For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...

சில உணவுகள் சிகரெட்டால் உடலில் சேருகிற நிக்கோடினை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. அந்த உணவுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

|

தவறு என்று தெரிந்தும் நாம் சில தவுறுகளை எப்போதும் செய்து கொண்டே இருப்போம். அதில் ஒன்று புகை பிடிப்பது. "புகை பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும்", "புகை பிடிப்பது உயிரைக் கொல்லும்", "புகை பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்", என்ற வாசகங்கள் சிகரெட் பாக்கெட்டில் தென்படும், சினிமா படங்களில் தொடக்கத்தில் போடப்படும்.

Foods That Flush Out Nicotine After Smoking

இப்படி எல்லா இடங்களிலும் இந்த வாசகங்களைக் கண்டபோதும் நம்மில் பலர் இந்த பழக்கத்திற்கு அடிமையாகவே இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிகோடின் உற்பத்தி

நிகோடின் உற்பத்தி

சிகரெட் புகைக்கும்போது, நிகோடின் என்ற ரசாயனப் பொருள் உற்பத்தியாகிறது. இது விரைந்து மூளை வரை செல்கிறது. புகையிலையின் எல்லா வடிவங்களும் ஆரோக்கியத்திற்கு பாதகம் விளைவிக்கிறது. இது மூளையில் டோபமைன் என்னும் ரசாயனத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த ரசாயனம், மூளையில் நிகோடின் தேவையை அதிகரிக்க உதவுகிறது. புகை பிடிப்பதை நிறுத்துவது மிகவும் கடினமான காரியம். இது ஒரு வகை அடிமைத்தனம், மற்றும் இதனை எளிதில் கைவிடுவது கடினம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சில வகை உணவுகள், இந்த நிகொடினை உடலில் இருந்து வெளியேற்றி நச்சுகளைப் போக்க உதவுகிறது.

MOST READ: இந்த 2019 இல் எந்தெந்த நாட்களில் முடி வெட்டலாம்? எந்த நாட்களில் வெட்டக்கூடாது... தெரிஞ்சிக்கங்க

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவு. பல்வேறு நிறைந்த ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள், ப்லேவனைடு, அன்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின் சி இந்த பழத்தில் உள்ளது. இவை நுரையீரல் நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றன.

பூண்டு

பூண்டு

பூண்டில் நச்சுகளை அகற்றும் பண்பு இருப்பதால் நுரையீரலில் உள்ள நிக்கோடினை குறைக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் பூண்டு உதவுகிறது. பூண்டில் உள்ள அன்டிபயோடிக் தன்மை காரணமாக, நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள நச்சுகளை சுத்தம் செய்ய உதவுகிறது. உடலில் நச்சுகளை வெளியேற்ற உதவும் என்சைம் உற்பத்தியை அனுமதிக்கிறது, இதனால் உடலில் உள்ள நிகோடின் வடிகட்டி வெளியேற்றப்படுகிறது.

மாதுளை

மாதுளை

மாதுளையில் அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தில் உதவுகிறது, மேலும் இரத்த அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இந்த சாறு மிகுந்த பழம், உடலின் நிகோடின் எண்ணிக்கையை குறைக்கிறது. இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது பழச்சாறாகவும் பருகலாம்.

MOST READ: இந்த வருடம் அமாவாசை எந்தெந்த தேதிகளில் வருகிறது? இதோ ஃபுல் லிஸ்ட் உங்களுக்காக...

கேரட்

கேரட்

ஒவ்வொரு முறை புகையை உள்ளே இழுப்பதால் நிகோடினை நீங்கள் சுவாசிக்கிறீர்கள். இது அடுத்த 3 நாட்களுக்கு உங்கள் உடலில் தங்குகிறது. இது உங்கள் சருமம் மற்றும் உடல் உறுப்புகளை சேதம் செய்கிறது. இதனால் உங்கள் உணவில் கேரட் சேர்த்துக் கொள்வது மிகுந்த நன்மை அளிக்கிறது. கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, மற்றும் பி சத்துகள் இருப்பதால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுத்து உடலில் உள்ள நிகோடின் அளவைக் குறைக்க உதவுகிறது.

ப்ரோகோலி

ப்ரோகோலி

புகை பிடிப்பதால் வைடமின் சி சத்து உடலில் குறைகிறது. ப்ரோகோலியில் வைட்டமின் சி மற்றும் பி5 அதிகம் உள்ளது. இது வைடமின் சி சத்து உடலில் அதிகரிக்க உதவுகிறது. ப்ரோகோலி சாப்பிடுவதால் உடலில் நிகோடின் இருப்பது வெளியேற்றப்படுகிறது. காலிபிளவர், பரட்டை கீரை, நூல்கோல், முட்டைகோஸ் போன்றவையும் உடலின் நிகோடின் அளவைக் குறைக்க உதவுகின்றன.

க்ரீன் டீ

க்ரீன் டீ

குறைவாக புகை பிடிப்பவர்களுக்கு கேட்சின் என்ற அன்டி ஆக்சிடெண்ட்டை அதிக அளவில் கொடுக்க க்ரீன் டீ உதவுகிறது. கல்லீரல் செயல்பாடுகளில் ஒரு வித முன்னேற்றத்தைத் தர உதவுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது மற்றும் அழற்சியைக் குறைக்கிறது.மேலும் உடலில் நிகோடின் அளவைக் குறைத்து நச்சுகளைப் போக்கி, உடல் நலிவடைவதைத் தடுக்கிறது.

MOST READ: இந்த 2019 இல் தன் காதலை கண்டுபிடிக்கப் போகும் 5 அதிர்ஷ்டசாலி ராசிகள் எது தெரியுமா?

முடிவுரை

முடிவுரை

புகை பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் நச்சுகளைப் போக்க பல உணவுகள் உதவுகின்றன. வைட்டமின், கனிமம், அன்டி ஆக்சிடென்ட் போன்றவை சமச்சீராக இருக்கும் உணவை எடுத்துக் கொள்வதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி அதிகரிக்கிறது. மேலே கூறிய உணவுகளை ஒருவர் எடுத்துக் கொள்வதால் புகைபிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Flush Out Nicotine After Smoking

here we are talking about the Foods That Flush Out Nicotine After Smoking.
Desktop Bottom Promotion