For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா? சிவப்பு வரிகள் தெரிகிறதா? அது சாதாரண விஷயமில்லங்க...

அடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா? சிவப்பு வரிகள் தெரிகிறதா? அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம். அதுகுறித்த விளக்கமாகதொரு தொகுப்பு தான் இது.

|

இரத்த நாளத்தில் ஏற்படும் அழற்சி ஃபிளபைடிஸ் (சிரையழற்சி) என்று அழைக்கப்படுகிறது. இரத்த நாளத்தில் இரத்தம் கட்டிப்படுவதால் அழற்சி ஏற்பட்டால் அது த்ராம்போஃபிளபைடிஸ் என்றும், இரத்த நாளத்தினுள் இரத்தம் கட்டிப்பட்டால் அது ஆழ்நாள அழற்சி (டீப் வெய்ன் த்ரோம்போஸிஸ் - DVT) என்றும் கூறப்படுகிறது.

Phlebitis

ஆழ்நாள அழற்சியில் இரத்த கட்டிகள் பெரிதாகி பின்னர் உடைந்து நுரையீரலை நோக்கி பயணிக்கக்கூடும். அப்படி நடந்தால் நுரையீரல் சிரையில் இரத்தக்கட்டி அடைப்பினை ஏற்படுத்தக்கூடும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த நாள அழற்சியின் வகைகள்

இரத்த நாள அழற்சியின் வகைகள்

மேலோட்டமான அழற்சி: இரத்தக்கட்டு காரணமாக தோல் இருக்கும் பகுதிக்கு அருகே இரத்தநாளங்களில் ஏற்படும் அழற்சி மேலாட்டமான அழற்சி (சூப்பர்ஃபிஸியல் ஃபிளபைடிஸ்) எனப்படும். இதற்கு சிகிச்சை தேவை. இவ்வகை அழற்சியில் ஆபத்து அரிதுதான்.

ஆழ்நாள அழற்சி: பெரும்பாலும் இரத்தம் கட்டியாக உறைதலின் காரணமாக, உள்பக்கமாக இருக்கும் பெரிய நாளங்களில் ஏற்படும் அழற்சி. ஆழ்நாள அழற்சியில் இரத்த கட்டிகள் பெரிதாகி பின்னர் உடைந்து நுரையீரலை நோக்கி பயணிக்கக்கூடும். அப்படி நடந்தால் நுரையீரல் சிரையில் இரத்தக்கட்டி அடைப்பினை ஏற்படுத்தக்கூடும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.

MOST READ: காபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா? சிக்கரி அதிகமா இருக்கணுமா?

அழற்சி ஏன் ஏற்படுகிறது?

அழற்சி ஏன் ஏற்படுகிறது?

இரத்த நாளத்தில் ஏற்படும் காயம் அல்லது இரத்தக்குழாயின் உள்பக்க சுவரில் ஏற்படும் அரிப்பினால் இரத்த நாள அழற்சி ஏற்படுகிறது. இரத்த நாளத்தில் ஊசி அல்லது மருந்து குழாய் செருகுதல், நோய் தொற்று மற்றும் இரத்த நாளங்களில் செலுத்தப்படும் மருந்து ஒவ்வாத நிலை ஆகியவற்றால் மேலோட்டமான அழற்சி ஏற்படுகிறது.

தீவிரமான காயம், எலும்பு முறிவு மற்றும் அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் ஆழத்தில் உள்ள இரத்த நாளத்தில் காயம் ஏற்படல், வழக்கத்திற்கு மாறாக அதிக இரத்தக்கட்டிகள் உருவாதல், இணைப்பு திசுக்கள் குறைபாடு, புற்றுநோய், இரத்தம் உறைதலில் காணப்படும் பரம்பரை குறைபாடு, உடற்செயல்பாடு குறைவதால் இரத்த ஓட்டம் குறைதல் ஆகியவற்றால் ஆழ்நாள அழற்சி ஏற்படுகிறது.

இரத்த நாள அழற்சியினால் பெரும்பாலும் புஜம் என்னும் மேற்புற கை மற்றும் கால்களில் வீக்கம், சிவத்தல், இளக்கம், வெம்மை, கண்களுக்குத் தெரியக்கூடிய சிவப்பு வரிகள் ஆகிய அறிகுறிகள் காணப்படும். சில நேரங்களில் தோலின் அடியில் கயிறு தட்டுப்படுவது போன்று உணர முடியும். இரத்த நாளத்தில் இரத்தக்கட்டி அடைப்பின் காரணமாக அழற்சி ஏற்பட்டிருப்பின் கெண்டைக்கால் பின்பக்கமுள்ள தசைப்பகுதி மற்றும் தொடையில் வலி ஏற்படும்.

கருத்தடுப்பு மாத்திரைகள் அல்லது ஹார்மோன் என்னும் நொதி சிகிச்சை, இரத்தம் உறைதல் குறைபாடு, கர்ப்பம், உடல் பருமன், புகை பிடித்தல், அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், நீண்டகாலமாக உடல் செயல்பாடு இல்லாதிருத்தல், நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், அறுபதை கடந்த வயது ஆகியவை இரத்தநாள அழற்சிக்கு காரணமாகலாம்.

பின்விளைவுகள்

பின்விளைவுகள்

அழற்சி ஏற்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதியில் நோய்தொற்று, தோலில் புண்கள், இரத்த ஓட்டத்தில் நோய்தொற்று ஆகியவை ஏற்படக்கூடும். ஆழ்நாள அழற்சியின் காரணமாக, நுரையீரல் சிரையில் இரத்தக்கட்டிகள் அடைத்துக்கொள்வது ஆபத்தானது. நுரையீரல் சிரையில் இரத்தக்கட்டிகள் அடைத்துக்கொள்வதால் நெஞ்சு வலி, இருமும்போது இரத்தம் வருதல், காரணமில்லாமல் மூச்சு திணறல், மூச்சிரைத்தல், இதய துடிப்பு அதிகரித்தல் மற்றும் தலைசுற்றல் ஆகியவை ஏற்படும்.

MOST READ: இதய நோய் உள்ளவங்க என்னமாதிரி யோகா செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

இரத்த நாள அழற்சியை கண்டுபிடித்தல்

இரத்த நாள அழற்சியை கண்டுபிடித்தல்

பாதிக்கப்பட்டவர் உணரும் அறிகுறிகளின்பேரில், மருத்துவர் நேரடியாக உடலை பரிசோதித்து இரத்த நாள அழற்சி இருக்கிறதா என்பதை உறுதி செய்வார். இரத்தநாளத்தில் அழற்சிக்கு இரத்தம் கட்டிப்படுதல் முதனிலை காரணமாக இருப்பின் மருத்துவர் இன்னும் பல சோதனைகளை செய்வார்.

பாதிக்கப்பட்ட மூட்டுப்பகுதியில் ஸ்கேன் எனப்படும் அல்ட்ராசவுண்ட் சோதனையை செய்வதோடு இரத்தக்கட்டி கரையும்போது உடல் வெளியிடும் பொருளான டி-டைமர் அளவீடையும் கணக்கிடுவார்.

அல்ட்ரா சவுண்டு என்னும் ஸ்கேன் சோதனை முடிவுகளில் இரத்தக்கட்டுகள் காணப்படவில்லையெனில், வெனோகிராபி, எம்ஆர்ஐ அல்லது சி.டி போன்ற ஸ்கேன் பரிசோதனைகளுக்கு மருத்துவர் பரிந்துரைக்கக்கூடும். இரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இரத்தம் உறைதல் குறைபாட்டிற்கான சோதனைக்கு இரத்த மாதிரியினை அனுப்பி வைப்பார்.

இரத்த நாள அழற்சிக்கான சிகிச்சை

இரத்த நாள அழற்சிக்கான சிகிச்சை

மேலோட்டமாக இரத்த நாள அழற்சிக்கு வெதுவெதுப்பான ஒத்தடம், நரம்பில் மருந்து செலுத்த குத்தியிருக்கும் ஊசியை அகற்றுதல், நோய்தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்கான எதிர்மருந்து போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

ஆழ்நாள அழற்சியாக இருப்பின் இரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகள் கொடுக்கப்படும். ஆழ்நாள இரத்த அழற்சி தீவிர விளைவுகளை ஏற்படுத்தியிருப்பின் அறுவை சிகிச்சை நிபுணர் இரத்த நாளத்தினுள் விசேஷ உபகரணத்தை செலுத்தி இரத்தக்கட்டியை அகற்றுவார் அல்லது உறைந்த இரத்தத்தை அதற்குரிய மருந்துகளை செலுத்தி கரையச் செய்வார்.

ஆழ்நாள அழற்சியாக இருப்பின் நுரையீரல் இரத்தக்குழாயில் இரத்தம் உறையக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே, முதன்மை இரத்த நாளமொன்றில் கட்டியினை தடுக்கக்கூடிய அரிப்பு போன்ற தடுப்பானை செருகி சிகிச்சையளிப்பர். இந்த தடுப்பான்களை அகற்றக்கூடியன. இவை இரத்தம் உறையாமல் தடுக்கக்கூடியவை அல்ல; இரத்தக்கட்டிகள் இரத்த நாளத்தில் பயணித்து நுரையீரலை அடைவதை தடுக்கும்.

இதுபோன்ற தடுப்பான்களை நிரந்தரமாக அமைத்தால் நோய் தொற்று, இரத்தநாளங்களுக்கு பெருஞ்சேதம் மற்றும் தடுப்பானை சுற்றி இரத்த நாளம் விரிவடைதல் போன்ற பின்விளைவுகள் ஏற்படக்கூடும்.

MOST READ: பிக்பாஸ் லாஸ்லியா பத்தி A to Z தெரிஞ்சிக்கணுமா? இத படிங்க தெரியும்...

இரத்த நாள அழற்சியை தடுத்தல்

இரத்த நாள அழற்சியை தடுத்தல்

இரத்த நாளங்களை அழுத்தக்கூடிய பிரத்யேக காலுறை அணிதல், நெடுநேரம் அமர்ந்திருக்கும்போது அடிக்கடி கால்களை நீட்டுதல், பயணங்களின்போது அதிக நீர் அருந்துதல், அறுவை சிகிச்சைகள் ஏதும் செய்திருப்பின் எழுந்து நடத்தல், இரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் சாப்பிடுதல் போன்றவற்றால் இரத்த நாள அழற்சி ஏற்படுவதை தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Phlebitis: Causes, Symptoms, Diagnosis & Treatment

Phlebitis is a condition which causes inflammation of the vein. If the inflammation is caused due to a blood clot, it's called thrombophlebitis and if the blood clot is deep inside the vein, it's called deep vein thrombosis (DVT).
Story first published: Saturday, July 20, 2019, 16:34 [IST]
Desktop Bottom Promotion