Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
காலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா? இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்
இயற்கையாகவே ஜீரணசக்தியை அதிகரிக்கும் முறைகளை இங்கே விளக்கமாகக் கொடுத்துள்ளோம். அதற்கான நம்முடைய உணவுப்ப பழக்கத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றிய தொகுப்பு இது.
சாப்பிடுற விட கஷ்டமான விஷயம் அது நன்றாக ஜீரணிப்பது. ஜீரண சக்தி ஒழுங்காக இருந்தாலே போதும் நம் உடலுறுப்புகள் சீராக இயங்க ஆரம்பித்து விடும். ஏனெனில் சீரண செயல் மூலம் தான் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவிலிருந்து பெற முடியும். சில பேருக்கு என்ன சாப்பிட்டாலும் சீரணிச்சு விடும்.
சில பேர் சாப்பிட்டா சீரணிக்குமா என்ற சந்தேகத்தில் சரியா சாப்பிடக் கூட மாட்டார்கள். இந்த சீரண பிரச்சனை மலச்சிக்கல், உடல் ஆற்றல் குறைதல், குடல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, வயிறு மந்தம், வயிற்றெரிச்சல், வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விடும். இதனால் ஒட்டுமொத்த குடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டு ஆரோக்கியம் கெடக் கூடும்.

எடை அதிகரிக்கும்
அதுமட்டுமல்லாமல் இந்த சீரண பிரச்சனை உடல் எடையை கூட அதிகரிக்க ஆரம்பித்து விடும். உடல் எடை அதிகரிக்கும் போது எல்லா வித நோய்களும் கூட நம்மை தொற்றிக் கொள்ளும். எனவே இதை கண்டுக் கொள்ளாமல் விடக் கூடாது. சோடா போன்ற பானங்களை நீங்கள் பயன்படுத்தினாலும் இந்த சீரண பிரச்சினையை சரி செய்ய இந்த 5 இயற்கை வழிகளை கையில் எடுத்தால் போதும். எளிதாக சரி செய்து விடலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

நார்ச்சத்து அடங்கிய உணவுகள்
காய்கறிகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஆப்பிள், ப்ளம்ஸ், கீரைகள், ஓட்ஸ், நட்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் குடலியக்கத்திற்கு உதவும். மலச்சிக்கலை போக்கும். சீரண சக்தியை மேம்படுத்தும்.

நன்றாக மென்று சாப்பிடுங்கள்
அவசர அவசரமாக உணவை விழுங்காதீர்கள். நன்றாக உணவை வாயில் வைத்து பற்களால் மென்று சாப்பிடுங்கள். இப்படி உணவு அரைபடும் போது இரைப்பைக்கு வேலை எளிதாக இருக்கும். இதனால் எளிதாக உணவை அரைத்து சீரணித்து விடும். இந்த முறை உங்கள் உணவு எளிதாக சீரணிக்க உதவும். மலம் சுலபமாக வெளியேறும்.

நீர்ச்சத்து
நீர்ச்சத்து உங்கள் உடலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும். எனவே அதிக நீர் அருந்தி வரும் போது நச்சுக்களை எளிதாக வெளியேற்றுகிறது. இது மலம் கழித்தலை சுலபமாக்குகிறது. இஞ்சி டீ அல்லது நெல்லிக்காய் டீ போட்டு குடியுங்கள். மலச்சிக்கல் தீரும்.

புரோபயோடிக் உணவுகள்
புரோபயோடிக் உணவுகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை பெருக்குகிறது. இதனால் சீரண சக்தி மேம்பட்டு உடல் எடை வெகுவாக குறையும். எனவே உணவில் அடிக்கடி தயிர் சேர்த்து கொள்ளுங்கள்.

நேர நேரத்துக்கு சாப்பிடுங்கள்
சரியான நேரம் சாப்பிடுவது மிகவும் முக்கியம். நேர நேரத்துக்கு சரியாக சாப்பிடாமல் இருந்தால் சீரண பிரச்சனை ஏற்படும். எனவே மூன்று வேளையும் சரியாக சாப்பிடுங்கள். நேரம் தவறி சாப்பிடாதீர்கள். இதனால் உங்கள் உடல் மெட்டா பாலிசம் மாற்றப்பட்டு வெயிட் போட ஆரம்பித்து விடும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு நாள் சாப்பிடுகிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்காவது அதே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதைப் பின்பற்றி வாருங்கள்.
மேற்கண்ட முறைகள் மூலம் உங்கள் சீரண சக்தியை மேம்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே.



Click it and Unblock the Notifications
