Latest Updates
-
நவம்பர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
மாளவ்ய ராஜயோகத்தால் அடுத்த 1 மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்! -
இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாம.. ஒருடைம் இத செய்யுங்க.. அள்ளும்.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
தக்காளியுடன் இந்த பொருட்களை சேர்த்து பஞ்சாபி ஸ்டைல் தக்காளி சட்னி அரைங்க - வேற லெவலில் இருக்கும் -
டிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களின் கனவுகள் நிறைவேறும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒருவருக்கு தவறான குரூப் இரத்தம் செலுத்தப்பட்டால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா? -
சரும வறட்சி அதிகமா ஏற்படுதா? அப்ப காய்ந்த ரோஜாப்பூ இதழை வெச்சு ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. -
இளநீரை வெட்டிய பிறகு எவ்வளவு நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்? இளநீரை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும்? -
பொய் சொல்வதில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு... உங்க ராசி எப்படி?
முளைத்த வெங்காயத்தை சாப்பிடலாமா? இதனை சாப்பிடுவது பாதுகாப்பானதா? அதை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
வெங்காயம் நீண்ட காலம் சேமிக்கும் போது அது முளைக்கத் தொடங்குகிறது. முளைத்த வெங்காயத்தை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று நீங்கள் அதனை பயன்படுத்தாமல் இருக்கிறீர்களா? ஆம் எனில் உங்களுக்கான பதிவுதான் இது.
சந்தையில் இருந்து சரியான காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலான பணியாகும், மேலும் முளைத்த காய்கறிகள் அல்லது மூலிகைகள் பொதுவாக நுகர்வுக்கு தகுதியற்றவை என்பது பொதுவான தவறான கருத்து, ஆனால் அது உண்மையா? முளைத்த வெங்காயத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முளைத்த வெங்காயம் என்றால் என்ன?
முளைத்த வெங்காயம் அடிப்படையில் வெங்காயத்தின் பல்புகளிலிருந்து வளரும் பச்சை தளிர்களாகும். சேமிக்கப்பட்ட வெங்காயம் வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு வெளிப்படும் போது இது நிகழ்கிறது. சுவாரஸ்யமாக, முளைத்த வெங்காயம் சாப்பிடுவது பாதுகாப்பானது, அவை சற்று நுட்பமான சுவை மற்றும் தனித்துவமான அமைப்பைக் கொண்டிருக்கலாம்.
சிலர் அவற்றை சமையலில் பயன்படுத்த விரும்புகிறார்கள், மற்றவர்கள் முளைத்த பகுதிகளை நிராகரித்து, வெங்காயத்தின் மீதமுள்ள பகுதியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த வெங்காயம் உண்மையில் ஆரோக்கியமானதா?
முளைத்த வெங்காயம் சத்துள்ளதா?
முளைத்த வெங்காயம், ப்ரெஷான வெங்காயத்துடன் ஒப்பிடும் போது, அதன் சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து கலவையில் ஓரளவு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. உண்மையில், சில சந்தர்ப்பங்களில் இந்த வெங்காயத்தில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் அளவு அதிகமாகவே உள்ளது.
இருப்பினும், வெங்காயத்தில் உள்ள தாதுக்கள் அப்படியே உள்ளது. முளைத்த வெங்காயம் மற்றும் அவற்றை சமையலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மேற்கொண்டு பார்க்கலாம்.
சுவை மற்றும் அமைப்பு
முளைத்த வெங்காயம் ப்ரெஷானவெங்காயத்தை விட லேசான சுவை மற்றும் மென்மையான அமைப்பைக் கொண்டிருக்கலாம். சிலருக்கு அவற்றின் சமென்மையான சுவை மிகவும் பிடித்ததாக இருக்கலாம்.
முளைத்த பகுதியை அகற்றவும்
நீங்கள் முளைத்த வெங்காயத்தைப் பயன்படுத்த திட்டமிட்டால், சமைப்பதற்கு முன் முளைகளை அகற்றலாம். முளைகள் சாப்பிடுவது பாதுகாப்பானது, ஆனால் சிலர் முளைத்த பகுதியை தூக்கி எறிந்துவிட்டு மீதமுள்ள வெங்காயத்தைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.
கெட்டுபோனதைத் தவிர்க்க வேண்டும்
வெங்காயத்தைப் பயன்படுத்துவதற்கு முன் பூஞ்சை மற்றும் அசாதாரண நாற்றம் போன்ற ஏதேனும் கெட்டுப்போன அறிகுறிகள் உள்ளதா என வெங்காயத்தைப் பரிசோதிக்கவும். வெங்காயத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால், அதை நிராகரிப்பது நல்லது.
வெங்காயம் முளைப்பதை எப்படி தவிர்க்கலாம்?
வெங்காயம் முளைப்பதைக் குறைக்க, வெங்காயத்தை குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் நல்ல காற்று சுழற்சியுடன் சேமிக்கவும். குளிர்சாதன பெட்டியில் அவற்றை சேமிப்பதை தவிர்க்கவும், ஈரப்பதம் முளைப்பதை ஊக்குவிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

