Latest Updates
-
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
இந்த ஆறு அறிகுறி இருந்தா கட்டாயம் உங்களுக்கு புற்றுநோய் இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...
புற்றுநோய் இருப்பதற்கான சில முக்கிய குறியீடுகளைப் பற்றியும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றியும் இங்கு விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு தொகுப்பு தான் இது.
ஒரு காலத்தில் புற்றுநோய் என்று சொன்னாலே அது ரத்த வாந்தி வரும் ரத்தப்புற்றுநோய் மட்டும் தான். நாளடைவில் தான் நமக்குப் புரிய வந்தது புற்றுநோயில் ஏராளமான வகைகள் இருக்கின்றன என்றும் அது மூளையில் இருந்து வாய், தொண்டை, மார்பு, சிறுநீரகம், தோல், கல்லீரல், விதைப்பை, கர்ப்பப்பை என எல்லா உறுப்புகளையும் தாக்கக் கூடிய ஒரு கொடி நோய் தான் புற்றுநோய்.

அதேபோல் அதற்கேற்ற சிகிச்சைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

புற்றுநோய் வகைகள்
புற்றுநோயில் பல வகைகள் உண்டு. அவை மூளையில் கூட வருவதாக சமீபத்திய ஆய்வுகள் சில குறிப்பிடுகின்றன. அதைத் தாண்டி, எலும்புப் புற்றுநோய், மார்புப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், விதைப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும். அதே அளவுக்கு அதற்குரிய சிகிச்சை முறைகளும் அதிக அளவில் வந்து கொண்டே தான் இருக்கின்றன.

எப்படி கண்டுபிடிக்கலாம்?
பொதுவாக நம்முடைய உடலுக்குள் புற்றுநோய் செல்களின் தாக்கங்கள் இருப்பதை மருத்துவமனைக்குச் சென்று கண்டுபிடிப்பதற்கு முன்னால் நம்மால் எப்படி கண்டுபிடிக்க முடிக்கும் என்று நீங்கள் கேட்கும் கேள்வி நியாயம் தான். இருந்தாலும் ஒவ்வொரு நோய்க்கிருமியும் நம்முடைய உடலைத் தாக்குகின்ற பொழுது, சில அறிகுறிகளை நம்முடைய உடல் வெளிப்படுத்தும். அப்படி நம்முடைய உடலில் புற்றுநோய் செல்கள் பரவி இருப்பதை எப்படி நாம் கண்டுபிடிப்பது. அதற்கான அறிகுறிகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

திடீர் எடை குறைவு
நீங்கள் உடல் எடை குறைவதற்கான முயற்சிகளை எடுத்து சிரமப்பட்டு குறைப்பது என்பது வேறு. ஆனால் குறிப்பிட்ட அளவைத் தாண்டி, ஏறக்குறைய காரணமே இல்லாமல் திடீரென எடை குறைந்தால் அதற்கு என்ன காரணமாக இருக்கும்? உங்களுடைய உடற்பயிற்சி, உணவு என எந்த விஷயத்திலும் மாற்றங்கள் இல்லாத போது ஒரு சில வாரங்களில் 10 கிலோவுக்கு மேல் குறைந்தால் முதலில் அருகில் உள்ள மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

சரும மாற்றங்கள்
புற்றுநோய் அறிகுறிகளில் மிக முக்கியமான ஒன்று இந்த சரும மாற்றங்கள். குறிப்பாக தோல் புற்றுநோயை இந்த அறிகுறிகள் வைத்து எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். மச்சங்கள், தழும்புகள் என எதுவாக இருந்தாலும் திடீரென சருமங்களில் மாற்றங்கள் இருந்தால் அதை எளிதாக நினைக்கக்கூடாது. சில சமயங்களில் உங்களுடைய சருமங்கள் மஞ்சளாகவோ தடித்து சிவப்பு நிறத்திலோ அல்லது தடிமனான சரும திட்டுக்களாகவோ தெரிந்தால் அதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இது தோல் சருமப் புற்றுநோய்க்கான காரணங்களில் மிக முக்கியமான ஒன்று. அதனால் ஒருமுறைக்கு இரண்டு முறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

தீராத வலி
வயிற்றுப் புற்றநோயின் மிக முக்கிய அறிகுறியே தீராத வயிற்றுவலி தான். இது வயிற்றுப் புற்றுநோய்க்கு மட்டுமல்ல. பாதிகக்ப்பட்ட எந்த பகுதியாக இருநு்தாலும் அந்த பககுதியில் குறிப்பிட்ட சில நாட்களைத் தாண்டியும் தொடர்ந்து அந்த இடத்தில் வலி நீடித்தால் முதலில் எல்லா வுலையையும் விட்டு விட்டு மருத்துவரை நாடிச் செல்லுங்கள். குறிப்பாக எலும்பு, மூளை, கர்ப்பப்பை போன்ற புற்றுநுாய் வகைகளை முதலில் அந்தந்த இடங்களில் ஏற்படுகிற வலியை வைத்து தான் இணங்கான முடியும். சில புற்றுநோய்கள் வலியே தெரியாமல் கூட இருக்கலாம்.

புண் அல்லது கொப்புளங்கள்
வாய்ப் புற்றுநோயைப் பொருத்தவரையில் வாய்ப்பகுதியல் கொப்புளங்கள் மற்றும் புண்களாக காணப்படும். பொதுவாக இவை நோயெதிர்ப்பு மண்டலத்தையுமு் பலவீனப்படுத்தும். வாய்ப்புற்றுநோயைப் பொருத்தவரையில் வெளிப்புறத்தில் ஏற்படும் அறிகுறிகளை வைத்தே எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

திடீர் ரத்தப்போக்கு
பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போது இருமும் போது ரத்தம் வந்தாலோ அல்லது பெண்கள் மாதவிலக்கில் வழக்கம்போல் நார்மலாக இல்லாமல் உதிரப்போக்கு அதிகமாக இருந்தாலோ மருத்துவ ஆலோசனை மிக மிக அவசியம். குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் தொற்று இருந்தால் அது இருமல் வரும்போது அப்படியே உங்கள் உடலில் பரவ ஆரம்பிக்கலாம். பொதுவாக உடலில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுகிற போது முதலில் உடனடியாக மருத்துவரை பார்ப்பது தான் தேவையில்லாத சந்தேகத்தையும் பிரச்சினையையும் குறைக்கும்.

மலம் கழிப்பது
மலம் கழிப்பதில் ஏதேனும் மாற்றங்கள் அவ்வப்போது நிகழத் தான் செய்யும். அது நாம் உண்ணுகின்ற உணவுப் பொருள்களைப் பொருத்து மாறக்கூடியது. ஆனா்ல இதுவே தண்ணியாகப் போகிறது, மலம் கழிக்கிற போது தீராத வலி ஏற்படுகிறது போன்ற பிரச்சினைகள் இருந்தால் அதை சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications