Latest Updates
-
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது!
இந்த அறிகுறிகளை தொடர்ந்து 1 வாரத்துக்கு மேல் சந்திச்சா.. சிறுநீரக புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Kidney Cancer Symptoms: முந்தைய காலத்தில் புற்றுநோய் வந்தாலே மரணம் தான் அதற்கு தீர்வாக இருந்தது. ஆனால் தற்போது மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் இந்த உயிரைப் பறிக்கும் கொடிய நோய்க்கு பலவிதமான சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டுபிடித்தால் இந்த சிகிச்சைகள் நல்ல பலனைத் தந்து, முழுமையாக குணமடைய உதவி புரியும். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் சிறுநீரகங்களைத் தாக்கும் புற்றுநோய் தான் சிறுநீரக புற்றுநோய்.

சிறுநீரகங்களானது வயிற்று உறுப்புகளுக்கு பின் அமைந்துள்ளன. முதுகெலும்பின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு சிறுநீரகம் உள்ளது. பொதுவாக சிறுநீரக புற்றுநோயானது பெரியவர்களை தாக்கும் மிகவும் பொதுவான ஒரு வகையாகும். சிறுநீரகங்கள் சுத்திகரிக்கும் வேலையை செய்வதால், இந்த சிறுநீரகங்களில் பலவிதமான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
அதுவும் சமீப காலமாக சிறுநீரக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதற்கு கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (CT) ஸ்கேன் போன்ற இமேஜிங் நுட்பங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுவது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த சோதனைகள் தற்செயலாக அதிக சிறுநீரக புற்றுநோய்களைக் கண்டறிய வழிவகுக்கும்.
இந்த சிறுநீரக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால், அந்த புற்றுநோய் கட்டிகள் சிறியதாக இருப்பதோடு, சிறுநீரகத்தில் மட்டுமே இருக்கும். மேலும் சிகிச்சை அளிக்கவும் வசதியாக இருக்கும். அதற்கு சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். கீழே சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. சிறுநீரில் இரத்தம்
ஒருவர் இரத்தம் கலந்த சிறுநீரை வெளியேற்றினால், அது சிறுநீரக புற்றுநோயின் பொதுவான அறிகுறியாகும். அதுவும் கட்டியின் அளவைப் பொறுத்து சிறுநீரின் நிறம் அடர் சிவப்பு நிறம் வரை காணப்படும். எனவே சிறுநீரின் நிறத்தில் தொடர்ந்து வித்தியாசமான மாற்றத்தைக் கண்டால் அதை சாதாரணமா எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
2. கீழ் முதுகு வலி
விலா எலும்புகளுக்கு கீழே, பக்கவாட்டு இடுப்பு பகுதியில் மந்தமான வலி அல்லது கூர்மையான வலியை சந்தித்தால், அது சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இப்படியான வலி தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ வரலாம். மேலும் நாளுக்கு நாள் இடுப்பு வலி மோசமாக இருக்கலாம்.
3. பசியின்மை மற்றும் எடை இழப்பு
பசியின்மையுடன் உங்களின் உடல் எடை திடீரென்று குறைவதை காண்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக புற்றுநோய் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. உங்கள் பசி மற்றும் உடல் எடையில் திடீர் மாற்றத்தைக் காண்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. மிகுந்த உடல் சோர்வு
நல்ல போதுமான ஓய்வை எடுத்த பின்னரும் ஒருவர் மிகுந்த உடல் சோர்வு அல்லது தொடர்ச்சியான களைப்பை உணர்ந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுவும் இந்த உடல் சோர்வுடன் இரத்த சோகையும் சேர்ந்திருந்தால், அது சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
5. உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும், இது சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறியாகவும் இருக்கலாம். குறிப்பாக இரத்த அழுத்தம் திடீரென்று காரணமின்றி அதிகரித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
6. அடிவயிற்றில் கட்டி
உங்கள் அடிவயிற்றுப் பகுதியில் கட்டி இருப்பதை உணர்கிறிர்களா? அப்படி அடிவயிற்றுப் பகுதியில் ஏதேனும் வித்தியாசமான மாற்றங்களைக் கண்டால், அதை சற்றும் தாமதிக்காமல் உஉடனே மருத்துவரை அணுகி என்னவென்பதை பரிசோதனை செய்து பாருங்கள்.
7. பிற அறிகுறிகள்
சிறுநீரக புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் பிற சாத்தியமான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளில் தொடர்ச்சியான காய்ச்சல், வீங்கிய கணுக்கால் மற்றும் கால்கள், சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கையில் மாற்றம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி போன்றவை அடங்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், அதை சற்றும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து பாருங்கள். சிறுநீரக புற்றுநோயாக இருந்தால், ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கும் போது, முழுமையாக குணப்படுத்திவிடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
