For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடல் புற்றுநோய் இருக்கான்னு உங்க எலும்ப பார்த்தே எப்படி கண்டுபிடிக்கலாம்?

குடலில் உண்டாகும் புற்றுநோய் எப்படி எலும்புகளுக்குப் பரவுகிறது என்பது பற்றி தான் இங்கே விவாதித்திருக்கிறோம். அதுபற்றிய ஒரு தொகுப்பு தான் இது.

|

பெருங்குடல் புற்று நோய் நம் எலும்பு களுக்கும் பரவுகிறது என்பதை உங்களால் நம்ப முடியுமா? ஆனால் இது தான் உண்மை. மெட்டாஸ்டிக் குடல் புற்றுநோய் கொண்டவர்களுக்கு இந்த அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த பெருங்குடல் புற்று நோய் அப்படியே வளர்ந்து
முதுகுத் தண்டுவடம், இடுப்பு பகுதி, கைகள் அல்லது கால்கள் போன்ற எலும்பு களுக்கும் பரவக் கூடியது.

Colon Cancer Spreads to Your Bones

கடந்த வருடங்களில் மேற்கொண்ட ஆய்வுப் படி நிறைய பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகள் இந்த பாதிப்பை அடைந்துள்ளனர். எனவே பெருங்குடல் புற்று நோய் க்கு உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம் என்று டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

எலும்புகளில் வலி

எலும்புகள் பலவீனமாகுதல் அல்லது உடைந்து போகுதல்

இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்தல்

முதுகுத்தண்டுவடத்தில் அழுத்தம்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே நீங்கள் மருத்துவரை நாடி விடுவது நல்லது.

MOST READ: இந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்

மெட்டாஸ்டிக் புற்றுநோய்

மெட்டாஸ்டிக் புற்றுநோய்

இந்த புற்றுநோய் நிலையில் எலும்புகள் பலவீனமாகி தானாகவே உடைந்து போகும். எலும்புகளில் எந்த வித அடியும் ஏற்படாமலே இந்த நிலை ஏற்படும். இந்த உடைந்த எலும்புகளை வைத்துக் கொண்டு கால்களை நகர்த்துவது, நடப்பது, கைகளை தூக்குவது எல்லாம் சிரமமாக விடும்.

முதுகுத்தண்டுவடம் பாதிப்பு

முதுகுத்தண்டுவடம் பாதிப்பு

இந்த குடல் புற்றுநோய் தண்டுவடத்திற்கும் பரவி தண்டுவடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் அங்கிருக்கும் எலும்புகள் பாதிப்படைந்து மலம் கழிக்கும் போது தீராத வலியை ஏற்படுத்துகிறது. இதை நீங்கள் உடனடியாக கவனிக்காவிட்டால் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.

மருத்துவரை அணுக வேண்டிய நேரம்

மருத்துவரை அணுக வேண்டிய நேரம்

தீராத முதுகுவலி, குடைச்சல்

நடப்பதில் சிரமம்

மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் கட்டுப்பாடின்றி செல்லுதல்

எலும்புகளில் பரவல்

இந்த குடல் புற்றுநோய் எலும்புகளில் பரவும் போது எலும்புகளில் உள்ள கால்சியம் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால்

சோர்வு

மலச்சிக்கல்

குமட்டல்

தாகம்

பசியின்மை

அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இதற்கு சிகச்சை செய்யா விட்டால் கோமாவிற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

MOST READ: சீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...

கண்டறிதல்

கண்டறிதல்

உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருந்தால் அதன் வீரியத்தை மருத்துவர் கண்டறிவார். பிறகு அது எலும்புகளில் பரவியுள்ளதா? இரத்தத்தில் கால்சியம் கலந்துள்ளதா என்பதையும் கண்டறிவார்.

எலும்புகளில் கண்டறிதல்

எக்ஸ்ரே

எலும்புகளை ஸ்கேன் செய்தல்

சிடி ஸ்கேன்

பெட் ஸ்கேன்

எம்ஆர்ஐ

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

எலும்புகளில் பரவி இருந்தால் சிகிச்சைகள் மூலம் உங்கள் வாழ்நாட்களை நீட்டுவிக்கலாம். எலும்புகள் உடைவதற்கு முன்னே சிகிச்சைகள் பெறுவது நல்லது.

எலும்புகளை பலப்படுத்த, வலியை குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படும்

கதிரியக்க தெரபி மூலம் எலும்புகளில் வலி மற்றும் எலும்புகள் உடைந்து போகும் வாய்ப்பை குறைக்கலாம்.

எலும்புகள் பலவீனமான இடத்தில் மெட்டல் ராடு (கம்பிகள்) கொண்டு சப்போர்ட் கொடுப்பார்கள். பலவீனமான எலும்பு பகுதிகளில் செயற்கை சிமெண்ட் கொண்டு வலுவேற்றுதல். கீமோதெரபி, கதிரியக்க தெரபி, சிகிச்சைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.

கால்சியம் அளவை சீராக்க

கால்சியம் அளவை சீராக்க

எலும்புகளில் உள்ள புற்றுநோய் கட்டிகளை சுருக்க சூடேற்றி அல்லது குளிர்விக்கும் சிகிச்சைகளை மேற்கொள்வர். இன்னும் புதிய நவீன சிகிச்சைகள் கண்டறிந்த வண்ணம் உள்ளனர்.

வலி நிவாரண மருந்துகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதை எடுத்துக் கொள்ளும் போது உங்களால் எளிதாக நடக்க முடியும்.

கால்சியம் அளவு பழைய நிலைக்கு வர ஆரம்பித்த பிறகு அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும்.

MOST READ: ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...

எலும்புகளை எப்படி பராமரிப்பது

எலும்புகளை எப்படி பராமரிப்பது

வாக்கர் அல்லது க்ரச்சஸ் போன்ற நடை வாகனத்தை பயன்படுத்த டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். முதுகுத் தண்டுவடத்தை காக்க பெல்ட் அணிய வலியுறுத்தப்படுகிறது. மருத்துவர்கள் சில பிஸியோதெரபி போன்ற சிகிச்சைகளையும் கொடுக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Colon Cancer Spreads to Your Bones

More people have colon cancer spread to their bones than in years past. This may be because colon cancer treatments have improved, which allows people to live longer, giving the cancer more time to go there.
Story first published: Monday, February 18, 2019, 17:33 [IST]
Desktop Bottom Promotion