Latest Updates
-
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வெயில் கொடுமையா? இந்த 4 செடிகள் இருந்தா போதும்… வீடே ஏசி போல ஜில்லுனு இருக்கும்!
பாலில் தண்ணிய தவிர வேற என்ன கலப்படம் இருக்குனு எப்படி வீட்லயே கண்டுபிடிக்கலாம்?
பாலில் தண்ணீர் கலப்பது மட்டுமில்லை. அதுதவிர, ஸ்டார்ச், யூரியா போன்ற மற்ற சில பொருள்களும் கலக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றிய தொகுப்பு தான் இது.
ஆரோக்கியம் நிறைந்த சத்தாகன உணவுப் பொருள்களில் மிகவும் முதன்மையாகக் கருதப்படுகின்ற பாலில் கலப்படம் செய்யப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பாலில் சுத்தமான தண்ணீரை தவிர வேறு எதையும் கலக்க முடியாது, அப்படி கலந்தால் பால் திரிந்து விடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இது தாடின் நாம் செய்யும் முட்டாள் தனம். நம்முடைய இதுபோன்ற அஜாக்கிரதையால் தான் நாளுக்கு நாள் ஏமாற்றுப் பேர் வழிகள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்.

பால்
பால் என்பது நம்முடைய அன்றாட உணவில் கட்டாயமாகச் சேர்க்கப்படுகிற
ஒரு ஆரோக்கிய பானம். என்ன மாதிரியான டயட்டில் இருப்பவர்களும் பாலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சமீபத்தில் அடிக்கடி பாலில் கலப்படம் இருக்கிழறது என்று அரசாங்கம் தனியார் பால் நிறுவனங்களையும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தை குறை சொல்வதுமாக இருக்கின்றன.

என்னென்ன கலக்கப்படுகிறது?
பாலில் பொதுவாக நமக்குத் தெரிந்தது தண்ணீர் தான். தண்ணீர் கலந்திருப்பதை நாம் எளிமையாகவே கண்டுபிடித்துவிட முடியும். அதைத் தாண்டி, ஸ்டார்ச், மாவுப் பொருள்கள் ஆகியவை கலக்கப்படுகின்றன. இவையும் பாலை திக்காக்குவதற்கு தான் கலக்கப்படுகிறதே தவிர இதனால் உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.
ஆனால் இப்போது கமர்ஷியலாக பால் பார்க்கப்பட்டதால் நிறைய பிரச்சினைகள் உண்டானது. மாடு நிறைய பால் கரக்க ஹார்மோன் ஊசி போடுவதில் இருந்தே பிரச்சினை ஆரம்பித்து விடுகிறது.

என்ன கெமிக்கல்கள்
பொதுவாக பாலை சில்லிங்குக்காக அனுப்பும் போது குறிப்பிட்ட நேர அளவு போக்குவரத்துக்காகவும் பேக்கிங்குக்காகவும் தேவைப்படுவதால் அந்த சமயங்களில் பாலில் கலப்படங்கள் செய்யப்படுகின்றன. பால் கெடாமல் இருக்க காஸ்டிக் சோடா, ஹெட்ரஜன் பெராக்சைடு, பார்மலின் போன்ற வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

செயற்கை பால்
கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை பெருக்கம், பால் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமான யூரியா, வெஜிடபஜிள் ஆயில், சோப் ஆகியவற்றைக் கலந்து செயற்கை பால் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டுகளில் விற்பளை செய்யப்பட்டது. இந்த முறை தமிழ்நாடு பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இல்லை. வட இந்தியாவில் அதிகமாக செய்யப்பட்டது. தென் இந்தியாவைப் பொருத்தவரையில் பெரும்பாலும் தண்ணீரும், சில்லிங்குக்காக பயன்படுத்தப்படும் கெமிக்கல்களும் இருக்கின்றனவே தவிர செயற்கை பால் கிடையாது.

வீட்டில் எப்படி கண்டுபிடிக்கலாம்?
தண்ணீர் கலந்தால் லாக்டோ மீட்டர் வைத்து வீட்டிலேயே கண்டுபிடித்து விடலாம்.
பாலை ஒரு கண்ணாடியின் மீது எடுத்து விட்டால் அது வழிந்தோடும். வழிந்தோடும் இடத்தில் தாரை உண்டாகும். அதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இதுவே மாவுப்பொருள்கள் கலந்தால் அவை தேங்கி நிற்கும். அதை வைத்து தெரிந்து கொண்டுவிட முடியும்.

ஸ்டார்ச் கலந்திருந்தால்
டிஞ்சர் அயோடின் என்று மெடிக்கல் ஷாப்களில் விற்கும். அதை பிரௌன் சொல்யூசன் என்பார்கள். அதை நாம் வாங்கி வந்த பாலை சிறிது எடுத்து அதில் இந்த டிஞ்சர் அயோடினை இரண்டு துளிகள் விட்டால் அந்த பாலோ நெய்யோ தயிரோ நீல நிறமாக மாறிவிடும். அப்படி நீல நிறமாக மாறினால் அதில் ஸ்டார்ச், மாவுப் பொருள் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

யூரியா கலந்திருந்தால்
பாலை ஒரு சிறிய கண்ணாடி டியூபில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில அரை ஸ்பூன் அளவுக்கு சோயா மாவை போட்டு கலந்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையை சிகப் லிட்மஸ் பேப்பரை எடுத்து அதில் சில துளிகள் விட்டால் அந்த லிட்மஸ் தாள் சிகப்பிலிருந்து நீலமாக மாறினால் அந்த பாலில் யூரியா கலந்திருக்கிறது என்று அர்த்தம்.

சோப்பு கலந்தால்
5 முதல் 10 மில்லி எடுத்து அதே அளவு தண்ணீரில் கலந்து நன்றாகக் குலுக்க வேண்டும். அதன் மேல்பகுதியில் லேசாக நுரை போல படிந்தால் அதில் நிச்சயம் சோப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

சிந்தடிக் பால்
இதைத் தான் செயற்கை பால் என்று சொல்கிறோம். பாலைப் போலவே கெமிக்கல்களைக் கொண்டு பால் தயாரிப்பது.
இந்த சிந்தடிக் பால் லேசான கசப்புத் தன்மையுடன் இருக்கும். விரல்களில் எடுத்து தேய்த்தால் சோப்பை போல உணர்வீர்கள். அதோடு சூடுபடுத்தும் போது அது மஞ்சள் நிறமாக இருக்கும். அதனால் பாலை ஒரு கடையிலோ ஏதோ ஒரு பிராண்டையோ வாங்கும்போது குறிப்பிட்ட இடைவெளிகளில் சோதித்துப் பாருங்கள்.

உடல் சார்ந்த பிரச்சினைகள்
கலப்படம் செய்யப்பட்ட பாலை சாப்பிடுவதால் ஜீரணக் கோளாறு, வயிற்றில் புண் வருதல், வாந்தி, கிருமிகள் தொல்லை, டயேரியா ஆகிய பிரச்சினைகள் உண்டாகும். பொதுவாக ஜீரணக் கோளாறு உண்டாவதற்கு ஏதோ வேறு காரணம் என்று நினைத்துக் கொண்டு இருப்போம். பாலும் ஒரு முக்கிய காரணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் நன்கு கொதிக்க வைத்து குடிப்பது தான் நல்லது.

வாட்ஸ்அப் தீர்வு
திருமதி அமுதா ஐஏஎஸ் அவர்கள் பாலில் கலப்படம் செய்யப்படுவதை தடுப்பதற்காக சட்டப்பூர்வமாக நுகர்வோருக்கு தீர்வு வழங்க ஒரு வாட்ஸ்அப் குரூப்பை தொடங்கியிருக்கிறார். 9444042322 என்னும் எண் தான் அது. பாலில் கலப்படம் செய்யப்படுவது தெரிந்தால் நீங்கள் அந்த எண்ணுக்கு காலோ மெசேஜாகவோ அனுப்பினால் அடுத்த நாளே இந்த இடத்துக்கு ஆட்கள் அனுப்ப்பபட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவதும் கலப்படமான பாலையே குடிப்பது நுகர்வோராகிய மக்கள் கையில் தான் இருக்கிறது.



Click it and Unblock the Notifications