Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
வெங்காயம், பூண்டை இப்படி செஞ்சு சாப்பிட்டாலே போதும்... இனி புற்றுநோய் பயமே வேண்டாம்...
பெருங்குடல் பிரச்சினையை சரிசெய்யும் உயிர் மருந்தாக வெங்காயமும் பூண்டும் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி விரிவாக இங்கே விவாதிக்கலாம்.அது பற்றி இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
நமது இந்திய சமையலை பொருத்த வரை இந்த இரண்டு பொருட்கள் இல்லாமல் சமைக்கவே மாட்டார்கள். அந்த வகையில் வெங்காயமும் பூண்டும் சமையலில் பெரும் பங்கு வகிக்க கூடிய பொருட்கள்.

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அந்த வகையில் தற்போதைய ஆராய்ச்சி படி வெங்காயமும் பூண்டும் நமக்கு ஏற்படும் பெருங்குடல் புற்று நோயை போக்க வல்லது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உணவுப் பழக்கத்தால் நிறைய பேர்கள் இந்த பெருங்குடல் புற்று நோயால் பாதிப்படைந்து வருகின்றனர்.

பெருங்குடல் புற்று நோய்
பெருங்குடல் புற்று நோய் என்பது குடலில், மலவாய் பகுதிகளில் வரக் கூடியது. இந்த புற்றுநோய் நமது பெருங்குடலை பாதிப்படைய செய்து விடும். பெண்களின் இறப்பிற்கு காரணமான இரண்டாவது புற்று நோயாகாவும், ஆண்களுக்கு மூன்றாவது புற்றுநோய் வரிசையிலும் உள்ளது.

ஆராய்ச்சிகள்
ஆசிய பசிபிக் க்ளினிக்கல் ஆன்கோலாஜி நாளிதழ் படி வெங்காயம் பூண்டு சேர்த்து வந்தவர்களுக்கு இந்த பெருங்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு 79 சதவீதம் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே வெங்காயம் பூண்டு இரண்டே போதும் நாம் நம்மை காத்துக் கொள்ளலாம் என்று சீன மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜிலி கூறுகிறார்.

தீர்வு என்ன?
இந்த ஆராய்ச்சியே பெரும் வெற்றியை பெற்று தந்துள்ளது. பெருங்குடல் புற்று நோய்க்கான ஒரு நல்ல தீர்வை இந்த ஆராய்ச்சி முடிவுகள் தந்துள்ளன என்றும் இன்னும் இது குறித்து ஆழமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பெருமிதத்துடன் ஷூலி கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சியில் கிட்டத்தட்ட 833 பெருங்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும், 833 ஆரோக்கியமான மக்களும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களை அவர்களின் வயது, வசிக்கும் பகுதிகள், பாலினம் அடிப்படையில் ஒப்பீடு செய்து பார்த்துள்ளோம்.

ஆன்டி பாக்டீரியல்
இந்த நபர்களை நேர்காணல் செய்து அவர்களின் உணவுப் பழக்கங்கள் குறித்து விவரங்களை சேகரித்து கொண்டோம். இதில் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்றால் வெங்காயம், பூண்டு உணவில் சேர்த்து வந்தவர்களுக்கு பெருங்குடல் புற்று நோய் பாதிப்பு குறைவாக இருந்தது. எனவே நமக்கு நன்மை அளிக்க இந்த இரண்டு பொருட்களைக் கையில் எடுத்தாலே போதும். இந்த இரண்டு பொருட்களில் பூஞ்சை எதிர்ப்பு சக்தி, ஆன்டி பாக்டீரியல் தன்மை போன்றவை உள்ளன.

வெங்காயம், பூண்டின் நன்மைகள்
இது நுரையீரல் புற்று நோய், மார்பக புற்று நோய், உணவுக் குழல் புற்று நோய் போன்றவற்றை குணமாக்குகிறது.
இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
சீரண சக்தியை மேம்படுத்துகிறது.
முக்கியமான உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரிக்கும் ஆற்றல் கொண்டதாக வெங்காயமும் பூண்டும் இருக்கிறது.



Click it and Unblock the Notifications
