For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டான்சில் கற்களை ஒரே வாரத்துல கரைக்கணுமா? இத தினம் கொஞ்சம் சாப்பிட்டுட்டு வாங்க...

|

டான்சில் கற்களின் தீவிர பாதிப்பைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த அறிகுறிகள் உணரப்படும்போதே எளிய தீர்வுகள் கொண்டு இதனை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

வீட்டில் உள்ள பொருட்கள் பயன்படுத்தி குறைந்த காலத்தில் டான்சில் கற்களைக் கரைப்பது பற்றி இந்த பதிவில் நாம் காணலாம். வாய் துர்நாற்றம், தொண்டை வறட்சி, காது வலி, தொண்டை வீக்கம், விழுங்குவதில் சிரமம் போன்றவை இந்த பாதிப்பின் சில அறிகுறிகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

டான்சில் கற்கள் பற்றி இதற்கு முன்னர் கேள்விப்பட்டதுண்டா? இது பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற கற்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, வாயிலிருந்து வெளியேற்றப்படாமல் இருக்கும் நச்சுகள் கால்சிய கூறுகளாக மாறி கடினத்தன்மை பெறும் நிலை தான் இந்த டான்சில் கற்கள் ஆகும். வாய் துர்நாற்றம், தொண்டை வறட்சி, காது வலி, தொண்டை வீக்கம், விழுங்குவதில் சிரமம் போன்றவை இந்த பாதிப்பின் சில அறிகுறிகளாகும்.

MOST READ: இந்த கேப்சியூல் மட்டும் இப்படி தடவினா போதும்... பொடுகு முழுசா நீங்கி முடி வேகமா வளரும்

பூண்டு

பூண்டு

டான்சில் கற்களுக்கு சிறந்த ஒரு சிகிச்சையைத் தருவது பூண்டு. பூண்டிற்கு கிருமி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது டான்சில் கற்கள் உருவாக்கத்தைத் தடுக்கிறது. மேலும், பற்குழிகள் மற்றும் பற்களில் தொற்று ஏற்படும் அபாயத்தையும் பூண்டு தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்குவதில் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது. பூண்டை தொடர்சியாக உட்கொண்டு வருவதால் தொண்டையில் உருவான டான்சில் கற்கள் மாயமாக மறைவதை உங்களால் உணர முடியும்.

காலையில் கண் விழித்தவுடன், பல் துலக்கி விட்டு, ஓரிரு பூண்டு பற்களை வாயில் போட்டு மெல்லவும். பூண்டின் மிக அதிகமான கிருமி எதிர்ப்பு பண்பு காரணமாக, வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது. டான்சில் கற்களுக்கு பூண்டு என்றென்றும் ஒரு சிறந்த தீர்வாகும். கூடுதலாக, தொடர்ந்து பூண்டு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்வதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் செயல்பாடுகள் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

எல்லா எளிய வீட்டுக் குறிப்புகளிலும், ஒப்பனைப் பொருட்களிலும் குறிப்பாக ஷாம்பூ, கண்டிஷனர் போன்ற பொருட்களில் காணப்படும் ஒரு பொருள் ஆப்பிள் சிடர் வினிகர். இந்த ஆப்பிள் சிடர் வினிகர் , டான்சில் கற்களுக்கான மற்றொரு சிறந்த தீர்வாக உள்ளது. ஆப்பிள் சிடர் வினிகர், அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகள் கொண்டிருப்பதால், வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடி, டான்சில் கற்களை உடைக்க உதவுகிறது.

ஒரு கிளாஸ் தண்ணீரில் 5-6 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து அந்த நீரைப் பருகவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைப் பின்பற்றுவதால் வாய் வழி சுகாதாரம் உறுதி செய்யப் படுகிறது. டான்சில் கற்களுடன் போராடும் ஒவ்வொருவருக்கும் ஆப்பிள் சிடர் வினிகர் ஒரு சிறப்பான தீர்வை விரைவாகத் தருகிறது.

உப்பு நீர்

உப்பு நீர்

டான்சில் கற்களுக்கு மற்றொரு எளிய தீர்வு உப்பு. தினசரி நமது உணவில் ஒரு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் உப்பு, கிருமிகளுடன் போராடி, டான்சில் கற்களைத் தடுத்து, வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வாயில் ஊற்றி நன்றாகக் கொப்பளிக்கவும். இந்த முறையை ஒரு நாளில் பல தடவை பின்பற்றவும். இந்த டான்சில் அழற்சி கரைவதற்கு கடினமாக இருந்தாலும், உப்பு இதனை எளிதில் செய்து விடுகிறது.

MOST READ: அவமான படறதெல்லாம் அல்வா சாப்பிட மாதிரி நினைக்கிற ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்

ஆரோக்கியமான வாய் வழி சுகாதாரத்திற்கான ஒரு அற்புதமான தீர்வு ஆயில் புல்லிங். இது மிகவும் எளிமையானது. பல காலமாக, ஆயுர்வேத சிகிச்சைகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையைப் பின்பற்றுவதால் கிருமிகள் அழிக்கப்படுகிறது, பற்களில் உள்ள நச்சுகள் வெளியாகிறது, டான்சில் கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

ஆயில் புல்லிங் செய்ய பெரும்பாலும் நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் பல் துலக்குவதற்கு முன்னர் ஆயில் புல்லிங் செய்யலாம். ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் எடுத்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மிக எளிதான முறையில் வாயில் கிருமிகள் வராமல் தடுக்க ஆயில் பபுல்லிங் ஒரு சிறப்பான தீர்வாகும்.

நீர்ச்சத்துடன் இருப்பது

நீர்ச்சத்துடன் இருப்பது

மனித உடல் 90% தண்ணீரால் ஆனது. நம்மில் பலர், உடல் செயல்பாட்டுக்கு தேவையான போதுமான அளவு தண்ணீர் பருகுவதில்லை. மேலும், வாயில் உண்டாகும் கிருமிகள் வளர்ச்சியைத் தடுப்பதில் உமிழ்நீர் சுரப்பு மிகவும் அவசியம் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்போது, உங்கள் வாய் குறைந்த உமிழ்நீரை சுரக்கிறது. இதனால் கிருமி தொற்று பாதிப்பு அதிகரித்து, டான்சில் கற்கள் உருவாகிறது. ஆகவே தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகி நீர்ச்சத்துடன் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இருமல்

இருமல்

இருமல் மூலமாக டான்சில் கற்களை வெளியேற்றுவது நீங்கள் நினைக்கும் அளவிற்கு எளிதான காரியம் அல்ல. ஆனால் இது ஒரு சிறப்பான முறையாகும். டான்சில் கற்களை வாயில் இருந்து வெளியேற்ற இருமல் ஒரு சிறப்பான தீர்வாகும். இருமுவதால் கற்கள் வெளியேறியவுடன், உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால், மீண்டு பக்டீரியா வாயிற்குள் புகாமல் தடுக்க முடியும்.

டான்சில் கற்களை அகற்றுவது

டான்சில் கற்களை அகற்றுவது

டான்சில் கற்கள் தொண்டையில் இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியத் தொடங்கும்போது, அது ஆரம்ப நிலையில் இருப்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும். ஆரம்ப நிலையில் உள்ள டான்சில் கற்களை பஞ்சு மூலம் எளிதாக அகற்ற முடியும். கல் இருக்கும் இடத்திற்கு அருகில் பஞ்சை வைத்துக் கொண்டு, அதன் அருகில் இருக்கும் திசுக்களை மென்மையாக தள்ளவும். இதனால் கல்லைச் சுற்றி இருக்கும் திசுக்கள் தளரும். இந்த முறையை பின்பற்றுவதற்கு முன்னர் பஞ்சை ஈரமாக்கிக் கொள்ளவும்.

MOST READ: பறக்கும் விமானத்தில் மனிதக் கழிவுகளை என்ன செய்வாங்க தெரியுமா? எப்பவாச்சும் யோசிச்சிருக்கீங்களா?

சிறுவாழூண் (ப்ரோபயோடிக்)

சிறுவாழூண் (ப்ரோபயோடிக்)

கற்களுடன் தொடர்புடைய கிருமிகளை அழிக்க ப்ரோபயோடிக்குகள் உதவுகின்றன. உங்கள் உணவில் ப்ரோபயோடிக்குகளை இணைத்துக் கொள்வதால் வாய் வழி சுகாதாரம் உறுதி செய்யப்படுகிறது. இயற்கையான யோகர்ட், ப்ரோபயோடிக்கின் சிறந்த ஆதாரமாகும். ஆட்டுப் பால், நொதித்த மோர், புளிக்க வைத்த முட்டைகோசுவால் தயாரிக்கப்பட்ட உணவு. ஆகியவற்றை கூடுதலாக இணைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Remedies For Tonsil Stones

Tonsil stones, also known as tonsilloliths, are calcified bits of debris that can get lodged in the crevices of your tonsils. They are made up of dead cells, mucus, bacteria, and food particles. Once trapped in the folds of your tonsils, they harden into yellowish stones.