For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த புல்லை தினமும் கொஞ்சம் சாப்பிட்டு வந்தா உங்க உடம்புல புது ரத்தம் பாய ஆரம்பிச்சிடுமாம்

கோதுமைப் புல் நம்முடைய ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். அது பற்றிய விளக்கமான பதிவாகத்தான் இந்த கட்டுரை இருக்கும். அது பற்றிய விரிவான தொகுப்பு தான் இது.

By Mahibala
|

இரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதை த்ரோ போசிட்டோபெனியா என்று மருத்துவ மொழியில் கூறுகின்றனர். red blood plate counts என்று நமக்குப் புரியும்படியும் சொல்லப்படுவதுண்டு. இந்த பிரச்சினையில் இயல்பாக இருக்கும் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும்.

Red Blood Cells

ஒரு இரத்த தட்டணுக்களின் வாழ்நாள் வெறும் 5-9 நாட்கள் மட்டுமே ஆகும். இது நமது உடலில் ஏராளமான எண்ணிக்கையில் காணப்படுகிறது. இவற்றின் குறைபாட்டால் தான் நமக்கு ரத்த சோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றை வீட்டிலேயே உணவின் மூலம் எப்படி சரிசெய்யலாம் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சிவப்பு அணுக்கள்

இரத்த சிவப்பு அணுக்கள்

இரத்த தட்டுகள் இரத்த செல்களில் மிகவும் சிறிய அணுக்களாகும். இது சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களை விட சிறியது. காயங்கள் ஏற்படும் போது இரத்தம் அதிகமாக வெளியேறாமல் தடுக்கவும், இரத்தம் உறைதலுக்கும் இது பயன்படுகிறது. ஒரு இரத்த தட்டணுக்களின் வாழ்நாள் வெறும் 5-9 நாட்கள் மட்டுமே ஆகும். இது நமது உடலில் ஏராளமான எண்ணிக்கையில் காணப்படுகிறது. இப்படி இந்த ரத்த தட்டுகள் வாழ்நாள் முடிய முடிய புதிய ரத்த தட்டுக்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். அதனால் புதிய ரத்த தட்டுக்கள் உருவாவதற்கான ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவது மிக அவசியமான ஒன்று.

MOST READ: பறக்கும் விமானத்தில் மனிதக் கழிவுகளை என்ன செய்வாங்க தெரியுமா? எப்பவாச்சும் யோசிச்சிருக்கீங்களா?

எதனால் குறைகிறது?

எதனால் குறைகிறது?

இரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறையும் போது நமது உடலில் அதிகளவு இரத்த இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இரத்த தட்டுகள் குறைய ஒன்று இரத்த தட்டுகள் அழிந்து விடுதல் அல்லது இரத்த தட்டுகள் உருவாகாமல் இருத்தல் இந்த இரண்டு செயல்களால் இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். இந்த இரண்டு செயல்கள் ஏற்பட கீழ்க்கண்ட காரணங்கள் காரணமாக அமைகின்றன.

விளைவுகள் என்ன?

விளைவுகள் என்ன?

அனிமியா, வைரல் தொற்று, லுகோமியா, கீமோதெரபி, அதிகமான ஆல்கஹால் உட்கொள்ளுதல், விட்டமின் பி12 பற்றாக்குறை இதனால் இரத்த தட்டுகள் குறைந்து விடும். மண்ணீரலில் இரத்த தட்டுகள் காணப்படுவது தீவிர கல்லீரல் நோய் அல்லது புற்றுநோயை குறுக்கிறது. ஐடியோபாட்டிக் த்ரோபோசிட்டோபினிக் பார்பரா, த்ரோம்போடிக் த்ரோபோசிட்டோபினிக் பார்பரா, பாக்டீரியல் தொற்று, மருந்து விளைவுகள், ஆட்டோ இம்பினியூ டிஸீஸ் (நோயெதிர்ப்பு ஆற்றல் குறைதல்) போன்றவற்றால் இரத்த தட்டுகள் உடைய ஆரம்பித்து விடும்.

எப்படி கண்டுபிடிப்பது?

எப்படி கண்டுபிடிப்பது?

இரத்த தட்டுகள் குறைவாக இருந்தால் சோர்வு, பலவீனம், வெட்டுக் காயங்களிலிருந்து நீடித்த இரத்த போக்கு, சரும வடுக்கள், சிறுநீர் மற்றும் மலம் வழியாக இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

கீழ்க்கண்ட சில வீட்டு வைத்தியங்கள் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது.

MOST READ: ஆடை அணியாமல்தான் விமானத்தில் பயணம் செய்வேனென்று ஏர்போர்ட்டில் அடம்பிடித்த நபர்...

பப்பாளி இலை

பப்பாளி இலை

2009 ஆம் ஆண்டில் ஆசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆசிய நிறுவனத்தால் மலேசியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வுப் படி பப்பாளி மற்றும் அதன் இலைகள் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது. எனவே நீங்கள் தினமும் பழுத்த பப்பாளி பழம் மற்றும் அதன் இலைகளை ஜூஸ் எடுத்து குடித்து வந்தால் உங்கள் இரத்ல தட்டுகளின் அளவு இயல்பு நிலைக்கு வரும். அதே மாதிரி பப்பாளி ஜூஸ் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வாருங்கள். இயல்பு எண்ணிக்கைக்கு வரும் வரை குடியுங்கள்.

பூசணி விதை

பூசணி விதை

பூசணிக்காய் உடலுக்கு தேவையான புரோட்டீன்களை வழங்குகிறது. இது தான் இரத்த தட்டுகள் உருவாக்கத்திற்கு மிகவும் தேவை. மேலும் பூசணிக்காயில் உள்ள விட்டமின் ஏ இரத்த தட்டுகள் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே தினமும் பூசணிக்காய் மற்றும் பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் இரத்த தட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

லெமன் ஜூஸில் விட்டமின் சி உள்ளது. இந்த விட்டமின் சி இரத்த தட்டுகளின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இதனால் இரத்த தட்டுகள் சீக்கிரம் அழிந்து போவதை தடுக்கிறது.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காயிலும் லெமனில் இருப்பதை போன்று விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோய்கள் வராமல் தடுக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காயாவது சாப்பிடுவது நல்லது. இது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. அதோடு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. ரத்த உற்பத்திக்கு அரு மருந்து இந்த நெல்லிக்காய்.

MOST READ: இந்த 5 பழக்கவழக்கமும் உங்ககிட்ட இருந்தா சீக்கிரமே செத்துடுவீங்க... இனியாவது மாத்திக்கங்க

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் இரத்த தட்டுகள் உடைவதை தடுத்து அதனள எண்ணிக்கையை உயர்த்துகிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்தாலே போதும். தீராத தொடர்ந்த ஒற்றைத் தலைவலியால் அடிக்கடி பாதிக்கப்படுவராக இருந்தால் தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் போதும். எவ்வனவு நாள் தீராத ஒற்றைத் தலைவலியும் குணமாகும்.

கோதுமை புல்

கோதுமை புல்

யுனிவர்சல் மருந்தகம் மற்றும் உயிர் விஞ்ஞானங்களின் சர்வதேச பத்திரிகையில் வெளியிடப்பட்ட முக்கிய ஆய்வில் கோதுமை புல் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது என்று கூறியுள்ளது. இதற்கு காரணம் இதிலுள்ள குளோரோபைல் மூலக்கூறுகள் வடிவமைப்பும் நமது உடலில் உள்ள ஹூமோகுளோபின் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே தொடர்ந்து தினமும் 1/2 கப் கோதுமை புல் ஜூஸ் உடன் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வாருங்கள். சுவை இல்லாமல் இருக்கிறது என்று நினைத்தால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கோதுமைப் புல்லை ஸ்பிரிங் ஆனியனைப் போல பொயாக நறுக்கி சாலட் போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிட்டு வரலாம்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையை செய்கிறது. மேலும் இது இரத்த தொற்றை தடுக்கிறது. எனவே கற்றாழை ஜூஸை எடுத்து வந்தால் தொற்றால் ஏற்படும் இரத்த தட்டுகள் குறைவை தடுக்கலாம். உடலுக்குக் குளிர்ச்சி தந்து, தேவையில்லாமல் உடல் ஆற்றல் வீணாவதைத் தடுக்கிறது.

MOST READ: முருங்கை விதையை பொடியாக்கி இதுல கலந்து சாப்பிடுங்க... சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை சரியாகும்...

கீரை

கீரை

கீரைகளில் உள்ள விட்டமின் கே இரத்தம் உறைதலில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கீரையில் இரும்புச் சத்தும் வைட்டமின் ஏ, அதேபோல் சுண்ணாம்புச் சத்தும் நிறைந்திருக்கிறது. எனவே காயங்கள் மற்றும் விபத்தால் ஏற்படும் இரத்த இழப்பை தடுக்கிறது. எனவே தினசரி கீரைகளை உணவில் சேர்த்து வந்தால் இரத்த தட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் உங்களுடைய உடலில் புதிய ரத்தம் பாய ஆரம்பித்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Wheat Grass Increase Your Red Blood Cells

Wheatgrass according to Wikipedia is a food prepared from the cotyledons of the common wheat plant, Triticum aestivum (subspecies of the family Poaceae). Some say that wheatgarss can be effective in curing cancer some say that it increases red blood cells in the human body which are essential for carrying oxygen around the body.
Desktop Bottom Promotion