Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
ஆண்களே! 30 வயசாகிடுச்சா? நீண்ட நாள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இதெல்லாம் அடிக்கடி சாப்பிடுங்க..
International Men's Day: வயது அதிகரிக்கும் போது நமது உடல் பலவீனமாகத் தொடங்கும் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உண்ணும் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் தங்கள் அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் சிறந்தவர்கள். மேலும் பெண்களை விட ஆண்களுக்கே உயிரைப் பறிக்கும் பல நோய்களின் அபாயமும் அதிகம் உள்ளன.
குறிப்பாக 30 வயது வரை வலிமையாக இருக்கும் நாம், 30 வயதை தாண்டியதுமே உடலில் பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கிவிடுவோம். அதோடு அப்பிரச்சனையை சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், அது 40, 50 வயதுகளில் மீண்டும் தலைத்தூக்கி நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே ஆண்கள் 30 வயதை தொட்டுவிட்டால், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி சர்வதே ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, 30 வயதை எட்டிய ஆண்கள் தங்களின் வாழ்நாளை நீட்டிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
பீன்ஸ்
பீன்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் மற்றும் டயட்டிக்ஸின் படி, 30 வயதுடைய ஆண்கள் குறைந்தது 40 கிராம் நார்ச்சத்தை தினமும் உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்தானது மலச்சிக்கலைத் தடுத்து, இரத்த சர்க்கரை அளவு மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.
கீரைகள்
30 வயதை எட்டிவிட்டால், தினசரி உணவில் நற்பதமான கீரையை அவசியம் சேர்க்க வேண்டும். ஏனெனில் கீரைகளில் வைட்டமின் ஏ என்னும் சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலினுள் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
பொதுவாக 30 வயதிற்கு மேல் உடலினுள் அழற்சி அதிகமாக ஏற்படும். இத்ன் விளைவாக இதய நோய், பக்கவாதம், குறிப்பிட்ட வகையான புற்றுநோய் போன்றவற்றின் அபாயமும் அதிகரிக்கும். எனவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த கீரைகளை அதிகம் எடுக்க வேண்டியது அவசியம்.
அஸ்பாரகஸ்
ஆண்களுக்கு ஃபோலிக் அமிலம் என்னும் முக்கியமான வைட்டமின் மிகவும் இன்றியமையாதது. உடலில் போதுமான அளவு ஃபோலிக் அமிலம் இருந்தால், அது பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தைக் குறைப்பதோடு, கருவளத்தை மேம்படுத்தும் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
அஸ்பாரகஸில் ஃபோலேட் அதிகளவில் உள்ளன. இந்த ஃபோலேட் உடலினுள் ஃபோலிக் அமிலமாக மாற்றமடைந்து, இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியிலும், புதிய டிஎன்ஏ-வை உருவாக்குவதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது.
ப்ளூபெர்ரி பழங்கள்
ப்ளூபெர்ரி பழங்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன மற்றும் இவற்றில் பாலிபீனால்களும் உள்ளன. இவை உடலினுள் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவி புரிவதோடு, இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவுகிறது. எனவே இந்த மாதிரியான பழங்களை 30 வயதை எட்டிய ஆண்கள் கிடைக்கும் போது தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
செர்ரி பழங்கள்
செர்ரிப் பழங்களிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவையும் 30 வயதிற்கு மேல் உடலினுள் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது வயதான காலத்தில் ஆண், பெண் என இருபாலரையும் தாக்கும் ஒரு எலும்பு தொடர்பான நிலையாகும். தற்போது இந்த பிரச்சனை 30 வயதிலேயே தொடங்கிவிடுவதால், இதைத் தவிர்க்க செர்ரி போன்ற பழங்களை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.
உருளைக்கிழங்கு
நிறைய பேர் வயது அதிகரிக்கும் போது உருளைக்கிழங்கு உட்கொள்வதைத் தவிர்ப்பார்கள். ஆனால் உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக உள்ளன. அதுவும் ஒரு உருளைக்கிழங்கில் ஒரு வாழைப்பழத்தை விட இருமடங்கு அளவில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே பிபி பிரச்சனை வரக்கூடாதெனில் உருளைக்கிழங்கை அவ்வப்போது உணவில் சேர்த்து வர வேண்டும்.
காபி
30 வயதை எட்டிய ஆண்கள் தினமும் 1.2 கப் காபி குடிப்பது நல்லது. இதனால் பலவகையான புற்றுநோய்கள், இதய நோய், டிமென்ஷியா, கல்லீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும் காபி உடலினுள் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஆனால் காபியைக் குடிக்கும் போது சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக கருப்பட்டி, வெல்லம் போன்ற இயற்கை சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
தயிர்
ஆய்வுகளின் படி, 25-30 வயதை எட்டிவிட்டால் எலும்புகளின் உறிஞ்சும் திறன் குறைந்துவிடும். எனவே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கால்சியம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.
இப்படிப்பட்ட கால்சியம் மற்றும் வைட்டமின் கே2 தயிரில் அதிகமாக உள்ளன. இவை எலும்புகளில் கால்சியத்தை படிய செய்து, எலும்புகளை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் தயிரை 3 வயதிற்கு மேல் கட்டாயம் தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
