For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மணிக்கட்டில் சுளுக்கிடுச்சா? வலிக்குதா? நீங்களே எப்படி சரிசெய்து கொள்ளலாம்?

மணிக்கட்டில் ஏற்படும் தீராத சுளுக்கு பிரச்சினையை எப்படி சரி செய்வது என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய வெிரிவான தொகுப்பு தான் இது.

|

மணிக்கட்டில் ஏற்படும் சுளுக்கு என்பது பொதுவாக நமக்கு அடிக்கடி ஏற்படும் காயங்கள் ஆகும். அதிலும் குறிப்பாக விளையாட்டில் இருப்பவர்களுக்கு இது அடிக்கடி ஏற்படும்.

Sprained Wrist

தீடீரென்று சமநிலை இன்றி விழப் போகும் நேரத்தில் கையை ஊன்றும் போது இந்த மாதிரியான சுளுக்கு ஏற்படும். இப்படி விளையாடும் நேரங்களில் தரையில் வேகமாக உங்கள் கைகளை ஊன்றும் போது மணிக்கட்டில் சுளுக்கு ஏற்பட்டு விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுளுக்கு

சுளுக்கு

மணிக்கட்டில் ஏற்படும் சுளுக்கால் அதிக வலி இல்லாவிட்டாலும் உங்களால் எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாது. விரல்களைக் கூட திருப்பும் போது வலிக்கும். இந்த சுருக்கென்ற வலி உங்களை அழக்கூட வைத்து விடும். இதற்கு காரணம் அந்த பகுதியில் உள்ள தசை நார்கள் விலகி விடுவதால் இந்த வலி ஏற்படுகிறது. மணிக்கட்டில் இரண்டு விதமான தசை நார்கள் உள்ளன.

இடையில் உள்ள ஸ்காபலூனேட் லெஜமென்ட் ஆகும். சில நேரங்களில் இந்த மணிக்கட்டு சுளுக்கு ஏற்படும் போது அந்த பகுதியில் உள்ள சிறிய எலும்பு இழுப்பு ஏற்படுகிறது. இந்த எலும்பு முறிவு வலியை ஏற்படுத்தும்.

MOST READ: இப்படி முடி வெடிக்குதா? தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க... ஒரே நாள்ல சரியாகிடும்...

எப்பொழுது மணிக்கட்டு சுளுக்கு ஏற்படும்?

எப்பொழுது மணிக்கட்டு சுளுக்கு ஏற்படும்?

மணிக்கட்டை சில சமயங்களில் பின்னோக்கி ஊன்றுதல் அல்லது மணிக்கட்டில் அதிக அழுத்தத்தை கொடுத்தல் அல்லது திருப்பி விடுதல் போன்ற காரணங்களால் கூட அந்த பகுதியில் சுளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

பிரச்சினையை சந்திக்கும் விளையாட்டு வீரர்கள்

பிரச்சினையை சந்திக்கும் விளையாட்டு வீரர்கள்

பேஸ்பால் பிளேயர்கள்

கூடைப்பந்து வீரர்கள்

ஜிம்னாஸ்டிக்ஸ்

ஸ்கேட்டர்ஸ்

டைவர்ஸ்

ஸ்கையர்ஸ்

இன்லைன் ஸ்கேட்டர்ஸ்

ஸ்கேட்போர்டர்ஸ்

அறிகுறிகள்

வீக்கம்

தீவிர வலி

காயங்கள்

மணிக்கட்டையே கிழிப்பது போன்ற வலி

சுளுக்கு பகுதியை சுற்றி வீக்கம்

காயம் பட்ட இடம் சூடாக இருக்கும்

சுளுக்கின் வகைகள்

சுளுக்கின் வகைகள்

நிலை 1:

தசைநார்களில் சிறியதாக பாதிப்பு ஏற்படுதல் மற்றும் லேசான வலி

நிலை 2:

முதல் நிலையை விட தீவிர தசை நார்கள் பாதிப்பு மற்றும் வலி ஏற்படுதல்

நிலை 3:

தீவிர வலி ஏற்படுதல், தசை நார்கள் கிழிந்து போதல், மணிக்கட்டின் செயல்பாடு இழப்பு ஏற்படுதல்.

MOST READ: உச்சமே வராம விறைப்பு குறைஞ்சு ஆண்கள் தவிக்கறதுக்கு என்ன காரணம்னு தெரியுமா?

கண்டறிதல்

கண்டறிதல்

உங்களுக்கு ஏற்படும் வலியை பொருத்து மருத்துவர்கள் சுளுக்கை கண்டறிவார்கள். சில நேரங்களில் ஸ்கேன் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எக்ஸ்ரே

எம்ஆர்ஐ

ஆர்த்ரோஸ்கோபி

இந்த அறுவை சிகிச்சையின் போது ஒரு சிறிய கேமரா உள்ளே சொருகப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

ஆர்த்ரோகிராம்

ஆர்த்ரோகிராம்

இந்த சிகிச்சையின் போது கலர் டையை ஊசியின் மூலம் செலுத்தி சுளுக்கு ஏற்பட்ட இடத்தை வேறுபடுத்தி அதைக் கண்டறிவார்கள்.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

மணிக்கட்டில் சுளுக்கு ஏற்பட்டால் அதை சரி செய்ய கீழ்க்கண்ட சிகிச்சைகளை நீங்கள் சரி செய்யலாம்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

சுளுக்கு ஏற்பட்ட பகுதியில் உள்ள வலியை குறைக்கவும், வீக்கத்தை குறைக்கவும் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். 20 நிமிடங்கள் என 3 மணி நேரம் இதை செய்து வரலாம். 2 நாட்களுக்கு இதை செய்து வந்தால் வலியின் தீவிரம் படிப்படியாக குறைந்து விடும்.

MOST READ: தினமும் நைட் 2 கிராம்பு சாப்பிட்டா உடம்புக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா?

ஓய்வு

ஓய்வு

மணிக்கட்டில் சுளுக்கு ஏற்பட்டால் கையை அசைக்காமல் எந்த வேலையும் செய்யாமல் குறைந்தது 48 மணி நேரம் ஓய்வெடுங்கள்.

அழுத்தம்

அழுத்தம்

சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பேண்டேஜ் போட்டு கட்டி ஒரு அழுத்தத்தை கொடுக்கலாம்.

கையை உயர்த்தி வையுங்கள்

உங்கள் மார்புக் பகுதிக்கு மேலே கையை உயர்த்தி வையுங்கள். இதற்கு தலையணை அல்லது நாற்காலியை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

வலி நிவாரணிகள்

வலி நிவாரணிகள்

ஸ்டீராய்டு இல்லாத மருந்துகளை பயன்படுத்தி வாருங்கள். நல்ல வலியை குறைக்கும். ஆனால் அதிக அளவு பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் இரத்தக் கசிவு, அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மருந்துகளை எடுப்பதற்கு முன் மருத்துவரை ஆலோசித்து கொள்வது நல்லது.

மாவுக்கட்டு

மாவுக்கட்டு

சுளுக்கு ஏற்பட்ட இடம் அதிகளவு அசையாமல் இருக்க மாவுக்கட்டு போட்டுக் கொள்ள வேண்டும். இது எவ்வளவு நாள் நீடிக்க வேண்டும் என்பதை உங்கள் மருத்துவர் கூறுவார். அதைப் பொருத்து செய்து கொள்ளலாம்.

MOST READ: நீங்க எந்த மாதம் பிறந்தீங்கனு சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற ஒரு ரகசியத்த சொல்றோம்...

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

சுளுக்கை சரி செய்ய மருத்துவரின் உதவியுடன் லேசாக உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

லேசாக மணிக்கட்டை திருப்புதல், கைகளை நீட்டுதல், மணிக்கட்டை சுழட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.

குறிப்பு

குறிப்பு

நிலை 3 பிரிவைச் சார்ந்த சுளுக்கின் தீவிரம் அதிகமாக இருக்கும். எனவே மேற்கண்ட சிகச்சைகள் அதற்கு சரி வராது. அதற்கு நீங்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது தான் நல்லது. ஏனெனில் சில நேரங்களில் அறுவை சிகிச்சைகள் கூட தேவைப்படலாம்.

பழைய நிலைக்கு திரும்புதல்

பழைய நிலைக்கு திரும்புதல்

சுளுக்கு ஏற்பட்ட தீவிரத்தை பொருத்து சீக்கிரமே நீங்கள் பழைய நிலைக்கு திரும்பி விடலாம். முழுமையாக சரியாக 2-10 வாரங்களில் சரியாகி விடும். நம்மோட உடம்பு வாகை பொருத்து சீக்கிரமே பழைய நிலைக்கு திரும்பி விடலாம்.

பழைய நிலைக்கு திரும்பி விட்டதை கீழ்க்கண்ட அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ளலாம் . அதன் பிறகு உங்கள் வேலைகளை திறம்பட செய்யலாம்.

உங்கள் மணிக்கட்டில் எந்தவித வலியும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எந்த வித வலியும் இல்லாமல் இருந்தால் மட்டுமே வேலைகளை செய்யுங்கள்

பொருட்களை எடுக்கும் போது தூக்கும் போது வலி இல்லாததை உறுதி செய்து கொள்ளுங்கள்

உங்கள் மணிக்கட்டு பழைய நிலைக்கு திரும்பி வலிமையாகி விட்டதா என்பதை அறியுங்கள்.

முழுமையாக ஆறுவதற்கு முன் அதை கவனிக்கா விட்டால் நிரந்தர பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

MOST READ: இந்த மூனு ராசிக்கு வர்ற அதிர்ஷ்டத்த பார்த்து மத்தவங்களுக்கு வயிறு எரியப் போகுது...

தடுக்கும் முறைகள்

தடுக்கும் முறைகள்

விளையாடும் போதும் நடக்கும் போதும் சரி கீழே விழாமல் பார்த்து நடங்கள். ஏனெனில் கவனக் குறைவால் தான் அதிகளவு பாதிப்பு ஏற்படும்.விளையாடும் நேரங்களில் இந்த மாதிரியான சுளுக்கை ஏற்படுவது சகஜம் தான். ஆனால் கவனமாக அதைப் கையாள்வது முக்கியம். உடனே சரியான சிகிச்சை கொண்டு சரி செய்து விட்டால் சீக்கிரமே நீங்கள் பழைய நிலைக்கு திரும்பி விடலாம்.

பிறகு உங்கள் விளையாட்டில் தங்கு தடையின்றி விளையாட முடியும். வேண்டும் என்றால் விளையாட்டு வீரர்கள் கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க மணிக்கட்டில் பேடுகளை அணிந்து கொள்ளலாம். இதனால் சிரமம் ஏற்படுவது தடுக்கப்படும். எனவே கவனத்துடன் இருப்பதும் வந்த பிறகு கவனிப்பதும் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sprained Wrist Symptoms Types Treatment

A wrist sprain is a common injury (more so for all sorts of athletes). A loss of balance is sufficient for you to slip and stick your hand out to prevent your fall. However, the moment your hand hits the ground, the force with which it hits makes it bend back towards your forearm causing a wrist sprain.
Story first published: Monday, April 8, 2019, 17:08 [IST]
Desktop Bottom Promotion