Latest Updates
-
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும்
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
Khushbu Weight Loss Secret: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை குஷ்பு சுந்தர். 56 வயதான குஷ்பு அவர்கள் திரையுலகில் மட்டுமின்றி, தற்போது தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவராகவும் உள்ளார். பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் நன்கு கொழுகொழுவென்று இருந்தார். ஆனால் தற்போது இவரது லுக்கை பார்க்கும் போது, பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவில் உடல் எடை குறைந்து ஒல்லியாக உள்ளார்.

56 வயதான குஷ்பு சுந்தர் 5 ஆண்டுகளில் சுமார் 40 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார். அதுவும் இவ்வளவு எடையைக் குறைக்க இவர் கடுமையான டயட்டையோ அல்லது ஜிம்மில் பல மணிநேரத்தை செலவழிக்கவோ இல்லை. மாறாக, இவர் தனது வாழ்க்கை முறையில் செய்த மாற்றங்களின் பலனாகவே இந்த அளவு உடல் எடையைக் குறைத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு அவர்கள் தனது எடை இழப்பு பயணம் மற்றும் உணவுடனான உறவு குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் பலரும் டயட் தான் இந்த அளவு உடல் எடையைக் குறைக்க காரணமாக இருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் ஒரு சமநிலையான மற்றும் நிலையான உணவுப் பழக்கம் தான் ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்கவும், அதை நீண்ட காலமாக பராமரிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது என்றார்.
ஜப்பானிய உணவுப் பழக்கம்
மேலும் அந்த நேர்காணலில், பொதுவாக நாம் சில மணிநேரங்களுக்கு ஒருமுறை பசித்தாலும் சரி, பசிக்காவிட்டாலும் சரி சாப்பிடுவோம். ஆனால் அப்படி சாப்பிடுவதற்கு பதிலாக நன்கு பசி எடுக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும் என்று குஷ்பு கூறியிருந்தார். வெறும் தேவைக்காகவோ அல்லது சந்தோஷத்திற்காகவோ மட்டும் சாப்பிடுவது, உணவுடன் ஆரோக்கியமற்றதொரு உறவை உருவாக்கக்கூடும். எனவே நான் நன்கு பசி எடுத்த பின்னர் தான் சாப்பிடுவேன் என்றும் கூறியிருந்தார்.
மேலும் "எடையைக் குறைக்க உதவிய மற்றொரு விஷயம், ஜப்பானிய உணவுப் பழக்கம். நாம் பொதுவாக என்ன செய்கிறோம்? ஒரு பெரிய தட்டில் உணவை எடுத்துக் கொண்டு சாப்பிடுகிறோம். ஆனால் ஜப்பானியர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஒரு சிறிய கிண்ணத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். உண்மையில், உடலுக்குத் தேவைப்படுவது அவ்வளவுதான்," என்று அவர் கூறினார்.
ஜப்பானியர்களின் உணவு முறை சிறப்பாக செயல்படுவதற்கு காரணம், அதில் உணவுகள் அனைத்தும் சிறிய அளவில் உட்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சாப்பிடுபவர்களுக்கு வயிறு நிறைந்துவிட்டதா அல்லது இன்னும் தேவைப்படுகிறதா என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஜப்பானியர்கள் இந்த பழக்கத்தை தங்களின் 80 மற்றும் 90-களிலும் பின்பற்றுகின்றனர். இதுவே அவர்கள் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம். அதை நான் கண்டறிந்தேன். அதனால் இப்போது எனது வீட்டில் எனக்கென ஒரு சிறிய தட்டை வைத்துக் கொண்டேன் என்று குஷ்பு கூறினார்.
குஷ்புவின் எடை இழப்பு பயணம்
சமீபத்தில் சிஎன்பிசி-டிவி 18-க்கு அளித்த பேட்டியில், குஷ்பு ஒரு கட்டத்தில் தான் 98 கிலோ உடல் எடையுடன் இருந்ததாக கூறியிருந்தார். மேலும் தனக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணம் வந்ததெனில், அது ரஜினிகாந்துடன் நடித்த அண்ணாத்த படத்தைப் பார்க்கும் போது தான் என்றும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, அவர் அதிக உடல் எடையால் முழங்கால் வலியை அனுபவிக்க தொடங்கியதாகவும், அதன் காரணமாக உடற்பயிற்சி பயணத்தைத் தொடங்க முடிவு செய்ததாகவும் கூறினார்.
நடிகை-அரசியல்வாதியுமான குஷ்பு அவர்கள் தனது உடல் எடையைக் குறைக்க தனக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் விட்டிருக்கக்கூடும் என்று பலர் நினைக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக, அவர் தான் உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்துவதில் தான் கவனம் செலுத்தியுள்ளார். அதாவது, குஷ்புவிற்கு மட்டன் பிரியாணி ரொம்ப பிடிக்கும் என்பதால், அந்த பிரியாணியை சாப்பிடுவதை நிறுத்தாமல், ஒரு சிறிய பௌல் பிரியாணியுடன் ஒரு துண்டு மட்டனை எடுத்துக் கொள்வாராம்.
மேலும், இந்த எடை இழப்பு பயணத்தின் போது இவர் தனக்கு பிடித்த இனிப்புகள், ஐஸ்க்ரீம் என அனைத்தையும் சாப்பிட்டதாகவும், ஆனால் அதிகமாக சாப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இவருக்கு சர்க்கரை கலந்த பால் டீயை ரொம்ப பிடிக்குமாம். ஆனால் அதை முழுவதுமாக கைவிடாமல், மிதமான அளவில் எடுத்துக் கொண்டதாகவும் கூறினார்.
குஷ்பு அவர்கள் எடையைக் குறைக்க ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ததில்லையாம். மாறாக இவர் தனது கணவருடன் சேர்ந்து யோகா, தினமும் 45 நிமிடம் வாக்கிங் போன்றவற்றை மேற்கொள்வதாக மற்றொரு நேர்காணலில் கூறியிருந்தார். இவ்வாறு தான் குஷ்பு அவர்கள் 40 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து தற்போது ஸ்லிம்மாக உள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

