Latest Updates
-
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்!
மூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா? அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...
மூட்டுக்களில் உள்ள இணைப்புகளில் அழற்சி எப்படி ஏற்படுகிறது. என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மூட்டுப்பை அழற்சி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் உண்டாகும் ஒரு வித அழற்சி ஆகும். மூட்டுப்பை என்பது மூட்டு நீர்மம் அல்லது பசை நீர் கொண்ட ஒரு சிறு சாக்கு ஆகும். இது மூட்டு பகுதிகளில் உள்ள எலும்புகள், தசை நாண், தசைகள் ஆகியவற்றிற்கு மென்மையான உராய்வு இல்லாத செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

மூட்டுப்பை அழற்சி என்பது அபாயத்தை உண்டாக்கும் ஒரு வித பாதிப்பாக இல்லை என்றாலும், தினசரி செயல்பாட்டில் ஒரு வித அசௌகரியத்தை நம்மால் உணர முடியும். மருந்து மற்றும் போதிய ஓய்வு போன்றவற்றின் மூலம் இந்த பாதிப்பிலிருந்து வெளிவர முடியும். இந்த பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க, கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

பாதிக்கப்பட்ட இடத்தில் வலி
அழற்சி ஏற்பட்டுள்ள மூட்டு பகுதிகளில் ஒரு வித வலியை உணர முடியும். பொதுவாக இந்த மூட்டுப்பை அழற்சி தோள்பட்டை, இடுப்பு மற்றும் கை முட்டி பகுதிகளில் ஏற்படலாம். கால் மூட்டு, பாதம் மற்றும் தாடை போன்ற இடங்களிலும் சில நேரம் இந்த பாதிப்பு ஏற்படலாம். பொதுவாக பாதிக்கபட்ட இடத்தில் ஒரு சிறிய வலி ஏற்படும் , அந்த இடத்திற்கு செயல்பாடு அதிகரிக்கும்போது வலியும் அதிகரிக்கும். கடைகளில் நீங்களாகவே வாங்கும் வலி நிவாரணி மருந்துகள் மூலம் வலியில் இருந்து ஓரளவுக்கு நிவாரணம் பெற முடியும். அதுவும் அந்த மருந்தை தொடர்ந்து சில வாரங்கள் எடுத்துக் கொள்ளும்போது பலன் கிடைக்கும்.

மென்மையாக மாறுவது
மூட்டுப்பை அழற்சி ஏற்பட்ட இடத்தில் ஒரு வித மென்மைத் தன்மை உண்டாகும். அந்த இடத்தில் உராய்வு ஏற்படும்போது, ஒரு வித அசௌகரியம் உண்டாகும். குறிப்பாக இடுப்பு பகுதி மூட்டுகளில் அழற்சி ஏற்படும்போது மிகுந்த அசௌகரியம் உண்டாகலாம். வலி மிகுந்த இடுப்பு, தோள்பட்டை மற்றும் மூட்டு இருக்கும் பக்கம் படுப்பது என்பது மிகவும் சிரமமாக இருக்கும். தூங்கும்போது, உடை மாற்றும் போது மற்றும் தினசரி செயல்பாடுகளின்போதும் இந்த சிரமத்தை உணர முடியும். பொதுவாக இந்த வலி குறையும்போது, இந்த மென்மைத்தன்மையும் குறைவதாக பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அழற்சி
மூட்டுப்பை அழற்சியில் வீக்கம் என்பது பொதுவான அறிகுறியாக உள்ளது. வலி தொடங்கிய ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இந்த வீக்கம் தொடங்குகிறது. இந்த வலியின் தீவிரம் மிகவும் குறைந்து காணப்படும் என்பதால் இது குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை. தொடர்ந்து வழக்கமான செயல்பாடுகளை கவனிக்கத் தொடங்குவதால் இந்த அழற்சி மேலும் பாதிப்பு அடைகிறது. இதனால் அழற்சி அதிகரித்து, வீக்கம் வெளியில் தெரிகிறது.

இறுக்கம்
மூட்டுப்பையில் அழற்சி ஏற்பட்டு வீக்கம் அதிகரிக்கும்போது, சுற்றியுள்ள பகுதிகளில் வலி மற்றும் இறுக்கம் ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளை செயல்படவைப்பது சவாலாக இருக்கும், சில நேரங்களில் செயல்பாடுகள் முற்றிலும் தடைபடும். பாதிக்கபட்ட இடத்திற்கு எந்த ஒரு சிரமமும் கொடுக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. இதனால் அழற்சி குறைந்து, வலி கட்டுபாட்டில் வரும், உடல் செயல்பாடுகளும் மேம்படும்.

வெதுவெதுப்பு மற்றும் சிவந்து போவது
மூட்டுப்பை அழற்சியின் மற்றொரு அறிகுறி தோல் நிறம் சிவந்து போவது மற்றும் பாதிப்பு இருக்கும் பகுதியைச் சுற்றி வெதுவெதுப்பாக இருக்கும். விரல்கள் வைத்து அழுத்தும்போது சருமத்தில் காணப்படும் சிவப்பு நிறம் மறைந்துவிடும். மூட்டுப்பை அழற்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் கூறுவது, உடலில் பாதிக்கப்பட்ட அந்த இடம் மட்டும் மிகவும் சிவப்பாக இருப்பதாகவும், அந்த இடத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் கூறுகின்றனர். வீக்கம் குறையும்போது இந்த அறிகுறிகளும் அடங்குவதாக தெரிவிக்கின்றனர்.

அதிக காய்ச்சல்
தொற்று காரணமாக உண்டாகும் அழற்சி அழுகச் செய்யும் அழற்சியை உண்டாக்கும் அபாய நிலையை தோற்றுவிக்கும். மூட்டுப்பை அழற்சியின் அறிகுறிகளுடன் சேர்த்து, காய்ச்சலும் ஏற்படலாம். இந்த தொற்று பரவாமல் தடுக்கவும், காய்ச்சலைக் குறைக்கவும், மருத்துவர் அன்டிபயோடிக் மருத்துகளை பரிந்துரைப்பார. உங்களுக்கு மூட்டுப்பை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உங்களுக்கு, 100 F அளவை விட காய்ச்சல் அதிகரித்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

குளிர் மற்றும் நடுக்கம்
அழுகச் செய்யும் மூட்டுப்பை அழற்சி உள்ள நோயாளிகளுக்கு நடுக்கம், குளிர் போன்ற பாதிப்புகள் குறிப்பாக உயர் வெப்ப நிலையில் அதிகரிக்கும். அரை வெப்ப நிலை மாறாமல் இருந்தாலும், அவர்கள் உடலில் வெப்பநிலையில் மாற்றம் இருந்தபடி இருக்கும். காய்ச்சல் குறையும்போது குளிரும் குறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications