Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
கல்கி 2898 திரைப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் மேற்கொண்ட டயட் மற்றும் ஃபிட்னஸ் ரகசியங்கள்!
Kalki 2898 AD: பாகுபலி என்னும் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகர் தான் பிரபாஸ். ஒரு வலிமைமிக்க அரச தோற்றத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டதாலோ என்னவோ, இவருக்கு வரலாற்று திரைப்பட கதாப்பாத்திரங்கள் அனைத்துமே கச்சிதமாக பொருந்துகிறது.
அந்த வகையில் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் கல்கி 2898 ஏடி. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கல்கி திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உளளது. இந்த திரைப்படத்தில் பல முக்கியமான நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

பாகுபலிக்கு அடுத்தப்படியாக பிரபாஸ் நடித்த வேறு எந்த படங்களும் அவ்வளவு பெரிய ஹிட் ஆகவில்லை. எனவே இந்த கல்கி படத்தில் விட்டதைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பிரபாஸ் மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.
ஒவ்வொரு படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அப்படத்திற்கு ஏற்ற தோற்றத்தைப் பெற கடினமாக உழைக்கும் பிரபாஸ், கல்கி படத்திற்காகவும் ஒருசில டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
கல்கி 2898 படத்திற்காக பிரபாஸ் மேற்கொண்ட டயட்
பாகுபலி திரைப்படத்தில் நல்ல வலிமையான கட்டுடலைப் பெற கனமான உணவுகளை மேற்கொண்ட பிரபாஸ், கல்கி 2898 படத்திற்காக கனமான உணவுகளை விடுத்து, நல்ல சுத்தமான மற்றும் மெலிந்த உணவுத் திட்டத்தை மேற்கொண்டார். பிரபாஸ் போன்ற உடலைப் பெற விரும்பினால், நட்ஸ் வெண்ணெயை உணவில் சேர்க்க வேண்டும்.
முக்கியமாக சாதத்தை மறந்துவிட வேண்டும். ஏனெனில் கல்கி பட தோற்றத்திற்காக பிரபாஸ் சாதத்தையும், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை எடுப்பதையும் குறைத்துக் கொண்டார். இப்படி செய்வதனால் எடையை அதிகரிக்காமல் தசையை உருவாக்கலாம்.
குறிப்பாக பிரபாஸ் சிக்கனின் நெஞ்சுப்பகுதி, மீன் மற்றும் மெலிந்த இறைச்சிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டார். இப்படி புரோட்டீன் நிறைந்த டயட்டை மேற்கொள்ளும் போது தசைகள் நன்கு வளர்ச்சி அடைவதோடு, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, உடல் உற்சாகமாக இருக்கும்.
கல்கி 2898 படத்திற்காக பிரபாஸ் மேற்கொண்ட உடற்பயிற்சிகள்
கல்கி 2898 திரைப்படத்தில் நல்ல ஃபிட்டான மற்றும் கதாபாத்திரத்திற்கு தேவையான உடலைப் பெற டம்பெல்ஸ் கொண்டு பயிற்சிகளை செய்யாமல், தீவிரமான புஷ் அப், புல் அப், லுன்ஜஸ் மற்றும் ஸ்குவாட் போன்ற உபகரணங்கள் எதுவும் இல்லாமல் உடல் வலிமையைக் கொண்டு செய்யக்கூடிய பயிற்சிகளை அதிகம் மேற்கொண்டார்.
அதுவும் வெடிக்கும் ஆற்றலுக்கான பிளைமெட்ரிக்ஸ், முக்கிய வலிமைக்கான காலிஸ்தெனிக்ஸ் மற்றும் ஒப்பிடமுடியாத சகிப்புத்தன்மைக்கான உயர்-தீவிர இடைவெளி பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டார். இப்படியான மாற்றம் வெறும் ஜிம்மிற்கு செல்வதால மட்டும் பெற முடியாது. அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும்.
நடிகர் பிரபாஸ் கல்கி படத்திற்கான உடலமைப்பைப் பெறுவதில் முழு கவனத்தைலும் செலுத்தி, ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்து வந்தார். இவரது இந்த கடின உழைப்பிற்கான பலனாகத் தான், கல்கி படத்தில் அவர் ஒரு நல்ல மாற்றத்துடன் காணப்படுகிறார். பிரபாஸின் அர்ப்பணிப்பு வெறும் வீண்போக்கு அல்ல. இந்த ஆரோக்கியமான வாழ்க்கைமுறை அவரை உற்சாகமூட்டுகிறது மற்றும் அவரது சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.
நடிகர் பிரபாஸ் இப்படியான உடலமைப்பைப் பெற அவருடன் வழிகாட்டும் வல்லுநர்கள் இருந்தாலும், அணுகுமுறையின் சில அம்சங்களை மாற்றியமைக்க முடியும். இருப்பினும், நிலைத்தன்மையும், சுத்தமான வாழ்க்கையும் எப்போதும் ஒருவருக்கு மிகவும் முக்கியம் என்பதை மறவாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
