்போது அது இரத்த சோகையை உண்டாக்கும். எனவே நீங்கள் தொடர்ச்சியான உடல் சோர்வு மற்றும் மிகுந்த உடல் பலவீனத்தை சந்தித்தால், அதுவும் சிறு வேலை செய்தாலும், சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள்
நீங்கள் சிறுநீர் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்களை சந்தித்தாலோ, சிறுநீரின் நிறத்தில் மாற்றத்தை கண்டாலோ, உங்கள் சிறுநீரகங்களில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் இரவு நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீரை கழிக்க எழுந்தாலோ அல்லது இரத்தம் கலந்த சிறுநீர், நுரையுடனான சிறுநீர் அல்லது அடர் நிறத்தில் சிறுநீர் என சிறுநீரில் மாற்றத்தைக் கண்டால், சிறுநீரகங்களில் பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.
3. பாதங்கள் அல்லது முகத்தில் வீக்கம்
சிறுநீரகங்களால் எப்போது உடலில் இருந்து அதிகப்படியான சோடியம் மற்றும் திரவங்களை வெளியேற்ற முடியவில்லையோ, அதன் விளைவாக கால்கள் மற்றும் முகத்தில் வீக்கங்களை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் அடிக்கடி இப்படியான வீக்கங்களை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், சீக்கிரம் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து பாருங்கள்.
4. தொடர்ச்சியான அரிப்பு அல்லது சரும மாற்றங்கள்
சிறுநீரகங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டிருந்தால், அதன் தாக்கம் சருமத்தில் தெரியும். ஏனெனில் சிறுநீரகங்களால் சரியாக செயல்படாமல் இருந்தால், இரத்தத்தில் நச்சுக்கள் தேங்கி, சருமத்தில் தொடர்ச்சியான அரிப்பை உண்டாக்கும். அதோடு சருமத்தை அதிகம் வறண்டு போகச் செய்து, சருமத்தின் தோற்றத்தையே மாற்றிவிடும். எனவே திடீரென்று காரணமின்றி உங்கள் சருமத்தில் அரிப்பை சந்தித்தால், சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. பசியின்மை, மெட்டாலிக் சுவை அல்லது குமட்டல்
உடலில் உள்ள சிறுநீரகங்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தால், உடலில் யூரிமிக் நச்சுக்கள் தேங்கி, வாயில் மெட்டாலிக் சுவை, வாய் துர்நாற்றம், குமட்டல் அல்லது பசியின்மை போன்ற இரைப்பைக்குடல் அறிகுறிகளை சந்திக்க நேரிடும். பலரும் இப்படியான அறிகுறிகளை செரிமான பிரச்சனைகளாக கருதி, சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவார்கள். ஆனால் இந்த அறிகுறிகள் சிறுநீரக சேதத்தின் ஆரம்ப கால அறிகுறிகளுள் ஒன்றாகும்.
எனவே நண்பர்களே! நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை தொடர்ந்து காரணமின்றி சந்தித்தால், அவற்றை சாதாரணமாக கருதாமல், உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து, உடனே சிகிச்சை மேற்கொள்ள தொடங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications