For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்பைடு கல் வைத்து பழுக்காத நல்ல மாம்பழங்களை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?

By Mahibala
|

இது மாம்பழ சீசன். எங்கு பார்த்தாலும் தள்ளுவண்டிகளிலும் பழக் கடைகளிலும் மாம்பழங்கள் பளபளவென கலர் கலராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

Mangoes

அதில் நமக்கு இருக்கும் குழப்பம் என்னவென்றால் இதில் எது கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டது. எது இயற்கையானது என்று கண்டுபிடித்து வாங்கத் தெரியாமல் குழம்புவது தான். அப்படி சரியாக கண்டுபிடித்து வாங்குவதற்காகத் தான் இந்த பதிவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாம்பழம்

மாம்பழம்

எவ்வளவோ கனிகள் இருந்தாலும் மாம்பழம் தான் முக்கனிகளில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதிலிருந்தே அந்த பழத்தின் அருமையை நாம் புரிந்து கொண்டிருக்க வேண்டும். பொதுவாக ஏழைகளுக்கான உணவு என்பதும் பணக்காரர்களுக்கான உணவு என்பதும் வேறுவுறாக இருக்கிறது. ஆனால் மாம்பழ சீசனில் பாருங்கள். மாம்பழத்தை விரும்பி சாப்பிடாத ஆட்களே இருக்க முடியாது. எல்லாருடைய வீடுகளிலும் மாம்பழம் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும்.

MOST READ: இத பார்த்திருக்கீங்களா? இத சாப்பிட்டீங்கனா இதெல்லாம் உங்க உடம்புல நடக்கும்...

கார்பைடில் பழுத்த பழங்கள்

கார்பைடில் பழுத்த பழங்கள்

நம்ம தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் மாம்பழங்கள் இயற்கையாகவே வீட்டில் வைத்து பழுக்க வைத்தோ அல்லது மரத்திலேயே பழுத்ததாகவோ தான் சாப்பிடுவார்கள். ஆனால் நமக்கோ எல்லாமே அவசரம் தான். அதனால் வேகமாக பழுக்க வைப்பதற்காகவும் பார்க்க பளபளவென இருக்கவும் கடந்த பல வருடங்களாக கார்பைடு கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றன.

அதன் விளைவுகள் குறித்து அரசு எச்சரித்தும் அப்படி செய்வோர் மீதும் நடிவடிக்கை எடுத்தும்கூட தெரியாமல் அந்த வேலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எத்திலின் பரிந்துரை

எத்திலின் பரிந்துரை

இந்த நிலையில் இந்த ஆண்டு நம்முடைய அரசாங்கமே வியாபாரிகளுக்கு ஒரு புது ஐடியாவைக் கொடுத்திருக்கிறது. கார்பைடு கற்களுக்குப் பதிலாக எத்திலின் போட்டு பழங்களைப் பழுக்க வைக்கலாம். அதனால் கார்பைடு கற்களைப் போன்று கொடூரமான பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்று அரசே பரிந்துரை செய்திருக்கிறது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

எத்திலின் போட்டு பழுக்க வைத்தால் பிரச்சினை ஏதும் வராதா? என்று கேட்டால் அதற்கு எந்த பதிலும் கிடையாது. கார்பைடு போன்று கொடூரமான பிரச்சினைகள் ஏதும் வராது. கார்பைடால் நேரடியாக புற்றுநோய் ஏற்படும். இந்த எத்திலினில் வயிற்றுவலி தான் வரும் என்கிறார்கள். சரி. இப்படி ஏதாவது செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களைச் சாப்பிடுவதால் என்ன பிரச்சினை வரும் என்று பார்க்கலாம்.

MOST READ: ஓனர் திட்டினதால கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியபோன பூனை... என்ன கொண்டு வந்துச்சு தெரியுமா?

எஞ்சிய கெமிக்கல்கள்

எஞ்சிய கெமிக்கல்கள்

பழங்களைப் பழுக்க வைப்பதற்கான ஸ்பிரே செய்யப்படும் ஆர்செனிக், பாஸ்பரஸ், கால்சியம் கார்பைடு போன்றவை பழங்களுக்குள்ளும் எஞ்சியிருக்கும். அதை சாப்பிடுகிற பொழுது மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கடும் தலைவலி உண்டாகும். ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.

புற்றுநோய்

புற்றுநோய்

பழங்களை பழுக்க வைக்க மட்டுமல்ல, வேகமாக காய்ப்பதற்காக அடிக்கப்படும் மருந்துகளில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் இருக்கின்றன. அந்த மாம்பழங்களை நாம் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளும் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும்.

சிறுநீரகக் கோளாறு

சிறுநீரகக் கோளாறு

தொடர்ந்து செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களைச் சாப்பிட்டு வந்தால் லாக்டோஸ் என்னும் வேதிப்பொருளால் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்ப காலத்தில் இதுபோன்ற செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகி, அது பிரசவத்தில் கூட சிரமத்தை உண்டு பண்ணும்.

MOST READ: ஜாக்கிரதையா வாங்குங்க... இறால்ல ஜெலட்டின் ஊசிபோட்டு விக்கறாங்களாம்...

வாந்தி, மயக்கம்

வாந்தி, மயக்கம்

இதுபோன்ற கார்பைடு, எத்திலின் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் சாப்பிடுவதன் மூலம் மயக்கம், வாந்தி பேதி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். அதனால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைய ஆரம்பித்துவிடும். ஆற்றல் வீணாகும்.

நல்ல மாம்பழத்தை எப்படி கண்டுபிடிப்பது?

நல்ல மாம்பழத்தை எப்படி கண்டுபிடிப்பது?

செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் இருந்து வாசனைக்கும் இயற்கையாகப் பழுத்த மாம்பழத்தில் இருந்து வாசனையே வேறுபட்டு இருக்கும். எல்லாமே ஒரு மாம்பழம் என்று நினைத்தாலும் அந்த வேதிப்பொருள்கள் மாற்றத்தால் அது நிகழும். நன்கு பழுத்த இயற்கையான மாம்பழங்களில் இருந்து இனிப்பான, தித்திப்பு என்று சொல்வோமே அப்படியொரு வாசனை வரும். ஆனால் செயற்கையாக பழுத்த மாம்பழத்தில் அப்படி இருக்காது.

பளபளப்பு

பளபளப்பு

இயற்கையாகப் பழுக்கும் மாம்பழங்கள் நன்கு வீக்கமாக நன்கு பழுக்க பழுக்க கொஞ்சம் பளபளப்புத் தன்மை குறைந்துவிடும். பழம் நன்கு கெட்டியாக இருக்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் அதிக பளபளப்புடன் கெட்டியாக இல்லாமல் மெதுமெதுவென்று இருக்கும்.

நிறம்

நிறம்

செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் பழம் முழுக்க ஒரே மாதிரி மஞ்சள் நிறத்தில் பச்சை நிறத்தில் என்று இருக்கும். ஆனால் இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் பழம் முழுவதிலும் மஞ்சள், பச்சை, கோல்டன், சிவப்பு (ஒரே பழத்தில்) என்று எல்லா வண்ணங்களின் ஷேடுகளுமே கலந்திருக்கும்.

சீசன்

சீசன்

குறிப்பிட்ட சீசனைத் தாண்டி மற்ற சீசன்களிலும் அந்த பழங்கள் கிடைக்கிறது என்றால் அது நிச்சயம் செயற்கை வேதிப்பொருள்களால் வளர்க்கப்பட்டது என்பது உறுதி. குறிப்பாக மாம்பழங்கள் ஏப்ரல், மே மாதங்களுக்கு முன்பாக வாங்கினால் நிச்சயம் அதில் 100 சதவீதம் வேதிப்பொருள்கள் கலவை இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏப்ரல், மே மாதம் தான் மிகச்சரியான மாம்பழ சீசன்.

MOST READ: ஆக்டோபஸை உயிரோட சாப்பிட நெனச்சு அது மூஞ்ச கீறிவிட்ட கொடூரம்.. இதோ நீங்களே பாருங்க...

வேறு என்ன செய்யலாம்?

வேறு என்ன செய்யலாம்?

இந்த குழப்பமெல்லாம் நமக்கு ஆகாதுங்க. இதெல்லாம் பார்த்து கண்டுபிடிச்சு வாங்கிகிட்டு இருக்க முடியுமா? ஆனா நான் சீசன் முழுக்க மாம்பழம் சாப்பிடணும்னு நெனச்சீங்கன்னா ஒரு சூப்பர் வழி இருக்கு. அரை காயாக இருக்கும்படி வாங்கி வீட்டில் வெளிச்சம் படாத இடத்தில் துணி போட்டு மூடி வைத்துவிடுங்கள். கொஞ்சம் கொஞ்சம் பழுக்க பழுக்க எடுத்து சாப்பிடுங்கள்.

பாதி தீர்ந்தபின், அடுத்த பதத்தில் இருக்கும்படி அரை காய்களாக வாங்கிக் கொள்ளுங்கள்.

அரிசி வைத்திருக்கும் சாக்கு அல்லது பானைக்குள் ஒரு கவரில் காய்களைப் போட்டு வையுங்கள். வேகமாகப் பழுத்துவிடும். கவர் இல்லாமல் அப்படியே வைத்துவிட்டால் பழம் கனிந்து அதன் சாறு அரிசிக்குள் பட்டு, அரிசி கெட்டுப் போய்விடும். அதனால் கவரில் போட்டு வையுங்கள்.

பிறகு என்ன எந்த பயமும் இல்லாமல் சீசன் முழுக்க மாம்பழத்தை சுவைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: mango மாம்பழம்
English summary

How to Detect a Carbide Free Mangoes?

As a consumer it is very difficult wether to define mangoes which are carbide free and natural, well we have done a research and our experience is also coming along very well.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more