Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
சொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும்? வந்தபின் என்ன நோய் வரும்?
சொறி மற்றும் சிரங்கு ஏற்படுவதற்கு முன்பாக நம்முடைய உடலில் எந்த மாதிரியான அறிகுறிகளும் ஏற்படும் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
சொறி சிரங்கு என்பது தொற்றக்கூடிய ஒரு சரும பாதிப்பாகும். சின்ன சின்ன பூச்சிகள் அல்லது சிற்றுண்ணிகள் போன்றவை சருமத்தின் ஆழத்தில் சென்று ஊடுருவுவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது ஒரு பொதுவான பாதிப்பாகும். ஒவ்வொரு வருடமும் பலர் இந்த வகை சிரங்கால் பாதிக்கப்படுகின்றனர்.

அரிப்பை உண்டாக்கும் இந்த வகை சரும பாதிப்பை போக்குவதற்கு சில சிகிச்சைகள் உள்ளன. சிரங்கு பாதிப்பிற்கு மருந்து எடுத்துக் கொள்வதால், சிற்றுண்ணிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு உடல் நலமடைகிறது. இந்த வகை சிற்றுண்ணிகளை அழிக்க வாய் வழி மருத்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

அரிப்பு
சிரங்கின் முதல் முக்கிய அறிகுறி அரிப்பு. சிரங்கின் ஆழத்தைப் பொறுத்து அதன் அரிப்பின் தீவிரம் வேறுபடும். உடலில் சிற்றுண்ணிகள் உள்ள இடத்தில் மட்டும் அரிக்காமல் பாதிக்கப்படாத வேறு இடங்களிலும் அரிப்பு ஏற்படலாம். முதலில் ஒரு இடத்தில் அரிப்பு ஏற்படத் தொடங்கும். அந்த இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு மெதுவாகப் பரவத் தொடங்கும்.
உடலின் மற்ற பகுதிகளுக்கும் இந்த அரிப்பு பரவத் தொடங்கலாம். குறிப்பாக இரவு நேரத்தில் அரிப்பு அதிகமாக இருக்கும். சூடான நீரில் குளிப்பதால் இந்த அரிப்பு அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு. ஆகவே, சிரங்கு பாதிப்பு உள்ளவர்கள், குளிர்ந்த நீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தடிப்பு
அரிப்பு ஏற்படத் தொடங்கினால், அடுத்து அதனைத் தொடர்ந்து தடிப்புகள் உருவாகும். தொடக்கத்தில் சிவப்பு நிறத்தில் ஒரு திட்டு போல் தோன்றும் இந்த தடிப்பு உடலின் எந்த ஒரு பகுதியிலும் உண்டாகலாம். தொடை, வயிறு, அக்குள், பிட்டம் போன்ற பகுதிகளில் இந்த தடிப்புகள் பெரும்பாலும் தோன்றும்.
பெண்களின் மார்பு முளைகளில் கூட இந்த தடிப்புகள் தோன்றலாம். பொதுவாக இந்த வகை தடிப்புகள் அசாதாரண வடிவத்தில் தோன்றும். மற்ற வகை சரும பாதிப்புகளிலும் இந்த தடிப்புகள் தோன்றுவதால், இதனைக் கண்டறிவது சற்று கடினமான காரியமாகும்.

சிற்றுண்ணி வளை
சிற்றுண்ணி வளை அல்லது சுரங்கம் என்பது மனித உடலில் சருமத்திற்கு அடியில் சிற்றுண்ணிகள் ஊடுருவும் பகுதியாகும். இந்த வகை சுரங்கம் ஒன்று முதல் 10 இன்ச் அளவில் இருக்கும். இது சருமத்தில் ஒரு மெல்லிய வெள்ளை நிற கோடாக தென்படலாம் அல்லது அடர் நிறத்தில் தென்படலாம்.
இந்த வகை சுரங்கங்கள் விரல்களுக்கு இடையில், கைகளில், மணிக்கட்டின் உட்பகுதியில் என்று இறுக்கம் இல்லாத சருமம் இருக்கும் இடத்தில் தென்படலாம். இருப்பினும், உடலின் இதர பகுதிகளிலும் இந்த வகை சுரங்கம் உண்டாகலாம்.

ஏற்கனவே உள்ள சரும பாதிப்புகள்
சிரங்கு பாதிப்பு என்பது ஏற்கனவே இருக்கும் வேறு சரும பாதிப்புகளை இன்னும் மோசமடைய வைக்கலாம். உதாரணதிற்கு, சிரங்கு இருக்கும் ஒரு நபருக்கு சொரியாசிஸ் அல்லது எக்சிமா போன்ற பாதிப்புகள் இருந்தால், இந்த நிலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. இதனால் சருமம் மேலும் வறண்டு போகலாம். உங்களுக்கு சிரங்கு பாதிப்பு இருந்தால், உங்கள் சருமத்திற்கு ஒரு நல்ல மாயச்ச்சரைசர் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் நாட்பட்ட சரும பாதிப்புகளுக்கு பயன்படுத்தும் இதர மருந்துகள் மற்றும் க்ரீம்களை பயன்படுத்தலாம். சிற்றுண்ணிகள் சருமத்தை குடைந்து உள்ள சென்று மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதால், இந்த நிலை மேலும் மோசமடையும் என்பதால், மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

குமட்டல் உணர்வு
பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கு குமட்டல் ஒரு ஆரம்ப அறிகுறியாக இருப்பதால், இந்த அறிகுறியை வைத்து சிரங்கு பாதிப்பைக் கண்டறிவது கடினம். ஆனாலும் குமட்டலுடன் சேர்ந்து சிரங்கிற்கான இதர தனிப்பட்ட அறிகுறிகளும் தொடர்ந்தால் உங்கள் சிகிச்சையைத் தொடர ஆரம்பிக்கலாம்.
எந்த ஒரு உடல் பாதிப்பையும் அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது நல்லது என்பது சிரங்கிற்கும் பொருந்தும்.



Click it and Unblock the Notifications