For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்? தெரிஞ்சிக்கங்க...

நம்முடைய உடலில் தோன்றும் அறிகுறிகளை வைத்து என்ன மாதிரியான நோய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். அதுபற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

பொதுவாக மனித உடலுக்குள் உண்டாகும் பல்வேறு நோய்க்களுக்கும் நம்முடைய உடலே சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அப்படி நம்முடைய உடல் வெளிக்காட்டும் அறிகுறிகளை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டாலே எந்த நோயையும் மிக எளிதாக அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து தீர்வைப் பெற முடியும்.

Body Signs Indicates Some Serious Disease

அப்படி என்ன மாதிரி அறிகுறி இருந்தால் என்ன நோயாக இருக்கலாம் என்று தெரிந்து கொள்வோம். அது பற்றியதொரு விளக்கமான பதிவு தான் இந்த கட்டுரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைமுடி பிரச்சினை

தலைமுடி பிரச்சினை

உங்களுடைய முகத்தில் அடிக்கடி அரிப்பு மற்றும் லேசான எரிச்சல் ஆகியவை இருக்கிறது என்றால் உங்களுடைய தலைமுடி சுத்தமாக இல்லையென்றும் தலைமுடி பிரச்சினை, பொடுகுத் தொல்லை ஆகியவையும் இருப்பதாக அர்த்தம்.

MOST READ: மலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே!

நகங்கள்

நகங்கள்

உங்களுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சினைகள் இருந்தால் உங்களுடைய கால்கள் மற்றும் கைவிரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இல்லை என்று அர்த்தம். உடனே நகங்களை வெட்டி சுத்தம் செய்யுங்கள்.

ஜலதோஷம்

ஜலதோஷம்

உங்களுக்கு கண்களோ அல்லது மூக்கிலோ அடிக்கடி தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்கு விரைவில் ஜலதோஷம் பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.

காய்ச்சல்

காய்ச்சல்

உங்களுடைய காதுக்குள் அதீத குடைச்சலோ வலியோ இருந்தால் அது வெறுமனே காது பிரச்சினை என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது. இப்படி இருந்தால் உங்களுக்கு விரைவில் காய்ச்சல் ஏற்படப் போகிறது என்று பொருள்.

MOST READ: இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

உங்களுடைய உடலில் கை மடிப்பு, கழுத்து மடிப்புப் பகுதி, கால் இடுக்கு போன்ற பகுதிகளில் கருப்பான பட்டை போல இருந்தால் உங்களுடைய கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கிறது என்று நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறி என்றும் புரிந்து கொள்ளுங்கள்.

அதிக பசி

அதிக பசி

உடலில் அதிக இன்சுலின் சுரப்பு இருந்தாலும் அதிக அளவில் பசி எடுக்கும். அது உடலின் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை வெளிக்காட்டுகிறது.

பாதங்கள் வெடிப்பு

பாதங்கள் வெடிப்பு

உங்களுடைய கால் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால் உங்களுடைய உடலில் அதிக அளவிலான உடல் சூடும் அழுத்தமும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மூட்டுவலி

மூட்டுவலி

உங்களுடைய கால்களின் முழங்கால் மூட்டு மற்றும் கால்களின் மணிக்கட்டுப் பகுதியில் வலி எடுத்தால் உடலில் அதிக எடை கூடிவிட்டது என்றும் அதை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று அர்த்தம்.

MOST READ: இந்த காய் தெரியுமா? இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...

எலும்புத் தேய்மானம்

எலும்புத் தேய்மானம்

தொடர்ந்து முதுகுத் தண்டு அல்லது இடுப்புப்பகுதி அதிகமாக வலித்தால் அந்த பகுதியில் உள்ள இரண்டு எலும்புகளும் மிருதுவாகி, எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது என்று அர்த்தம்.

உதடு வெடிப்பு

உதடு வெடிப்பு

உங்கள் உதட்டில் அல்லது மேல் தோலில் வெடிப்பு மற்றும் பிளவு, தோல் உரிதல் ஆகியவை உண்டாகுமேயானால் உங்களுடைய உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப் பசையும் குறைந்து விட்டது என்று அர்த்தம்.

வாயுத்தொல்லை

வாயுத்தொல்லை

நம்முடைய தோள்பட்டை, முதுகுத்தண்டு, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமாகவோ வலியுடனோ இருந்தால் உங்களுடைய உடலில் காற்றின் அழுத்தம் அதிகமாகி, வாயு தேங்கியுள்ளது என்று அர்த்தம்.

MOST READ: உங்களுக்கு புடிச்ச நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரிஞ்சிக்கணுமா? இத பாருங்க தெரியும்...

இதயக்கோளாறு

இதயக்கோளாறு

உங்களுடைய கை விரல் மற்றும் கண்களுக்கு மேலே மெல்லிய கருப்புக்கோடு விழுந்தால் இதயத்தில் பிரச்சினை தொடங்கப் போகிறது என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Body Signs Indicates Some Serious Disease

Sometimes, a symptom in one part of the body may be a sign of a problem in another part of the body. Moreover, unrelated symptoms that might be minor on their own could be warning signs of a more serious medical disease or condition.
Story first published: Thursday, July 18, 2019, 11:32 [IST]
Desktop Bottom Promotion